யம்மாடி....இத்தனை கோடி சொத்து இருக்கா திருப்பதி கோவிலுக்கு

திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில் பணம், தங்கம், வைப்புத்தொகை மற்றும் சொத்துக்களின் முழுமையான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 7, 2022, 10:22 AM IST
  • திருப்பதி கோவில் சமீபத்திய செய்திகள்.
  • திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பு.
  • 10 டன் தங்கம், 16 ஆயிரம் கோடி ரொக்கம்.
யம்மாடி....இத்தனை கோடி சொத்து இருக்கா திருப்பதி கோவிலுக்கு title=

திருப்பதி கோவிலின் சொத்துமதிப்பு: திருப்பதி கோவில்களில் மக்கள் வருகையால் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில் அந்த கோவிலின் பணம், தங்கம், வைப்புத்தொகை மற்றும் சொத்துக்களின் முழுமையான விவரங்களை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலின்படி திருப்பதி கோவிலின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2.26 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

கோவிலிடம் எவ்வளவு தங்கம் இருக்கிறது? அதன் மதிப்பு என்ன?
மொத்த சொத்துக்களில் தங்கத்தைப் பற்றி பேசுகையில், வங்கிகளில் 10.25 டன் தங்கம் வைப்பு, 2.5 டன் தங்க நகைகள், வங்கிகளில் சுமார் ரூ.16,000 கோடி டெபாசிட் மற்றும் இந்தியா முழுவதும் 960க்கும் மேற்பட்ட நிலங்கள் திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலுக்கு சொத்துக்களாக உள்ளன.

மேலும் படிக்க | திருப்பதியில் தமிழர்கள் மீது இனவெறித் தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சி கண்டனம்

இந்த பணம் எங்கே டெபாசிட் செய்யப்படுகிறது?
TTD-க்கு கிடைத்த தகவலின்படி, கோவிலின் உபரித் தொகை அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2.26 லட்சம் கோடி, இதில் 10.3 டன் தங்கம் 5,300 கோடிக்கு மேல் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தைப் பற்றி பேசினால், அது சுமார் ரூ.15,938 கோடி ஆகும்.

வருமானம் எங்கிருந்து வருகிறது?
அறிக்கையில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, இந்தியா முழுவதும் 7,123 ஏக்கர் பரப்பளவில் கோயில் சொத்துக்கள் உள்ளன, அதில் 960 சொத்துகளும் அடங்கும். இந்த கோவிலின் வருமானம் பக்தர்கள் மற்றும் நிறுவனங்கள் வழங்கும் நன்கொடையில் இருந்து வருகிறது. 

விப்ரோ, நெஸ்ட்லே நிறுவனங்களை விட திருப்பதி கோவிலின் சொத்துமதிப்பு அதிகம்
இதற்கிடையில் பெங்களூரை தளமாகக் கொண்ட விப்ரோவின் ரூ.2.14 லட்சம் கோடியாக உள்ளது. அதேபோல் அல்ட்ராடெக் சிமென்ட் சந்தை மதிப்பு ரூ.1.99 லட்சம் கோடியாக உள்ளது. இந்த நிறுவனங்களின் சொத்து மதிப்பை விட திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | அக்டோபர் மாதம் அமோகமாக இருக்கப் போகும் ‘சில’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News