கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்து முன்னேற்றம் ஏற்படும் நிலையில், ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை பார்க்கும்படி கூறிய நிறுவனங்கள் பெரும்பாலும் தற்போது தங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கத் தொடங்கியுள்ளன. இருப்பினும் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் இன்னும் வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதியை வழங்குகின்றன, ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு படிப்படியாக இப்போது இந்த வசதி ரத்து செய்யப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | LIC பங்குகள் தொடர் சரிவு : வாங்கியவர்கள் என்ன செய்ய வேண்டும்!
அந்த வகையில் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) தனது ஊழியர்களை இம்மாதம் முதல் அலுவலகத்திற்கு அழைப்பதாக அறிவித்துள்ளது, இந்நிறுவனத்தில் சுமார் 6 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இருப்பினும் உடனடியாக அனைத்து ஊழியர்களும் அலுவலகத்திற்கு வேலை செய்ய அழைக்கப்பட மாட்டார்கள், தற்போது 50,000 உயர்மட்ட ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு அழைக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அவர்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் அலுவலகத்தில் வந்து பணிபுரியுமாறும், மீதமுள்ள இரண்டு நாட்களுக்கு முன்பு போலவே வீட்டிலிருந்து வேலை செய்துகொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.
டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் எம்டி ராஜேஷ் கோபிநாதன் கூறுகையில், இந்த மாதம் முதல் நிறுவனத்தின் மூத்த ஊழியர்கள் மட்டும் அலுவலகத்திற்கு வருவார்கள், பின்னர் அலுவலகத்திற்கு அழைக்கப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும். இந்த ஆண்டின் நடுப்பகுதியில், அதாவது ஜூன்-ஜூலைக்குள் பெரும்பாலான ஊழியர்கள் (80 சதவீதம்) அலுவலகத்தில் இருந்து வேலை செய்யத் தொடங்குவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 2022-23 நிதியாண்டில் டிசிஎஸ் தனது ஊழியர்களின் சம்பளத்தை 6-8 சதவீதம் உயர்த்தும் என்றும் அவர் கூறினார்.
டிசிஎஸ் 2021-22 நிதியாண்டின் கடைசி காலாண்டில் அதாவது ஜனவரி-மார்ச் மாதத்தில் நிறுவனம் 35,209 புதிய ஊழியர்களை நியமித்துள்ளது, இது ஒரு காலாண்டில் நடந்த அதிகபட்ச ஆட்சேர்ப்பு ஆகும். இதேபோல், கடந்த நிதியாண்டில் நிறுவனம் 1,03,546 புதிய பணியாளர்களுக்கு வேலை கொடுத்துள்ளது. இதன் மூலம் டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 5,92,195 ஆக உயர்ந்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR