சேமிப்பு கணக்கில் பணம் டெபாசிட் செய்யும் வரம்பு இதுதான்... மீறினால் நோட்டீஸ்!! ஜாக்கிரதை!

Cash Deposit in Savings Account: வருமான வரி சட்டங்களில் (Income Tax Act) கொடுக்கப்பட்டுள்ள விதிகளின்படி பண பரிவர்த்தனைகள் (Cash Transactions) சார்ந்த சில விதிமுறைகள் உள்ளன. இதில் பண வைப்புகளும் அடங்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 5, 2024, 02:20 PM IST
  • வங்கி சேமிப்பு கணக்குகளில் சேமித்து வைக்கும் பணத்திற்கும் வரம்பு உண்டா?
  • நமக்கு வேண்டிய அளவிற்கு நமது சேமிப்பு கணக்குகளில் நாம் பணத்தை டெபாசிட் செய்ய முடியாதா?
  • அப்படி டெபாசிட் செய்தால் வருமான வரி நோட்டீஸ் வருமா?
சேமிப்பு கணக்கில் பணம் டெபாசிட் செய்யும் வரம்பு இதுதான்... மீறினால் நோட்டீஸ்!! ஜாக்கிரதை! title=

Cash Deposit in Savings Account: இன்றைய காலகட்டத்தில் நம்மில் பெரும்பாலானோருக்கு வங்கி கணக்கு உள்ளது. மக்கள் பணத்தை சேமித்து வைக்க வங்கிகளில் சேமிப்பு கணக்குகளை தொடங்குகிறார்கள். எனினும் சேமிப்பு கணக்குகளுக்கு என்றும் சில விதிகள் உள்ளன. இவற்றைப் பற்றியும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். சேமிப்பு கணக்குகளுக்கான ஒரு முக்கியமான விதியை பற்றி இந்த பதிவில் காணலாம்.

சேமிப்பு கணக்குகளுக்கான வரம்பு (Savings Account Limit)

வங்கி சேமிப்பு கணக்குகளில் (Savings Account) சேமித்து வைக்கும் பணத்திற்கும் வரம்பு உண்டா? நமக்கு வேண்டிய அளவிற்கு நமது சேமிப்பு கணக்குகளில் நாம் பணத்தை டெபாசிட் செய்ய முடியாதா? அப்படி டெபாசிட் செய்தால் வருமான வரி நோட்டீஸ் வருமா (Income Tax Notice)? சேமிப்பு கணக்கு வரம்பு என்றால் என்ன? ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்களுடைய சேமிப்பு கணக்கில் எந்த அளவு தொகையை டெபாசிட் செய்யலாம் என்பதற்கான வரம்பே பண வைப்பு வரம்பு (Cash Deposit Limit) என்று அழைக்கப்படுகிறது. இந்த வரம்பை தாண்டிய தொகையை ஒருவர் டெபாசிட் செய்தால் அது வரித்துறை அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும். பணப்பரிவர்த்தனைகளை ஒழுங்குபடுத்தவும் கண்காணிக்கவும் இந்த வருமான வரி விதிகள் உள்ளன. இந்த கண்காணிப்புகளின் மூலம் மோசடி மற்றும் சட்ட விரோத நிதி நடவடிக்கைகள் தடுக்கப்படுகின்றன.

வருமான வரி சட்டம்

வருமான வரி சட்டங்களில் (Income Tax Act) கொடுக்கப்பட்டுள்ள விதிகளின்படி பண பரிவர்த்தனைகள் (Cash Transactions) சார்ந்த சில விதிமுறைகள் உள்ளன. இதில் பண வைப்புகளும் அடங்கும். சேமிப்பு கணக்குகளில் டெபாசிட் செய்யும் தனி நபர்கள் ஒரு ஆண்டில் டெபாசிட்டுகளின் மூலம் கணக்குகளில் 10 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேலான தொகையை சேர்த்தால் அது வரி அதிகாரிகளுக்கு (Tax Authorities) தெரிவிக்கப்பட வேண்டும். நடப்பு கணக்கு (Current Account) வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த வரம்பு 50 லட்சம் ரூபாய் ஆகும்.

சேமிப்பு கணக்கு தொகைக்கு வரி விதிக்கப்படுமா?

சேமிப்பு கணக்குகளின் குறிப்பிட்ட தொகைக்கு மேல் டெபாசிட் (Cash Deposit) செய்தால் அந்த தொகைக்கு வரி விதிக்கப்படுமா என்பது பலரது கேள்வியாக உள்ளது. சேமிப்பு கணக்குகளில் வரம்பை மீறி டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு உடனடியாக வரி விதிக்கப்படாது என்றாலும் பரிவர்த்தனைகளை பற்றிய அறிவிப்பை கொடுக்க வேண்டியது நிதி நிறுவனங்களின் கடமையாக பார்க்கப்படுகிறது.

பணம் சேமிப்பதற்கு அதாவது டெபாசிட் செய்வதற்கு மட்டும்தான் விதிகள் உண்டா? பணத்தை எடுப்பதற்கும் வருமான வரி (Income Tax) துறையின் விதிகள் ஏதாவது இருக்கின்றனவா? இந்த கேள்வியும் பலருக்கு உள்ளது. பணத்தை திரும்ப எடுப்பதற்கான (Cash Withdrawal) பல்வேறு விதிகளை பற்றி இங்கே காணலாம்.

மேலும் படிக்க | FD: மூத்த குடி மக்களுக்கு அதிக வட்டி தரும் டாப் 5 வங்கிகள்!

பிரிவு 194N

பணத்தை கணக்கில் இருந்து திரும்ப எடுப்பதற்கான விதைகளை பொருத்தவரை மூலத்தில் கழிக்கப்பட்ட வரி அதாவது TDS பற்றி வருமான வரி சட்டத்தின் Section 194N -இல் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நிதியாண்டில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை எடுப்பவர்களுக்கு 2 சதவிகித TDS கழிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. 3 ஆண்டுகளாக வருமான வரி தாக்கல் (Income Tax Return) செய்யாத தனி நபர்கள் 20 லட்சத்திற்கு மேலாக தங்கள் கணக்கிலிருந்து பணத்தை வித்டிரா செய்தால் 2 சதவிகித TDS கழிக்கப்படும். மூன்று ஆண்டுகளாக வருமான வரி தாக்கல் செய்யாத நபர்கள் தங்கள் கணக்குகளில் இருந்து ஒரு நிதி ஆண்டில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வித்ட்ரா செய்தால் 5% TDS கழிக்கப்படும். 

பிரிவு 269ST 

ஒரு ஆண்டில் இரண்டு லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் ரொக்கமாக பெற்ற தனி நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதங்கள் பற்றி வருமான வரி சட்டத்தின் Section 269ST -இல் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் வங்கிக் கணக்கில் (Bank Account) இருந்து எடுக்கப்படும் பணத்திற்கு இது பொருந்தாது. குறிப்பிடப்பட்ட வரம்புகளுக்கு மீறிய வித்ட்ராயல்களுக்கு TDS கழிக்கப்படும்.

பிரிவு269SS மற்றும் பிரிவு 269T

வருமான வரி சட்டத்தின் 269SS மற்றும் 269T ஆகியவை ரொக்க கடன்களுக்கானவை. ஆண்டில் 20,000 ரூபாய்க்கு மேல் ரொக்கமாக கடன் பெறுவதற்கோ அல்லது திருப்பி செலுத்துவதற்கோ அபராதம் விதிக்கப்படலாம்.

வருமான வரி சட்டத்தின் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பற்றி தெரிந்து வைத்திருப்பதும், இவற்றில் ஏற்படும் புதுப்பிப்புகளைப் பற்றி அறிந்து வைத்திருப்பதும் அவசியமாகும். சரியான முறையில் பணப்பரிவர்த்தனைகளை செய்வதற்கும் வருமான வரி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை மீறாமல் இருப்பதற்கும் இது உதவியாக இருக்கும். இந்த விதிகளை பற்றிய புரிதல் நமக்கு இருந்தால் கவனக்குறைவால் நமக்கு விதிக்கப்படும் அபராதங்களையும் நமக்குத் தெரியாமல் நாம் செய்யும் வருமான வரி விதி மீறல்களையும் நாம் தவிர்க்கலாம்.

மேலும் படிக்க | SBI Loss: இந்த நிதியாண்டின் 3வது காலாண்டில் எஸ்பிஐயின் நிகர லாபம் 35% சரிவு! காரணம் என்ன?

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News