Gold Bond Scheme: மலிவு விலையில் தங்கம் வாங்க டிசம்பர் 22 வரை சான்ஸ் இருக்கு..!!

Sovereign Gold Bond Scheme 2023-24 Series III:

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 18, 2023, 01:02 PM IST
  • ஆன்லைனில் முதலீடு செய்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால், 50 ரூபாய் தள்ளுபடி.
  • குறைந்தபட்சம் 1 கிராம் தங்கம் மற்றும் அதிகபட்சம் 4 கிலோ தங்கம் வாங்கலாம்.
  • தங்கப் பத்திர முதலீட்டின் முதிர்வு காலம் 8 ஆண்டுகள்.
Gold Bond Scheme: மலிவு விலையில் தங்கம் வாங்க டிசம்பர் 22 வரை சான்ஸ் இருக்கு..!! title=

Sovereign Gold Bond Scheme 2023-24 Series III: மீண்டும் அரசு திட்டத்தின் கீழ் தங்கத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பு வந்துள்ளது.  தங்கப் பத்திர விற்பனை திட்டம் (Sovereign Gold Bond scheme - SGB), இன்று, அதாவது   டிசம்பர் 18 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் தொடங்கியுள்ளது. இதில் நீங்கள் டிசம்பர் 22 ஆம் தேதி வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் கீழ், இந்த முறை ஒரு கிராம் தங்கம் வாங்க ரூ.6,199 செலவழிக்க வேண்டும். இந்த விலை சந்தையில் தங்கத்தின் விலையை விட குறைவாக உள்ளது. தங்க பத்திர விலை IBJA இன் வெளியிடப்பட்ட விகிதத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. நீங்கள் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் சவரன் தங்கப் பத்திரத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்த தங்கப் பத்திரங்கள் வங்கிகள் (சிறு நிதி வங்கிகள் மற்றும் பேமென்ட் வங்கிகள் தவிர), ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், பரிந்துரைக்கப்பட்ட தபால் நிலையங்கள் மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட் (என்எஸ்இ) மற்றும் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் (பிஎஸ்இ) போன்ற அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகள் மூலம்  விற்கப்படுகின்றன.

தங்கப் பத்திரத் திட்டத்தின் கீழ், 24 காரட் அதாவது 99.9% சுத்தமான தங்கத்தில் முதலீடு செய்ய வாய்ப்பு (Investment Tips) வழங்கப்படுகிறது. இதில், முதலீட்டுக்கு 2.50% ஆண்டு நிலையான வட்டி அரசால் வழங்கப்படுகிறது. ஆன்லைனில் தங்கப் பத்திரத்தில் பணம் செலுத்தி தங்கத்தை வாங்கினால், ரிசர்வ் வங்கி நிர்ணயித்த விகிதத்தை விட ஒரு கிராமுக்கு ரூ.50 குறைவான விலையில் தங்கம் கிடைக்கும். பணம் தேவையென்றால் கடனும் எடுக்கலாம். இந்த திட்டம் ரிசர்வ் வங்கியால் இயக்கப்படுகிறது.

மேலும் படிக்க | குறைந்த கால முதலீட்டில் அதிக வட்டி... மூத்த குடிமக்களுக்கு சிறந்த வாய்ப்பு..!!

10 கிராம் தங்கத்திற்கு பம்பர் தள்ளுபடி

ஒருவர் சவரன் தங்கப் பத்திரத் திட்டத்தில் ஆன்லைனில் முதலீடு செய்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால், அவருக்கு 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதாவது 1 கிராம் தங்கத்திற்கு ரூ.6,149 செலுத்த வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், 10 கிராம் தங்கத்திற்கு ரூ.500 தள்ளுபடியுடன் ரூ.61,490 செலுத்த வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ், நீங்கள் குறைந்தபட்சம் 1 கிராம் தங்கம் மற்றும் அதிகபட்சம் 4 கிலோ தங்கம் வாங்கலாம். இதன் முதிர்வு காலம் 8 ஆண்டுகள்.

தங்க பத்திரங்கள் முதலீட்டில் கிடைக்கும் லாபத்தின் மீதான வரி

தங்க பத்திரத்தின் முதிர்வு காலம் 8 ஆண்டுகள். அத்தகைய சூழ்நிலையில், முதிர்வு காலம் முடிந்தவுடன் லாபத்திற்கு வரி செலுத்த வேண்டியதில்லை. ஆனால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் பணத்தை எடுத்தால், நீண்ட கால மூலதன வடிவில் லாபத்தின் ஆதாயம் (LTCG)மீது 20.80 சதவீதம் வரி செலுத்த வேண்டும். .

தங்கப் பத்திரங்களின் முதல் தொடரில் அதிக வருமானம்

நவம்பர் 30 அன்று முதல் தொடர் தங்கப் பத்திரங்கள் முதிர்ச்சியடைந்தன. இந்த பத்திரம் நவம்பர் 26, 2015 அன்று ஒரு கிராமுக்கு ரூ.2,684 வெளியீட்டு விலையில் வந்தது. அதே நேரத்தில், மக்கள் முதிர்ச்சியடைந்த நிலையில் ஒரு கிராம் ரூ.6,132க்கு விற்றனர். அதன்படி, கடந்த 8 ஆண்டுகளில் முதலீட்டாளர்கள் மொத்த லாபம் 128.5 சதவீதம். அப்படிப்பட்ட நிலையில், 2015 நவம்பரில் தங்கப் பத்திரங்களில் யாராவது ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அவருக்கு இப்போது ரூ.2.28 லட்சம் கிடைத்திருக்கும்.

மேலும் படிக்க | Business Idea: குறைந்த முதலீட்டில் சிறந்த வருமானம் கொடுக்கும் ‘5’ தொழில்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News