தனது ஊழியர்களுக்கு சம்பள குறைப்பை அறிவித்தது TVS நிறுவனம்...

தற்போதைய COVID-19 தொற்றுநோய் மற்றும் அடுத்தடுத்த பூட்டுதலுக்கு முகங்கொடுத்து ஊழியர்களுக்கான சம்பள வெட்டுக்களை பிரபல இருசக்கர வாகன நிறுவனமான TVS அறிவித்துள்ளது.

Last Updated : May 25, 2020, 11:18 PM IST
தனது ஊழியர்களுக்கு சம்பள குறைப்பை அறிவித்தது TVS நிறுவனம்... title=

தற்போதைய COVID-19 தொற்றுநோய் மற்றும் அடுத்தடுத்த பூட்டுதலுக்கு முகங்கொடுத்து ஊழியர்களுக்கான சம்பள வெட்டுக்களை பிரபல இருசக்கர வாகன நிறுவனமான TVS அறிவித்துள்ளது.

கொரோனா முழு அடைப்பால் உற்பத்தி கிட்டத்தட்ட நிறுத்தப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, அத்துடன் அனைத்து வாகன பிராண்டுகளின் சில்லறை விற்பனையும் நிறுத்தப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதுதொடர்பான TVS-ன் அறிக்கையில் நிறுவனம் 2020 மே மாதம் முதல் 2020 அக்டோபர் வரை தனது அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியக் குறைப்பை ஏற்படுத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 

இது நாடு முழுவதும் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கையில் ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சியின் விளைவாக நடைமுறைக்கு வந்துள்ளது.

TVS மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, "முன்னோடியில்லாத நெருக்கடியை அடுத்து, TVS மோட்டார் நிறுவனம் ஆறு மாத காலத்திற்கு (2020 மே முதல் அக்டோபர் வரை) வெவ்வேறு நிலைகளில் தற்காலிக சம்பளக் குறைப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் தொழிலாளர் மட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு இருக்காது எனவும் TVS அறிக்கை குறிப்பிடுகிறது. 

ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் மட்டத்தில் 5 சதவீத சம்பளக் குறைப்பு மற்றும் மூத்த நிர்வாக மட்டத்தில் சுமார் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை இருக்கும் எனவும் அறிக்கை குறிப்பிடுகிறது. 

முன்னதாக மார்ச் 2020-ல் 55 சதவீதம் விற்பனை சரிந்த பின்னர், ஏப்ரல் 2020-ல், TVS மோட்டார் நிறுவனம் உள்நாட்டு சந்தையில் பூஜ்ஜிய விற்பனையை பதிவு செய்தது. உள்நாட்டு இரு சக்கர வாகன சந்தையில் மட்டும், TVS 2020 மார்ச் மாதத்தில் விற்பனையில் 62 சதவீதம் சரிவைக் கண்டது. பூட்டுதல் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட 2020 மார்ச் 23 முதல் தமிழ்நாட்டின் ஓசூரில் நிறுவனத்தின் உற்பத்தி வசதி முடக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending News