பில்லியன் அமெரிக்க டாலர் sovereign bondஐ திருப்பிச் செலுத்தும் இலங்கை! காரணம் என்ன?

இந்த வாரத்துடன் காலக்கெடு முடிவடைய வேண்டியிருந்த ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக் கொண்ட sovereign bondஐ (international sovereign bond (ISB)) திருப்பிச் செலுத்தியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 9, 2020, 12:10 AM IST
  • ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக் கொண்ட sovereign bondஐ இலங்கை மத்திய வங்கி திருப்பிச் செலுத்தியுள்ளது.
  • திங்கட்கிழமையன்று இலங்கையின் இறையாண்மை கடன் மதிப்பீட்டை இரண்டு புள்ளிகள் அளவுக்கு Moody's குறைத்தது.
பில்லியன் அமெரிக்க டாலர் sovereign bondஐ திருப்பிச் செலுத்தும் இலங்கை! காரணம் என்ன? title=

இந்த வாரத்துடன் காலக்கெடு முடிவடைய வேண்டியிருந்த ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக் கொண்ட sovereign bondஐ (international sovereign bond (ISB)) திருப்பிச் செலுத்தியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமையன்று இலங்கையின் இறையாண்மை கடன் மதிப்பீட்டை இரண்டு புள்ளிகள் அளவுக்கு Moody's குறைத்தது. அதையடுத்து இலங்கை அவசர அவசரமாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.  

கொரோனா வைரஸ் பெருந்தொற்று, தீவு தேசமான இலங்கையின் பொருளாதார இன்னல்களை அதிகப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, இலங்கை "பி 2" (உயர் கடன் ஆபத்து) இலிருந்து "Caa1" (மிக அதிக கடன் ஆபத்து) என்ற பட்டியலுக்கு மாற்றப்பட்டது.  

"அதாவது, இலங்கையின் வெளிநாட்டு கடன்களை அந்நாட்டு அரசாங்கத்தால் tதிருப்பச் செலுத்த முடியுமா என்ற சந்தேகம் எழுவதை தவிர்ப்பதற்காக, இலங்கை இந்த இக்கட்டான நிலையை சமாளிக்கும் வகையில் செயல்பட்டுள்ளது. இதன் மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்கும் என்பதோடு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கை அரசின் திறன் மற்றும் அதன் கடனை திருப்பிச் செலுத்தும் என்ற ஆக்கப்பூர்வமான எண்ணத்தை முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தும்" என்று இலங்கையின் மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது .

உள்நாட்டு அந்நிய செலாவணி சந்தை ஏற்கனவே சாதகமாக பதிலளித்துள்ளது. மேலும், இந்த கடனை திருப்பி செலுத்தும் நடவடிக்கை இலங்கையின் பொருளாதாரத்தில் சமீபத்திய சாதகமான முன்னேற்றங்களுக்கு கட்டியம் கூறுவதக இருக்கிறது.

Also Read | போலந்தில் கண்டுபிடிக்கப்பட்ட நாஜி கப்பல் அம்பர் அறை புதையல் மர்மத்தை தீர்க்குமா?  

"இலங்கை அரசாங்கமும், நாட்டின் மத்திய வங்கியும் மேற்கொண்ட செயலூக்க நடவடிக்கைகள் ஆக்கப்பூர்வமான விளைவுகளை கொடுத்திருப்பதால், சந்தையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒரு பில்லியன் டாலர் ஐ.எஸ்.பி. கடனை திருப்பிச் செலுத்தியுள்ளதாக கூறும் இலங்கை அரசாங்கம், 2021 ஜூலைக்கு முன்னர் நாடு திருப்பி செலுத்த வேண்டிய பெரிய கடன் ஏதும் இல்லை என்று கூறியது.

Moody's Investors Service, உரிய காலத்திற்கு முன்னதாகவே, தங்கள் நாட்டின் கடன் வாங்கும் திறனை மதிப்பிடும் புள்ளிகளை குறைத்தது நியாயமற்றது என்று இலங்கை அரசு கூறுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) பணவீக்கம், மற்றும் ஜப்பானிய மற்றும் சீன பத்திரங்களின் எதிர்பார்ப்பு சீனாவின் சிண்டிகேட் கடன் என பல விஷயங்களை இதற்கு இலங்கை அரசு மேற்கோள் காட்டி, தனது கடன்களை திருப்பி செலுத்தும் திறனை இலங்கை எடுத்துரைத்தது.   

எதிர்வரும் ஆண்டுகளில் இலங்கை வெளிநாடுகளில் இருந்து பெற்ற  கடன்களை, திருப்பி செலுத்த்த் தேவையான நிதி ஆதாரங்கள் குறைவாகவே உள்ளதாக மூடிஸ் கூறியது.

இலங்கையின் கடனை திருப்பிச் செலுத்தும் திறனை மூடிஸ் குறைத்ததைத் தொடர்ந்து, கூட்டு முயற்சிகள் மூலம் நாட்டில் அவசர பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்தன.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News