இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மீண்டும் 50 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தியதால் வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் மே மாதத்திலிருந்து அதிகரித்து வருகின்றன. இதனால் ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி உட்பட பல வங்கிகளும், ஹெச்டிஎஃப்சி லிமிடெட் மற்றும் எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் போன்ற வங்கி அல்லாத வீட்டு நிதி நிறுவனங்களும் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை அதிகரித்திருக்கிறது. வங்கிகளில் பெறும் கடன் தொகைகளை தவணை முறைகளில் குறிப்பிட்ட தேதியில் செலுத்தி வருவோம், குறிப்பிட்ட தேதியில் வட்டித்தொகையை செலுத்தாவிடில் வங்கிகள் உங்களுக்கு அபராதம் விதிக்கும் மற்றும் உங்களது சிபில் மதிப்பெண்ணும் குறைந்துவிடும். அதேசமயம் இஎம்ஐ கட்டணங்களை முன்கூட்டியே செலுத்துவதன் மூலம், வாடிக்கையாளர் கடனை விரைவாகச் செலுத்துவதன் பலனைப் பெறுவார்கள்.
மேலும் படிக்க | எச்சரிக்கை: நீங்கள் வைத்திருக்கும் ஆதார் அட்டை உண்மையானது தானா?
வங்கிகளில் கடன் தொகையை வழங்குவதற்கு முன்னர் இஎம்ஐ தொகையை முன்கூட்டியே செலுத்த கடன் பெறுபவர்கள் தயாராக இருக்கிறார்களா என்பதை கடன் வழங்குபவர்கள் உறுதிசெய்து கொள்வது நல்லது. உங்கள் வீட்டுத் திட்டம் முடிவடையும் கட்டங்களைப் பொறுத்து தவணைகளில் கடன் வழங்கப்படுகிறது. கடனின் பகுதிக்கு மட்டுமே நீங்கள் வட்டி செலுத்த வேண்டியிருக்கும். பெரும்பாலான வங்கிகள் மொத்தத் தொகையை செலுத்துவதன் மூலம் கால அட்டவணைக்கு முன்னதாகவே கடனைத் திருப்பிச் செலுத்த அனுமதிக்கின்றன.
வங்கிகள் பல அசல் தொகையில் 2-3% வரை முன்கூட்டியே திருப்பிச் செலுத்துவதற்கான அபராதம் விதிக்கின்றன. நீங்கள் செலுத்த வேண்டிய இஎம்ஐ தொகையை விட அதிகமாக டெபாசிட் செய்தால், பெரும்பாலான வங்கிகள் முன்பணம் செலுத்தும் அபராதத்தை விதிக்காது. எப்போதும் வங்கியிலிருந்து கடன் பெறுவதற்கு முன்னர் வங்கியின் நிபந்தனை விதிகளை சரிபார்த்த பின்னர் கடனை வாங்க வேண்டும்.
மேலும் படிக்க | RBI Digital Rupee:இன்று அறிமுகமாகிறது டிஜிட்டல் கரன்சி; ரிசர்வ் வங்கி அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ