Truecaller இல் கோவிட் மருத்துவமனைகளின் தொலைபேசி டைரக்டரி அறிமுகம்!

கொரோனா அலை நாடு முழுவதும் அழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் சிரமம் படுபவர்களுக்கு மக்கள் ஒவ்வொருவரும் தங்களது சொந்த வழியில் உதவி வருக்கிறனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 28, 2021, 06:25 PM IST
Truecaller இல் கோவிட் மருத்துவமனைகளின் தொலைபேசி டைரக்டரி அறிமுகம்! title=

கொரோனா அலை நாடு முழுவதும் அழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் சிரமம் படுபவர்களுக்கு மக்கள் ஒவ்வொருவரும் தங்களது சொந்த வழியில் உதவி வருக்கிறனர். இந்த பட்டியலில், பல தொழில்நுட்ப நிறுவனங்களும் மக்களின் பிரச்சினைகளை தங்கள் சொந்த வழியில் எளிதாக்க முயற்சிக்கின்றன. 

நாட்டில் உள்ள மக்கள் கொரோனா சிகிச்சை (Coronavirus) வழங்கும் மருத்துவமனைகளை அவசர தேவைக்குத் தொடர்புகொள்ள  முயற்சிக்கின்றனர்.  ஆனால், அவர்களுக்கு சரியான தகவல்கள் கிடைப்பதில்லை. இது போன்ற சூழ்நிலைகளில் மக்களுக்கு உதவுவதற்காக கோவிட் (Covid) மருத்துவமனைகளின் டைரக்டரியை அறிமுகப்படுத்துவதாக ட்ரூகாலர் (TrueCaller) புதன்கிழமை அறிவித்துள்ளது. இதை உபயோகிக்க நினைக்கும் பயனர்கள் அதை மெனு அல்லது டயலர் மூலம் அணுகலாம்.

இந்த டைரக்டரியில் பல மாநிலங்களில் கோவிட் சிகிச்சைக்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனைகளின் தொலைபேசி எண்கள் மற்றும் முகவரிகளை பெற முடியும். ஆனால், மருத்துவமனைகளில் இருக்கும் படுக்கைகள் விவரங்களை இதில் பெற முடியாது. 

ALSO READ | Google Maps செய்த குழப்பத்தால் Life Map மாறாமல் தப்பித்த மணமகனின் பகீர் அனுபவம் Watch Video

சோதனை மையத்திலிருந்து தடுப்பூசி மையத்தைக் கண்டறிய கூகிள் உதவுகிறது
இதனிடையே கூகுள் மேப்ஸ் (Google Maps) மூலம் உங்களைச் சுற்றி தடுப்பூசி எங்கு கிடைக்கும் என்பது பற்றிய தகவல்களை கொடுக்க உடவுகிறது. மேப் App-ல் மையங்களின் தொலைபேசி எண்கள் மற்றும் அவை செயல்படும் நேரங்கள் போன்ற கூடுதல் தகவல்களும் உள்ளன. இதற்கென கூகுள் மேப்பில் கோவிட் -19 தகவல் மற்றும் தடுப்பூசி இடங்கள் என்ற விருப்பம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதை கிளிக் செய்தால் Near by resources என்ற தலைப்பில் கோவிட் -19 சோதனை(Covid-19 Testing) மற்றும் கோவிட் -19 தடுப்பூசிகள்(Covid-19 Vaccines) என்ற விருப்பங்கள் காட்டப்படுகிறது. மக்கள் தங்கள் அருகிலுள்ள கோவிட் -19 பரிசோதனை மையங்களுக்கு செல்ல விரும்பினால் Covid-19 Testing-ஐ கிளிக் செய்தால் அவர்களுக்கு அருகிலுள்ள பரிசோதனை மையங்கள் தொலைபேசி எண் மற்றும் முகவரியுடன் தோன்றும். தடுப்பூசி எடுத்து கொள்ள விரும்புவோர் Covid-19 Vaccines-ஐ கிளிக் செய்தால் அருகிலுள்ள தடுப்பூசி போடும் மையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் தோன்றுகிறது. இது தவிர யூசர்கள் தங்களுக்கு தேவையான முடிவுகளை பெற COVID 19 சோதனை” அல்லது “கோவிட் சோதனை” போன்ற முக்கிய வார்த்தைகளையும் பயன்படுத்தலாம்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News