சீக்கிரம் கோடீஸ்வரர் ஆக ஆசையா? அப்போ ‘இந்த’ தொழிலை செய்து பாருங்கள்..

Food Business Tips In Tamil : பலருக்கு மிக விரைவிலேயே அதிக லாபம் கொடுக்கும் தொழிலை செய்ய பிடிக்கும். அப்படி, நல்ல வருமானம் தரும் தொழில் ஒன்றை இங்கு பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : Mar 7, 2024, 05:30 PM IST
  • பல மடங்கு வருமானம் தரும் தொழில்
  • இந்த தொழிலுக்கு இந்தியாவில் பஞ்சமே இருக்காது
  • அது என்ன தொழில்? இதற்கு தேவைப்படும் முதலீடு என்ன?
சீக்கிரம் கோடீஸ்வரர் ஆக ஆசையா? அப்போ ‘இந்த’ தொழிலை செய்து பாருங்கள்.. title=

Food Business Tips In Tamil : சமீப காலங்களாக, இந்திய இளைஞர்கள் பலர் வேலை தேடுவதை விட, சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் ஒரு நல்ல சுய தொழில் செய்யவே விரும்புகின்றனர். காரணம், பலருக்கு மாத சம்பளம் வாங்குவதும் ஒருவருக்கு கீழ் வேலை செய்வது, அவருக்கு பதில் கூறுவதும் பிடிப்பதில்லை. கையில் உள்ள பணத்தை வைத்து தொழிலை ஆரம்பித்துவிட்டு அதிலிருந்து வரும் வருமானத்தை வைத்து தொழிலை இரட்டிப்பாக்குவதில் கவனம் செலுத்துகின்றனர். 

சூப்பர் வருமானம் கொடுக்கும் பிசினஸ்:

தொழில்களை பொறுத்தவரை, ஒரு சிலவற்றிற்கு உரிமச்சான்றிதழ் வாங்க வேண்டிய கட்டாயம் இருக்கும். ஆனால், அதை வாங்குவதற்கே பல மாதங்கள் ஆகிவிடும் என்பதால் பலர் சில தொழில்களை தொடங்க யோசிப்பர். ஆனால், இந்த தொழிலை ஆரம்பிக்கும் போது உரிமச்சான்றிதழ் தொடக்கத்தில் தேவையில்லை. மெகாவாக பணத்தை முதலீடு செய்யவும் தேவையில்லை. கையில் 8,000 ரூபாய் முதல் 10,000 வரை இருந்தாலே போதுமானது. இந்த தொழிலை ஆரம்பித்தால், மாதம் தோறும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என ஏற்கனவே இதை செய்து வியாபாரம் செய்பவர்கள் தெரிவிக்கின்றனர். ஆண்/பெண் என்ற பாலின பாகுபாடின்றி, யார் வேண்டுமானாலும் இந்த தொழிலை செய்யலாம். வீட்டிலிருந்தே செய்யப்படும் இந்த தொழில் எது தெரியுமா?

டிஃபன் செண்டர்:

உணவு தொழில் ஒரு பக்கம் உலகம் முழுவதும் ஜாம் ஜாம் என்று நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம், உணவு டெலிவரி பிசினஸ் சூடு பிடித்து சக்கை போடு போட்டு வருகிறது. மக்களிடம் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு வந்ததை அடுத்து, அவர்கள் அனைவருமே நல்ல வீட்டில் சமைத்த உணவுகளையே சாப்பிட விரும்புகின்றனர். நகரங்களில் பேச்சுலர்களாக இருப்பவர்கள், பெரும்பாலும் இந்த உணவை தேடுகின்றனர். ஒரு டிஃபன் செண்டர், அல்லது டிஃபன் சேவை தொழிலை தொடங்குவதால் நல்ல வருமானத்தை பார்க்கலாம் என்கின்றனர், ஏற்கனவே இந்த தொழிலை செய்து வரும் முதலாளிகள். 

மேலும் படிக்க | சுகன்யா சம்ரிதி யோஜனா.. அதிக வட்டி பெறுவது எப்படி, உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

முதலீடு எவ்வளவு?

இந்த டிஃபன் செண்டர் தொழிலிற்கு தேவைப்படும் முதலீடு, வெறும் 8 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் வரை இருக்கலாம். இதை செய்ய, பெரிய உணவு குடவுன் எல்லாம் தேவையில்லை. வீட்டின் சமையலரையே போதுமானதாகும். நீங்கள் பெற விரும்பும் லாபத்தை பொறுத்து உங்களது முதலீடும் அமையலாம். உங்களது தொழில் நேர்த்தியும், நம்பகத்தன்மையும் மட்டுமே உங்களுக்கு பெரிய விளம்பரமாக அமையும். ஆகையால் அந்த வேலையை சரியாக செய்வதில் ஆர்வம் கொள்ள வேண்டும். அது மட்டுமன்றி, கையில் உள்ள செல்போன்கள் மூலமாகவும் சமூக வலைதளங்களில் உங்கள் தொழிலுக்கான கணக்கை தொடங்கி, விளம்பரப்படுத்தலாம். 

வருமானம் எவ்வளவு?

இந்த தொழில் பெருகினால், ஒரு மாதத்திற்கு ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை சம்பாதிக்கலாம். மகளிர் பலர், இந்த தொழிலை வீட்டில் இருந்தே செய்து பல லட்சங்கள் வருமானம் பார்க்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர், சிறியதாக உணவு தொழிலை தொடங்கிய பலர், இப்போது பெரும் பிராண்டிற்கு முதலாளிகளாக மாறி பல கோடிகளுக்கு அதிபதிகளாக விளங்குகின்றனர். 

மேலும் படிக்க | ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் செய்தி: 50% அகவிலைப்படியுடன் இவற்றிலும் ஏற்றம்

(பொறுப்பு துறப்பு: தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள இந்த குறிப்புகளை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக துறை சம்பந்தப்பட்டவர்களிடம் ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News