SSY: உங்கள் செல்ல மகளை செல்வ மகளாக்கும் சூப்பர் திட்டம்.... இன்றே முதலீடு செய்யுங்கள்

Sukanya Samriddhi Yojana: சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் ஒரு சிறு சேமிப்பு திட்டமாகும். இங்கு ரூ. 12,500 மாதாந்திர முதலீடு செய்தால், அது முதிர்ச்சியின் போது ரூ.70 லட்சம் கார்பஸை உருவாக்க உதவும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 11, 2024, 05:29 PM IST
  • SSY என்பது பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்தை இலக்காகக் கொண்ட ஒரு சிறு சேமிப்பு திட்டமாகும்.
  • SSY திட்டத்தில் ஆண்டுதோறும் கணக்கிடப்பட்டு 8.2 சதவீத வட்டி கிடைக்கிறது.
  • ஒரு நிதியாண்டில் அதிகபட்ச டெபாசிட் வரம்பு ரூ.1.50 லட்சம் ஆகும்.
SSY: உங்கள் செல்ல மகளை செல்வ மகளாக்கும் சூப்பர் திட்டம்.... இன்றே முதலீடு செய்யுங்கள் title=

Sukanya Samriddhi Yojana: மாறிவரும் இந்த காலகட்டத்தில், இந்தியாவில் உள்ள பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளுக்காக பெரிய கனவுகளை காண்கிறார்கள். அவர்களைப் படிக்கவைத்து போட்டி நிறைந்த இந்த உலகில் தங்கள் சொந்த காலில் நிற்க வைக்க விரும்புகிறார்கள். இது தவிர, தங்கள் பெண் குழந்தைகளின் திருமணத்திற்காக பணத்தை சேமித்து வைக்கும் பொறுப்பும் அவர்களுக்கு உள்ளது. இருப்பினும், இரண்டு நோக்கங்களுக்கும் ஒரு பெரிய அளவு பணம் தேவைப்படுகிறது. உங்கள் பெண் குழந்தையின் சிறு வயதிலிருந்தே உங்கள் முதலீடுகளை கவனமாகத் திட்டமிட்டால் இந்தத் தொகையை நீங்கள் எளிதாக ஏற்பாடு செய்யலாம்.

ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய மற்றும் வழக்கமான முதலீடு செய்தால், எதிர்காலத்தில் ஒரு பெரிய தொகையை சேமிக்க அது உதவும். பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண நோக்கத்திற்காக, அரசாங்கம் வரிச் சலுகைகள், கூட்டு வட்டி மற்றும் உரிய வயதில் உங்கள் மகளுக்கு ஒரு பெரிய தொகையை வழங்கும் திட்டத்தை நடத்துகிறது.

சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் ஒரு சிறு சேமிப்பு திட்டமாகும். இங்கு ரூ. 12,500 மாதாந்திர முதலீடு செய்தால், அது முதிர்ச்சியின் போது ரூ.70 லட்சம் கார்பஸை உருவாக்க உதவும். இந்த நிதியை உங்கள் மகளுக்கு தரமான கல்வியை வழங்கவும் அல்லது அவரது திருமணத்திற்கு உதவவும் பயன்படுத்தப்படலாம்.

SSY திட்டத்தின் மூலம், முதிர்ச்சியின் போது ரூ. 70 லட்சத்தை எவ்வாறு பெறுவது என்பது குறித்த கணக்கீடுகளை இந்த பதிவில் காணலாம். ஆனால் அதற்கு முன், அடிப்படை அம்சங்கள், முதலீட்டுத் தகுதிக்கான அளவுகோல்கள் மற்றும் திட்டத்தைப் பற்றிய பிற முக்கிய விவரங்களை அறிந்து கொள்வது அவசியமாகும். 

மேலும் படிக்க | வீட்டுக் கடன் வாங்கியவர்களின் கடன் சுமையை குறைக்க சுலபமான வழிகள்! டோண்ட் மிஸ்!

சுகன்யா சம்ரித்தி யோஜனா என்றால் என்ன?

- சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்பது பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்தை இலக்காகக் கொண்ட ஒரு சிறு சேமிப்பு திட்டமாகும் (Small Saving Scheme).
- அஞ்சல் அலுவலக SSY திட்டத்தில் ஆண்டுதோறும் கணக்கிடப்பட்டு 8.2 சதவீத வட்டி கிடைக்கிறது.
- பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் 10 வயதுக்குட்பட்ட மகளின் பெயரில் SSY கணக்கைத் தொடங்கலாம். ஒரு நிதியாண்டில் இதன் குறைந்தபட்ச முதலீடு 250 ரூபாயாகும்.  
- ஒரு நிதியாண்டில் அதிகபட்ச டெபாசிட் வரம்பு ரூ.1.50 லட்சம்ஆகும்.
- ஒரு மாதம் அல்லது ஒரு நிதியாண்டில் ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம்.
- திட்டத்திற்கான லாக்-இன் காலம் 15 ஆண்டுகள் ஆகும்.
- 15 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு, பெண் 18 வயதை எட்டிய பிறகு அல்லது 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, பணத்தை எடுக்கலாம். 
- கணக்கு துவங்கிய நாளிலிருந்து 21 ஆண்டுகளுக்குப் பிறகு அல்லது 18 வயதை எட்டிய பின், பெண்ணின் திருமணத்தின் போது கணக்கு முடிக்கப்படலாம்.

70 லட்சம் பெறுவதற்கான கணக்கீடு

- உங்கள் மகளுக்கு ரூ.70 லட்சம் கார்பஸ் தொகையை நீங்கள் இலக்காகக் கொண்டிருந்தால், மாதம் ரூ.12,500 அல்லது ஒரு நிதியாண்டில் ரூ.1,50,000 முதலீடு செய்ய வேண்டும்.

- 15 ஆண்டுகளில் உங்கள் மொத்த முதலீடு ரூ.22,50,000 ஆக இருக்கும்.

- 8.20 சதவீத வட்டி விகிதத்தில் உங்களுக்கு ரூ.46,77,578 வருமானம் கிடைக்கும்.

- அதாவது முதிர்ச்சியின் போது நீங்கள் மொத்தம் ரூ.69,27,578 அதாவது தோராயமாக ரூ.70 லட்சம் பெறுவீர்கள்.

மேலும் படிக்க | 7.75% வரை வட்டி தரும் HDFC வங்கி! எந்தத் தொகைக்கு எவ்வளவு வட்டி உயர்ந்தது? லேட்டஸ்ட் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News