உலகின் மிகப்பெரிய பர்னிச்சர் நிறுவனம் IKEA உத்திரபிரதேசத்தில் ₹5500 கோடி முதலீடு

IKEA தனது முதல் ஸ்டோரை இந்தியாவில் 2018 இல் ஹைதராபாத்தில் திறந்தது, அதைத் தொடர்ந்து 2020 இல் மும்பையில் ஒரு கடை திறக்கப்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 20, 2021, 09:18 PM IST
  • IKEA 1943 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
  • IKEA தனது முதல் ஸ்டோரை இந்தியாவில் 2018 இல் ஹைதராபாத்தில் திறந்தது
  • இந்நிறுவனம் ஒரு வீடு கட்ட ஆகும் செலவை விட மிக குறைவான விலையில், பிளாட்-பேக் வீடுகளை விற்கிறது .
உலகின் மிகப்பெரிய பர்னிச்சர் நிறுவனம் IKEA உத்திரபிரதேசத்தில் ₹5500 கோடி முதலீடு title=

உலகின் மிகப்பெரிய பர்னீச்சர் மற்றும் ஹோம் அப்ளையன்சஸ்  நிறுவனமான IKEA  அடுத்த ஐந்து ஆண்டுகளில் உத்தரபிரதேசத்தில் ரூ .5500 கோடியை முதலீடு செய்கிறது. நாய்டாவில் தொடங்கி, புர்வான்சால் மற்றும் மத்திய உத்திரபிரதேசத்தில் குறைந்தது மூன்று பெரிய விற்பனை நிலையங்களை திறக்க IKEA  திட்டமிட்டுள்ளது. நொய்டா மையம் திறக்கப்பட்ட பின், மற்ற விற்பனை நிலையங்களுக்கான திட்டங்கள் இறுதி செய்யப்படும்.

உத்திரபிரதேசம் (Uttar Pradesh) நொய்டாவின் செக்டர் 51 இல் கிட்டத்தட்ட 50,000 சதுர மீட்டர் அளவிலான நிலப்பரப்பு இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது

இந்த திட்டம் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும், உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ஆதரவளிக்கும்.  நாய்டா திட்டம் தொடங்கப்படுவதால், 2,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர்.

ஐரோப்பா, ரஷ்யா மற்றும் சீனா முழுவதும் 45   IKEA ஸ்டோர்கள் மற்றும் மால்கள் உள்ளன. 2021 ஆம் ஆண்டில் அமெரிக்காவில், தொடங்கவும் திட்டமிட்டுள்ளன, நொய்டா திட்டத்தில் கிட்டத்தட்ட ₹5500 கோடி  (759 மில்லியன் அமெரிக்க டாலர்) முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியது.

IKEA தனது முதல் ஸ்டோரை இந்தியாவில் 2018 இல் ஹைதராபாத்தில் திறந்தது, அதைத் தொடர்ந்து 2020 இல் மும்பையில் ஒரு கடை திறக்கப்பட்டது.

IKEA 1943 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 2018 ஆம் ஆண்டில் தனது 91 வயதில் காலமான இங்வார் கம்ப்ராட் (Ingvar Kamprad), IKEA-ஐ ஒரு மெயில்-ஆர்டர் விற்பனை வணிகமாக அறிமுகப்படுத்தியபோது அவருக்கு வெறும் 17 வயதுதான், முதலில் படச்சட்டங்கள் போன்ற சிறிய பொருட்களை மட்டுமே விற்றார். இப்போது அது மிகப்பெரிய பர்னீச்சர் வணிகமாக உருவெடுத்துள்ளது.

இந்நிறுவனம் ஒரு வீடு கட்ட ஆகும் செலவை விட மிக குறைவான விலையில்,  பிளாட்-பேக் வீடுகளை விற்கிறது . BoKlok  ஹவுஸ் 1996 இல் ஸ்வீடனில் தொடங்கப்பட்டது. போக்லோக் என்பது 'மக்களுக்கான நவீன வீடுகள்' என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட முயற்சியாகும்.

ALSO READ | கிழக்கு, தென் சீனக் கடலில் சீன திட்டங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள ஜப்பான்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News