புதுடெல்லி: CRISIL உடன் இணைந்து DBS பேங்க் இந்தியா நடத்திய விரிவான ஆய்வு, வெவ்வேறு வங்கி மற்றும் கட்டணச் சேனல்களின் பெண்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பது தொடர்பான ஆழமான ஆய்வுகளை நடத்தியது. அதில், 47 சதவிகித பெண்கள் சுயமாக நிதி முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதும், ஊதியம் பெறும் பெண்களில் 50% பேர் கடன் வாங்கவில்லை என்பதும் ஆச்சரியமானதாக உள்ளது.
இந்த ஆய்வின் முடிவு, பெண்களின் வளர்ந்து வரும் பொருளாதார முன்னேற்றத்தை பிரதிபலிப்பதாக இருப்பதாக CRISIL உடன் இணைந்து DBS பேங்க் இந்தியா செய்த விரிவான ஆய்வு கூறுகிறது.
இன்னும் குறிப்பிடத்தக்க வகையில், வேலை பார்த்து சம்பாதிக்கும் பெண்களில் பாதி பேர், அதாவது 50 சதவீதம் பேர் கடன் வாங்கவே இல்லை என்று இந்த ஆய்வு கூறுகிறது. கடன் வாங்கிய பெண்களில் பெரும்பாலோனோர், வீடு வாங்குவதற்காகவே கடன் வாங்கியுள்ளனர். இது இந்தியாவில் வீட்டு உரிமையுடன் தொடர்புடைய ஆழமான கலாச்சார முக்கியத்துவத்தை பிரதிபலிப்பதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
'பெண்கள் மற்றும் நிதி' (Women and Finance) என்ற ஆய்வு, பல்வேறு வாழ்க்கை நிலைகளில் சம்பளம் வாங்கும் மற்றும் சுயதொழில் செய்யும் பெண்களின் நிதி விருப்பங்களை வெளிப்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் படிக்க | Tax Saving Tips: அதிக வட்டியுடன்... வரி விலக்கு பெற உதவும் சில FD முதலீடுகள்!
இந்தியாவின் பத்து நகரங்களில் 800 க்கும் மேற்பட்ட பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களின், பணம் தொடர்பாக முடிவெடுத்தல், இலக்கு அமைத்தல், சேமிப்பு மற்றும் முதலீடுகள் செய்வது, முதலீட்டு முறைகள், டிஜிட்டல் கருவிகளை ஏற்றுக்கொள்வது மற்றும் வெவ்வேறு வங்கித் தயாரிப்புகளுக்கான அவர்களின் விருப்பத்தேர்வுகள் உட்பட பலவிதமான பொருளாதரம் சார்ந்த நடத்தைகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.
இந்த முடிவுகளை வடிவமைப்பதில் வயது மற்றும் செல்வம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஆய்வு மேலும் கூறியது. 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 65% பெண்கள் சுதந்திரமான நிதித் தேர்வுகளை மேற்கொள்கின்றனர். அதுவே, 25-35 வயதுடையவர்களில் 41 சதவிகித பெண்களே சுயமாக பணம் தொடர்பாக முடிவெடுக்கின்றனர்.
வெவ்வேறு வங்கி மற்றும் கட்டண வழிகளை பெண்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பது குறித்தும் இந்த ஆய்வு ஆழமாக தெரிந்துக் கொண்டது. 25-35 வயதிற்குட்பட்டவர்களில் 33% பேர் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு UPI ஐப் பயன்படுத்த விரும்புகிறார்கள், 45 வயதுக்கு மேற்பட்ட 22% பேர் மட்டுமே UPI ஐப் பயன்படுத்துகின்றனர்.
இந்தியா முழுவதும், ஒரு பெண்ணின் முதன்மையான நீண்ட கால நிதி முன்னுரிமை என்பது வயதுக்கு ஏற்ப உருவாகிறது என்பதும், பெருநகரங்களில் வாழும் பெண்களின் சம்பாதிப்பது அவர்களுக்கு செலவு செய்வதற்கான அதிகாரம் அளிக்கும் காரணியாக இருக்கிறது என்பது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த அறிக்கை வழங்குகிறது.
மேலும் படிக்க | Income Tax: சம்பளத்தில் ‘இந்த’ அலவென்ஸ்களுக்கு வரியே கிடையாது..!
25-35 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு வீடு வாங்குவது மற்றும் வீட்டை புனரமைப்பது என்பது முக்கியமான நோக்கமாக இருந்தால், 35-45 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு குழந்தைகளின் கல்வி முக்கியமான தேர்வாக இருக்கிறது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மருத்துவ பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதேபோலே 35-45 வயது பிரிவு பெண்கள், ஓய்வூதியத் திட்டமிடல் குறித்து கவனமாக பரிசீலிக்கின்றனர்.
பெருநகரங்களில் சம்பாதிக்கும் பெண்களில் 51% பேர் தங்களுடைய முதலீடுகளில் அதிக அளவை நிரந்தர வைப்பு மற்றும் சேமிப்புக் கணக்குகளில் செய்தால், 16% மகளிர் தங்கத்திலும், 15% பெண்கள் பரஸ்பர நிதிகளிலும், 10% பேர் ரியல் எஸ்டேட்டிலும், பங்குகளில் வெறும் 7% பேர் மட்டுமே முதலீடு செய்கின்றனர்.
குறிப்பாக, திருமணமான பெண்களில் 43 சதவிகிதத்தினர், தங்களை சார்ந்து வசிப்பவர்கள் இருந்தால் தங்களுடைய வருமானத்தில் 10-29% முதலீட்டுக்கு ஒதுக்குகிறார்கள். இதற்கு மாறாக, திருமணமான பெண்களில் 25 சதவிகிதத்தினர், தங்கள் வருமானத்தில் பாதிக்கு மேல் முதலீடு செய்கின்றனர்.
அது மட்டுமல்ல, எந்த பகுதியில் வசிக்கும் பெண்கள் என்பதும் நிதி திட்டமிடலில் முக்கியமான விஷயமாக இருக்கிறது. உதாரணமாக, ஹைதராபாத் மற்றும் மும்பையில் வசிக்கும் பெண்கள் கிரெடிட் கார்டு அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். மும்பையில் 96% பெண்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துகின்றனர். அதே நேரத்தில் கொல்கத்தாவில் 63% பெண்கள் மட்டுமே கடன் அட்டைகளை பயன்படுத்துகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ