Bank fraud: ரூ.100 கோடி வங்கி மோசடியில் 2 வெளிநாட்டவர்கள்- சிபிஐ

100 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கில் இரண்டு வெளிநாட்டவர்களை சிபிஐ கைது செய்தது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 22, 2021, 08:58 AM IST
  • 100 கோடி ரூபாய் வங்கி மோசடியில் 2 வெளிநாட்டவர்கள் கைது
  • இந்த வழக்கில் ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டனர்
  • இந்தியன் வங்கி கொடுத்த புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்கை விசாரிக்கிறது
Bank fraud: ரூ.100 கோடி வங்கி மோசடியில் 2 வெளிநாட்டவர்கள்- சிபிஐ title=

சென்னை: சென்னை துறைமுக அறக்கட்டளை (Chennai Port trust) வங்கியில் செய்திருந்த நிலையான வைப்பு (Fixed deposits) தொகையில் மோசடி செய்த வழக்கில் இரண்டு வெளிநாட்டவர்களை மத்திய புலனாய்வுப் பிரிவு (Central Bureau of Investigation) கைது செய்தது. 

சென்னையின் ராமாபுரம் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். கேமரூன் மற்றும் காங்கோவைச் சேர்ந்தவர்கள். கைது செய்யப்பட்ட இருவரிடமும் அசல் பாஸ்போர்ட்டுகள் இல்லை என்றும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மடிக்கணினிகள், மொபைல் போன்கள், கேமரா, பிரிண்டர் (Laptops, mobile phones, camera, printer) போன்ற கருவிகளும், காமராஜர் போர்ட் டிரஸ்ட், சென்னை போர்ட் டிரஸ்ட் ஆகியவற்றின் வங்கியில் போடப்பட்டுள்ள நிரந்தர வைப்புத்தொகையின் ஆவணங்கள், பல்வேறு இந்திய-அரசு நிறுவனங்களின் லோகோக்கள் (logos) கைப்பற்றப்பட்டன. 

வங்கி மோசடி தொடர்பாக 2020  ஜூலை 31ம் தேதியன்று சிபிஐ வழக்கு பதிவு செய்தது. சென்னை இந்தியன் வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தியன் வங்கியின் கோயம்பேடு கிளை மேலாளர், சில அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நபர்கள் மீது, மோசடி, ஆள்மாறாட்டம் போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read | பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

வங்கியை ஏமாற்றும் நோக்கத்துடன் ரூ .100,57,50,000 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. அதோடு, இந்திய வங்கிக் கிளையில், சென்னை போர்ட் டிரஸ்ட் (CPT) பெயரில் இருந்த கால வைப்புத்தொகைகளை (term deposits) பலவற்றை முன்கூட்டியே மூடியது என சுமார் 45,40,65,000  ரூபாய் நிதி மோசடிகள் செயதது என்பதன் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய புலனாய்வு நிறுவனம் சிபிஐயின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் சதி செய்ததாகவும், இந்திய வங்கியின் கோயம்பேடு கிளையில், நிரந்தர வைப்புத்தொகை கணக்கைத் துவங்க சென்னை துறைமுக அறக்கட்டளையை கேன்வாஸ் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதன்படி, மார்ச் 2020 மற்றும் மே 2020 க்கு இடைப்பட்ட காலத்தில் 45 கால வைப்புத்தொகைகள் (FD) கோயம்பேடு வங்கிக் கிளையில் உருவாக்கப்பட்டன. குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் தன்னை சென்னை துறைமுக அறக்கட்டளையின் துணை இயக்குனராக (நிதி) ஆள்மாறாட்டம் செய்து போலியான நடப்புக் கணக்கைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.  

வங்கியில் வைப்புத்தொகை கணக்கு திறக்கப்படும் சமயங்களில் CPT யிலிருந்து முதலீடு பெற்ற பிறகு, வங்கி குறிப்பிட்ட முதலீட்டிற்காக கொடுக்கும் கால வைப்பு ரசீதுகள் மற்றும் ஆவணங்களை குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரடியாக வங்கியிலிருந்து பெற்றுக் கொண்டனர். CPT க்கு அசல் ஆவணங்களை கொடுப்பதற்கு பதிலாக போலி பத்திரங்களை கொடுத்தனர்.

Read Also | சிறுமியை அடித்துக்கொன்று ஆற்றில் வீசிய கொடூரம்; கள்ளக்காதலனுடன் தாய் கைது

அசல் பத்திரங்கள் வைத்திருந்த குற்றம்சாட்டப்பட்டவர்கள், குறிப்பிட்ட காலம் முடிவடைவதற்கு முன்னரே இந்தியன் வங்கி, கோயம்பேடு கிளையில் இருந்த வைப்புத்தொகையை எடுத்துவிட்டனர். கால வைப்புத்தொகையை முன்கூட்டியே மூடுவதன் மூலம் பெறப்பட்ட பணம் குற்றம் சாட்டப்பட்டவர்களால் CPT பெயரில் உருவாக்கப்பட்ட போலி நடப்புக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு பின்னர் 34 வெவ்வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டது. இந்த பணம் 27 கணக்குதாரர்களால் திரும்பப் பெறப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

CPT தொடர்ச்சியான கால வைப்புத்தொகையில் முதலீடு செய்து வந்தது மற்றும் வங்கியால் பத்திரங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, ஒன்றன் பின் ஒன்றாக குற்றம் சாட்டப்பட்டவர்களால் முன்கூட்டியே மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இதில் தோராயமாக 100.57 கோடி ரூபாய் தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது. மோசடி கண்டறியப்பட்ட பிறகு 55.19 கோடியை முடக்கப்பட்டது, மீதமுள்ள 45,40,65,00 ரூபாய் குற்றம் சாட்டப்பட்டவர்களால் மோசடி செய்யப்பட்டது.

இந்த வழக்குத் தொடர்பாக சிபிஐ இதற்கு முன்னரே ஒன்பது குற்றவாளிகளை கைது செய்தது. கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்ற காவலில் உள்ளனர். இந்த வழக்குத் தொடர்பாக சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் உட்பட 22 இடங்களில் முன்பு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது குறிப்பிடப்பட்டது.

ALSO READ:பள்ளிக்கு வர மாணவர்களை கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை : உயர்நீதிமன்றம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News