பங்குச்சந்தை மீண்டும் உச்சத்தைத் தொடும்! நிஃப்டி குறியீடு 19800 தொடுமா? நிபுணர்கள் கணிப்பு

Weekly Sensex Predcition: மும்பை பங்குச்சந்தையில் வரும் வாரம் நிஃப்டி குறியீடு 19800 தொடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். நிஃப்டி முதல் முறையாக 19500க்கு மேல் முடிவடைந்துள்ளது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 16, 2023, 02:29 PM IST
  • மும்பை பங்குச்சந்தை எதிர்வரும் வாரத்தில் எப்படி இருக்கும்?
  • நிஃப்டி குறியீடு 19800 தொடும் என்று நிபுணர்கள் கணிப்பு
  • பங்குச்சந்தை அவதானிப்பும், முதலீட்டுக்கான பரிந்துரையும்
பங்குச்சந்தை மீண்டும் உச்சத்தைத் தொடும்! நிஃப்டி குறியீடு 19800 தொடுமா? நிபுணர்கள் கணிப்பு title=

மும்பை: பங்குச்சந்தையில் கடந்த சில நாட்களாக சர்வதேச முதலீட்டாளர்களின் முதலீடு வரத்து அதிகமானதால், சென்செக்ஸ் குறியீடு வரலாற்று உச்சத்தை தொட்டு உள்ளது. தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி வரும் வேளையில் மும்பை பங்குச்சந்தையில் வரும் வாரம் நிஃப்டி குறியீடு 19800 தொடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். நிஃப்டி முதல் முறையாக 19500க்கு மேல் முடிவடைந்துள்ளது.

வரும் வாரத்தில் எந்த நிறுவனத்தின் பங்குகளில் செய்யும் முதலீடு கணிசமான வருவாயைப் பெற்றுத் தரும்? என பங்குச்சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். அதைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். இந்த வாரம் ஹெச்டிஎப்சி வங்கி, ஹெச்யுஎல், இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்கு விலை அதிகரிக்கலாம்.

முதல் காலாண்டின் முடிவுகளுக்குப் பிறகு, கடந்த வாரம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜி போன்ற ஐடி பங்குகளில் பெரும் ஏற்றம் ஏற்பட்டது. ஒட்டுமொத்த ஐடி குறியீட்டின் வலிமை சந்தையை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றது. இந்த வாரத்தில், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹெச்யுஎல், இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ் போன்ற பிரபலமான நிறுவனங்களின் தாக்கம் பங்குச்சந்தையில் அதிகமாக இருக்கும்.

மேலும் படிக்க | Top 5 Shares: உச்சத்தைத் தொடும் பங்கு விலைகள்! முதலீடு செய்ய ஏற்ற டாப் 5 பங்குகள்

இவற்றைத் தவிர, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, இண்டஸ்இண்ட் வங்கி, அசோக் லேலண்ட், டிஎல்எஃப், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஹிந்துஸ்தான் ஜிங்க் போன்ற நிறுவனங்களும் 2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான முடிவுகளை வெளியிடும்.
 
நிஃப்டி முதல் முறையாக 19500க்கு மேல் முடிவடைந்துள்ள நிலையில், வரும் வாரத்தில் நிஃப்டியில் 19800 வரையிலான நிலை காணப்படலாம் என்றும், குறைந்த பணவீக்கத்திற்குப் பிறகு, ஜூலைக்குப் பிறகு பெடரல் ரிசர்வ் வட்டி உயர்வு நிறுத்தப்படும் என்று நம்பப்படுகிறது என ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் ரீடெய்ல் ரிசர்ச் துணைத் தலைவர் தேவர்ஷ் கூறுகிறார்.

சர்வதேச பங்குச்உலக சந்தையில் ஏற்றம் ஏற்பட்டு அதன் பலனை உள்நாட்டு சந்தையும் பெற்று வருகிறது. கடந்த 4 மாதங்களாக இந்திய சந்தையில் எஃப்ஐஐகள் அதிக அளவில் கொள்முதல் செய்து வருகின்றனர்.

சீனாவின் ஜிடிபி தரவுகள்
 
சந்தையின் மேலும் போக்கு குறித்து, முதலீட்டாளர்கள் ரூபாயின் நகர்வு மற்றும் கச்சா எண்ணெய் விலையில் கண் வைத்திருப்பார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பல நிறுவனங்களின் முடிவுகள் வரும். எஃப்ஐஐயின் அடுத்த நடவடிக்கை என்ன மற்றும் உலகளாவிய சந்தை எவ்வாறு செயலைக் காட்டுகிறது.

இந்த காரணிகள் அனைத்தும் சந்தையை பாதிக்கும். தற்போது உள்நாட்டு சந்தைகள் சாதனை அளவில் உள்ளன. திங்களன்று, ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கான ஜிடிபி தரவை சீனா வெளியிடும். இந்த நிகழ்வை கண்காணிக்க வேண்டும்.

மேலும் படிக்க | எந்த பங்கு நல்ல வருவாய் தரும்? எஸ்பிஐ இருக்கும்போது கவலை ஏன்? டிப்ஸ் தரும் நிபுணர்கள்

டாலர்-ரூபாய் மாற்று விகிதத்தின் தாக்கம்

உலக சந்தைகளின் திசை, ரூபாய்-டாலர் மாற்று விகிதம் மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கம் ஆகியவை ஒட்டுமொத்த சந்தைப் போக்கில் தாக்கத்தை ஏற்படுத்தும். உள்நாட்டு முன்னேற்றங்களைத் தவிர, சந்தையை வழிநடத்துவதில் இந்தக் காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கும்.நிறுவன செயல்பாடுகளும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சென்செக்ஸ் 780 புள்ளிகள் உயர்ந்தது
கடந்த வாரம்,  BSE சென்செக்ஸ் 780.45 புள்ளிகள் அல்லது 1.19 சதவீதம் அதிகரித்தது. வெள்ளியன்று, சென்செக்ஸ் 66,060.90 என்ற புதிய உச்சத்தில் முடிவடைந்தது. இது, அன்றைய வர்த்தகத்தின் போது அதன் அனைத்து நேர உயர்வான 66,159.79 வரை சென்றது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டியும் வெள்ளியன்று அதன் புதிய வரலாறு காணாத அதிகபட்சமான 19,564.50 புள்ளிகளில் நிறைவடைந்தது. பகலில், அதன் புதிய அதிகபட்சமான 19,595.35 வரை சென்றது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸின் தலைமை முதலீட்டு மூலோபாய நிபுணர் வி.கே.விஜயகுமார் கூறுகையில், “வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (எஃப்பிஐ) இந்திய சந்தையில் வாங்குபவர்களாகவே இருக்கிறார்கள். FPIகள் நிதி, வாகனம், மூலதன பொருட்கள், ரியல் எப்எம்சிஜி பங்குகளில் தொடர்ந்து முதலீடு செய்கின்றன. FPI வாங்குதல் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சாதனை உச்சத்தை எட்ட உதவியது.

மேலும் படிக்க | வரலாறு காணாத உச்சத்தில் பங்குசந்தை... Sensex 65300 புள்ளிகள்... Nifty 19340 புள்ளிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News