இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: இந்த வசதி இனி கிடைக்காது

PNB Stops Incentive: பெட்ரோல் பம்பில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி பெட்ரோல், டீசல் வாங்கும் நபராக நீங்கள் இருந்தால், நிச்சயம் இந்தச் செய்தியைப் படித்து ஏமாற்றம் அடைவீர்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 17, 2022, 01:32 PM IST
  • பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி.
  • பிஎன்பி ஊக்கத்தொகையை நிறுத்தியது.
  • இந்த விதி மே மாதம் முதல் அமலுக்கு வந்தது.
இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: இந்த வசதி இனி கிடைக்காது title=

பிஎன்பி ஊக்கத்தொகையை நிறுத்துகிறது: பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது முக்கிய செய்தியாகும். பெட்ரோல் பம்பில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி பெட்ரோல், டீசல் வாங்கும் நபராக நீங்கள் இருந்தால், நிச்சயம் இந்தச் செய்தியைப் படித்து ஏமாற்றம் அடைவீர்கள். 

பெட்ரோல் பம்புகளில் எண்ணெய் வாங்குவதற்கு டிஜிட்டல் பேமெண்ட் மூலம் பணம் செலுத்துவதற்கு அளிக்கப்பட்ட 0.75 சதவீத தள்ளுபடியை பெட்ரோலியம் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் திரும்பப் பெற்றுள்ளன. 

வங்கி வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதை நிறுத்தியது

அவ்வப்போது கார்டு மூலம் பணம் செலுத்தி பெட்ரோல் டீசல் வாங்குபவர்கள் மீது இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். பொதுத்துறை பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) இந்த நன்மையை வாடிக்கையாளர்களுக்கு மாற்றுவதை நிறுத்தியுள்ளது. இது பிஎன்பி-யின் 18 கோடி வாடிக்கையாளர்களை பாதிக்கும். மே மாதம் முதல், பிஎன்பி இந்த தள்ளுபடியின் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை நிறுத்திவிட்டது.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலையில் ஊழியர்களுக்கு காத்திருக்கும் 3 பம்பர் செய்திகள் 

இந்த விதி மே மாதம் முதல் அமலுக்கு வந்தது

பெட்ரோலிய மார்க்கெட்டிங் நிறுவனங்கள் (ஓஎம்சி-கள்) இந்த வசதியை திரும்பப் பெற்றுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. பிஎன்பி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, எண்ணெய் நிறுவனங்கள் (ஐஓசி, பிபிசிஎல், எஹ்பிசிஎல்) டிஜிட்டல் முறையில் பெட்ரோல் பம்புகளில் எரிபொருள் வாங்குவதற்கு அளித்துவந்த 0.75 சதவீதம் தள்ளுபடியை வாபஸ் பெற்றதாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பிபிசிஎல்) தெரிவித்துள்ளது. மே மாதம் முதல், வாடிக்கையாளர்கள் இந்த தள்ளுபடியின் பலனை வழங்குவதை நிறுத்திவிட்டதாக பிஎன்பி தெரிவித்துள்ளது.

என்இஎஃப்டி, ஆர்டிஜிஎஸ் கட்டணங்களும் அதிகரித்துள்ளன

முன்னதாக, என்இஎஃப்டி, ஆர்டிஜிஎஸ் கட்டணங்களையும் பிஎன்பி  உயர்த்தியது. வங்கியால் செய்யப்பட்ட இந்த மாற்றம் மே 20, 2022 முதல் அமலுக்கு வந்தது. பிஎன்பி-இன் படி, ஆர்டிஜிஎஸ் கட்டணங்கள் ஆஃப்லைன் பரிவர்த்தனைகளுக்கு ரூ 24.50 ஆகவும், ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு ரூ 24 ஆகவும் மாற்றப்பட்டுள்ளன. முன்னர், கிளை அளவில் ஆஃப்லைன் பரிவர்த்தனைகளுக்கு ஆர்டிஜிஎஸ்- க்கு இந்த தொகை ரூ 20 ஆக இருந்தது.

மேலும் படிக்க | EPFO: இபிஎஃப்ஓ நாமினியை மாற்ற வேண்டுமா, இந்த வழியில் எளிதாக செய்யலாம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News