மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இன்னும் சில நாட்களே உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், சம்பளம் பெறும் ஊழியர்கள் மத்திய அரசின் மீது அதிக எதிர்பார்ப்புகளுடன் உள்ளனர். அடுத்த ஆண்டு நாட்டில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இதுவாகும். எனவே பொருளாதார வளச்சியை மீண்டும் வேகமான உச்சத்திற்கு கொண்டு வர அடிப்படைக் கட்டமைப்புகளை மையமாகக் கொண்டு முக்கிய அறிவிப்புகளை தொழில்துறையினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், நடுத்தர வர்க்கத்தினர் பெரிய வரிச் சலுகைகளை எதிர்பார்க்கின்றனர்.
வருமான வரி விலக்கு
தற்போது ஆண்டுக்கு 2.5 லட்ச ரூபாய் வரை வருமானம் இருப்பவர்கள் வரி செலுத்த வேண்டாம். ஆனால், இந்த வரம்பும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, ஆண்டுக்கு 5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் வரி செலுத்த வேண்டாம் என்று அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | Budget 2023: எதிர்பார்க்கப்படும் 4 முக்கிய வரி சலுகைகள், அளிப்பாரா நிதி அமைச்சர்?
எஸ்எம்இக்கு குறைந்த விலை கடன்
நடுத்தர மற்றும் சிறு வணிகங்களுக்கான குறைந்த விலை கடன் திட்டத்தை நிதி அமைச்சகம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் (MSME) கோவிட் தொற்றுநோய்களின் போது மிக மோசமாகப் பாதிக்கப்பட்டதால், இந்த பட்ஜெட்டில் மிகப்பெரிய வளர்ச்சியை எதிர்பார்க்கின்றன.
வீட்டுக் கடனுக்கு வரி விலக்கு
தற்போது, தனிநபர்கள் சுயமாக ஆக்கிரமித்துள்ள சொத்துக்கான வீட்டுக் கடனில் ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் விலக்கு கோரலாம். கடந்த சில ஆண்டுகளாக சொத்து விலை உயர்வு மற்றும் பணவீக்கம் அதிகரித்து வருவதால், வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்த வரம்பை மேலும் 1 லட்சமாக உயர்த்த அரசு அறிவிக்கலாம்.
மாற்று எரிசக்திக்கு ஊக்கம்
இயற்கை வளங்கள் படிப்படியாக அழிந்து வருவதால், எரிசக்தி மாற்று வழிகளை உலகம் பார்க்கிறது. இந்த பட்ஜெட் 2023 இன் போது, மாற்று எரிசக்தி விருப்பங்களில் பணிபுரியும் வணிகங்களை மேம்படுத்துவதற்காக வரி விலக்குகள் மற்றும் பிற நன்மைகளை மத்திய அரசு அறிவிக்கலாம்.
கிராமப்புற வளர்ச்சியில் மத்திய பட்ஜெட்
தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் தரவுகளின்படி, அரசாங்கங்கள் பொதுவாக கிராமப்புற மற்றும் நலன்புரிச் செலவினங்களுக்கு தங்கள் கவனத்தை மாற்றுகின்றன. இந்தியாவின் முந்தைய இரண்டு தேர்தலுக்கு முந்தைய பட்ஜெடுகளும் இதே போக்குகளைக் காட்டின. 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன், கோல்ட்மேன் சாக்ஸ் ஆராய்ச்சியின்படி, மக்கள் நலன் மற்றும் கிராமப்புறச் செலவுகளுக்கு அதிக பணம் ஒதுக்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ