கார் வாங்க திட்டமா... 8.70% வரை குறைந்த வட்டியில் கடன் வழங்கும் ‘சில’ வங்கிகள்!

Best Car Loan Offers: நீங்களும் கார் வாங்க திட்டமிட்டிருந்தால், முதலில் பலவிதமான வங்கிகள் வழங்கும் கார் கடனுக்கான வட்டி விகிதத்தை தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 17, 2023, 01:50 PM IST
  • வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல வங்கிகள் கார் கடன் வழங்குவதில் சலுகைகளை வழங்குகின்றன.
  • கடனில் 5 ஆண்டுகளுக்குச் செலுத்த வேண்டிய சராசரி EMI தொகை விபரம்.
  • கார் கடன்களை 8.70 சதவீதம் வரை குறைந்த வட்டியில் வழங்கும் வங்கிகள் விபரம்.
கார் வாங்க திட்டமா... 8.70% வரை குறைந்த வட்டியில் கடன் வழங்கும் ‘சில’ வங்கிகள்! title=

புதிய கார் வாங்கப் போகிறீர்களா? பல வங்கிகள் கார் கடன்களை 8.70 சதவீதம் வரை குறைந்த வட்டியில் வழங்குகின்றன. நீங்கள் குறைவான EMI உடன் உடனடி கார் கடனைப் பெறுவீர்கள். பிணை எதுவும் தேவையில்லை மற்றும் செயலாக்கக் கட்டணமும் இல்லை. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல வங்கிகள் கார் கடன் வழங்குவதில் சலுகைகளை வழங்குகின்றன. நீங்களும் கார் வாங்க திட்டமிட்டிருந்தால், முதலில் பலவிதமான வங்கிகள் வழங்கும் கார் கடனுக்கான வட்டி விகிதத்தை தெரிந்து கொள்ளுங்கள். இது தவிர, 5 லட்சம் வரையிலான கடனில் 5 ஆண்டுகளுக்குச் செலுத்த வேண்டிய சராசரி EMI தொகையும் இங்கே கணக்கிட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

HDFC வங்கி கார் கடன் சலுகை:

HDFC வங்கி எக்ஸ்பிரஸ் கார் கடன் என்ற பிரிவில். வட்டி விகிதம் ஆண்டுக்கு 8.80 சதவீதத்தில் தொடங்குகிறது. மேலும், 100% கடன் (Loan) கிடைக்கும் . அதுவும் விரைவான கடன் கிடைக்கும். மலிவு EMIகள் மற்றும் நெகிழ்வான தவணைகள் என இந்த வங்கி வழங்கும் கார் கடன்கள் பல வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளன.

பாரத ஸ்டேட் வங்கி கார் கடன் சலுகை:

எஸ்பிஐ பண்டிகைக் கால கார் கடன் சலுகையில், 31 ஜனவரி 2024 வரை செயலாக்க கட்டணம் பூஜ்ஜியமாகும். குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் EMI. கடன் செலுத்தும் காலம் 7 ​​ஆண்டுகள் வரை. பதிவு மற்றும் காப்பீடு உட்பட 'ஆன்-ரோடு விலையில்' 90 சதவீதம் வரை நிதியளிக்கப்படும். மிக முக்கியமாக ஒரு வருடத்திற்குப் பிறகு முன்கூட்டியே செலுத்துவதற்கு கட்டணம் ஏதும் இல்லை. தினசரி குறைப்பு இருப்பின் மீது வட்டி கணக்கிடப்படும். முன்கூட்டிய EMI எதுவும் எடுக்கப்படாது. விருப்பமான SBI ஆயுள் காப்பீடு கிடைக்கும்.

மேலும் படிக்க | வங்கிக் கடனுக்கான ரிஸ்க் வெயிட்டேஜ் அதிகமானது! வட்டி விகிதமும் ராக்கெட் வேகம் எடுக்குமா?

ஐசிஐசிஐ வங்கி கார் கடன் சலுகை:

கார் கடனில் ஐசிஐசிஐ வங்கி சலுகையில், ஆன்ரோடு விலையில் 100 சதவீதம் வரை நிதியுதவி. சில தேர்ந்தெடுக்கப்பட்ட கார் மாடல்களில் 8 ஆண்டுகளுக்கு கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான விருப்பம். ஒரு வருடத்திற்கு பிறகு கடனை முன்கூட்டியே செலுத்துவதற்கு கட்டணம் ஏதும் இல்லை.

வங்கியின் பெயர்   வட்டி           விகிதம் ரூ.5 லட்சம் கடனுக்கான  5 ஆண்டு இஎம்ஐ (ரூபாயில்) செயலாக்கக் கட்டணம் (ரூபாயில்)
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 8.75 - 10.50 10,319 - 10,747  ரூ.1,000 வரை
பஞ்சாப் நேஷனல் வங்கி  8.75 - 9.60 10,319 - 10,525   0.25% (1,000 - 1,500)
பேங்க் ஆஃப் பரோடா  8.70 - 12.10 10,307 - 11,148  ரூ.500 வரை
கனரா வங்கி 8.80 - 11.95 10,331 - 11,110  டிசம்பர் 31, 2023 வரை கட்டணம் இல்லை
பேங்க் ஆஃப் இந்தியா  8.85 - 10.75 10,343 - 10,809  0.25% (ரூ.1,000 - ரூ.5,000)
UCO வங்கி 8.45 - 10.55  10,246 - 10,759 கட்டணம் இல்லை
பாரத ஸ்டேட் வங்கி 8.65 - 9.70 10,294-10,550  கட்டணம் இல்லை
ஐடிபிஐ வங்கி 8.75 - 9.55 10,319 - 10,513 ரூ.2,500
பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா 8.70 - 13.00 10,307 - 11,377 கட்டணம் இல்லை
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி  8.85க்கு மேல் 10,343 க்கு மேல் 0.50% (500 - 5,000)
ஐசிஐசிஐ வங்கி 8.95  10,367 க்கு மேல்  ரூ.999 - 8,500
HDFC வங்கி  8.75க்கு மேல் 10,319 க்கு மேல்   0.50%
கர்நாடகா வங்கி 9.23 - 11.66 10,435 - 11,037 0.60% (3,000 - 11,000)

மேலும் படிக்க | Indian Railways அதிரடி: இனி ரயிலிலேயே வெளிநாடு செல்லலாம்... வெளிவந்த மாஸ் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News