Share Market: இந்த வாரம் எப்படி இருக்கும்? எதை வாங்கலாம்? எதை தவிர்க்கலாம்?

இந்திய பொருளாதார நிபுணர்களின் கணிப்பின் படி இன்று பங்குச் சந்தை சாதகமான நிலையில் துவங்கியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 20, 2020, 10:15 AM IST
  • SENSEX வெள்ளிக்கிழமை அளவுகளிலிருந்து 280 புள்ளிகள் அதிகரித்து 37,301என்ற அளவில் இருந்தது.
  • NIFTY 80 புள்ளிகள் அதிகரித்து 10982 என்ற அளவில் காணப்பட்டது.
  • ICICI, HDFC ஆகிய வங்கிகளின் பங்குகள் நல்ல லாபத்தை ஈட்டக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றன.
Share Market: இந்த வாரம் எப்படி இருக்கும்? எதை வாங்கலாம்? எதை தவிர்க்கலாம்? title=

இந்திய பொருளாதார நிபுணர்களின் கணிப்பின் படி இன்று பங்குச் சந்தை சாதகமான நிலையில் துவங்கியுள்ளது. இன்று துவக்கத்தில், மும்பை பங்குச் சந்தையான SENSEX வெள்ளிக்கிழமை அளவுகளிலிருந்து 280 புள்ளிகள் அதிகரித்து 37,301என்ற அளவிலும் தேசிய பங்கு சந்தையான NIFTY 80 புள்ளிகள் அதிகரித்து 10982 என்ற அளவிலும் இருந்தன. ஆசிய சந்தைகள் வெள்ளியன்று குறைந்து முடிந்திருந்தாலும், அதன் தாக்கம் இல்லாமல் இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்தோடு துவங்கியுள்ளன.

பொதுவாக இந்த வாரம் சந்தைகளில் சிறிய ஏற்றம் காணப்படும் என்ற கணிப்பு இருந்தது. கடந்த மூன்று பங்குச் சந்தை நாட்களில், அதாவது சென்ற வாரம் தொடர்ந்து மூன்று நாட்களாக, SENSEX மற்றும் NIFTY தொடர்ந்து ஏற்றத்தைக் கண்டது. கோவிட்-19 தொற்று காரணமாக, உலகளவில் பொருளாதாரம் மந்தமாகிவிட்ட நிலையில், தற்போது, கோவிட் தடுப்பு மருந்திற்கான சாதகமான செய்திகள் வந்து கொண்டிருப்பது சந்தைகளில் காணப்படும் ஏற்றத்திற்கு ஒரு மிகப் பெரிய காரணமாகும்.

ALSO READ: படிவம் 26AS-ல் மாற்றம்!! இனி நீங்கள் மிக எளிதாக வருமான வரியை தாக்கல் செய்ய முடியும்

இந்திய பங்குச் சந்தையை பொறுத்த வரையில், பங்குகளை வாங்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதுவும் ஏற்றத்திற்கான ஒரு மிகப் பெரிய காரணமாகும். Bank Nifty கடந்த வாரம் இறக்கத்தைக் கண்டது. எனினும் சில வங்கி பங்குகள் லாபத்தை மீட்ட முடிந்தன.

Short Term லாபங்களுக்கான சில பங்குகள் பின்வருமாரு:

Automobile Sector:

Ashok Leyland: தற்போதைய விலை: இலக்கு:

லாக்டௌன் உள்ள போதிலும் Ashok Leyland நிறுவனம், தனது வாகனங்களில் செய்துள்ள சில மேம்பாடுகளும், வாடிகையாளார்களுக்கு அளித்துள்ள சலுகைகளும் இந்த பங்கை லாபகரமான பங்காக்குகிறது.

Pharma:

Sun Pharma: தற்போதைய விலை: 496.4, இலக்கு: 587

மருந்து நிறுவனங்களில் காணப்படும் பொதுவான சாதகமான நிலை இந்த பங்கிற்கு பெரும் ஏற்றத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

IT:

Infosys: தற்போதைய விலை: 919.5, இலக்கு: 1000

சென்ற வாரம் இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. எதிர்பார்ப்பை மிஞ்சும் அளவிற்கு முடிவுகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Banking sector-ல் ICICI HDFC ஆகிய வங்கிகளின் பங்குகள் நல்ல லாபத்தை ஈட்டக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

எனினும், இந்த வாரம், ஆசிய சந்தைகளும் ஐரோப்பிய சந்தைகளும் மந்தமான நிலையில் இருக்கலாம் என்ற செய்திகள் வந்துள்ளதால், வர்த்தகத்தில் சிறிது கவனம் தேவை. மேலும், உலக பொருளாதாரத்துடன் தொடர்புடைய துறைகளையும் பங்குகளையும் தடுப்பது நல்லது.

Trending News