வட்டியை அள்ளி வழங்கும் SBI வங்கியின் அம்ரித கலசம் FD திட்டம்... மிஸ் பண்ணாதீங்க!

பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) அம்ருத கலசம், அதாவது ‘அம்ரித் கலஷ்’ என்னும் சிறப்பு FD திட்டத்திற்கு சிறப்பான வரவேற்பு உள்ளதால் சாமானிய மக்களுக்காக SBI அம்ரித் கலாஷ் திட்டத்தை டிசம்பர் 31, 2023 வரை நீட்டித்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 14, 2023, 04:33 PM IST
  • SBI வங்கியின் 400 நாள் ‘அம்ரித் கலஷ்’ சிறப்பு FD திட்டம்.
  • அம்ரித கலசம் திட்டத்தில் டிசம்பர் 31, 2023 வரை முதலீடு செய்யலாம்.
  • கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்.
வட்டியை அள்ளி வழங்கும் SBI வங்கியின் அம்ரித கலசம் FD திட்டம்... மிஸ் பண்ணாதீங்க! title=

நம் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான, எஸ்பிஐ வங்கி, வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற அமிர்த கலசம் என்ற சிறப்பு டெபாசிட் திட்டத்தை மீண்டும் நீட்டித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்காக அற்புதமான திட்டங்களை செயல்படுத்துகிறது, இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பணத்தை பெருக்கி, தங்களது எதிர்காலத்தை பாதுகாப்பானதாக மாற்றிக் கொள்ளலாம்.  பாரத ஸ்டேட் வங்கியின் அம்ரித கலசம் திட்டம் மிகவும் பிரபலமாகி வருவதால், வங்கி அதன் கடைசித் தேதியை தொடர்ந்து நீட்டித்து வருகிறது. எஸ்பிஐயின் அம்ரித் கலச திட்டம் அதன் வாடிக்கையாளர்களின் இதயங்களில் தனி இடத்தைப் பிடித்துள்ளது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிகிறது. எனவே இந்த அம்ரித் கலாஷ் திட்டத்தில் உள்ள சிறப்பு என்ன என்பதை உங்களுக்கு கூறுவோம்.

வியக்க வைக்கும் வகையில் வருமானம் 

நீங்கள் எந்த திட்டத்தை எடுக்கச் சென்றாலும், முதல் கேள்வி எவ்வளவு வருமானம் கிடைக்கும்? எனவே முதலில் அங்கிருந்து ஆரம்பிக்கலாம். உண்மையில் இந்த திட்டம் 400 நாட்களுக்கான FD திட்டமாகும், இதில் வாடிக்கையாளர்கள் 7.5 சதவீதம் முதல் 7.6 சதவீதம் வரை வட்டி பெறுகிறார்கள். அடுத்த கேள்வி: இதற்கு எப்போது விண்ணப்பிக்கலாம்? எனவே எஸ்பிஐயின் இந்தத் திட்டத்தின் கடைசித் தேதி முன்னதாக ஆகஸ்ட் 15, 2023 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த திட்டம் டிசம்பர் 31, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது அம்ரித கலாஷ் திட்டத்தில் முதலீடு செய்ய உங்களுக்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் வரை வாய்ப்புகள் உள்ளன.

கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

எஸ்பிஐயின் அம்ரித கலசம் திட்டத்தில் முதிர்வு முடிந்த பின்னரே உங்களுக்கு வட்டி வழங்கப்படும். மறுபுறம், நீங்கள் முதிர்வு காலத்திற்கு முன்பே திரும்பப் பெற விரும்பினால், டெபாசிட் நேரத்தில் பொருந்தக்கூடிய விகிதத்தை விட 0.50% முதல் 1% வரை குறைவான வட்டியைப் பெறலாம். அதாவது, உங்களுக்கு 1 சதவீதம் குறைவான வட்டி கிடைக்கும். வருமான வரி விதிகளின்படி டிடிஎஸ் கழிக்கப்படும். இந்தச் சூழ்நிலையில், வரி விலக்கிலிருந்து விலக்கு கோர வாடிக்கையாளர் ITR ஐ தாக்கல் செய்யும் போது படிவம் 15G/15H ஐ நிரப்ப வேண்டும்.

மேலும் படிக்க | உங்களை கோடீஸ்வரர் ஆக்கும் PPF ... ‘இந்த’ டிபஸ்களை ஃபாலோ பண்ணுங்க..!

இன்றே முதலீடு செய்யுங்கள்

பிறகு எதற்காக காத்திருக்கிறீர்கள்? நீங்களும் உங்கள் பணத்தை நல்ல இடத்தில் முதலீடு செய்து நல்ல வருமானத்தைப் பெற விரும்பினால், பாரத ஸ்டேட் வங்கியின் இந்த சிறந்த திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். கடைசி தேதிக்காக காத்திருக்க வேண்டாம்.  ஏனென்றால் எவ்வளவு விரைவில் உங்கள் பணத்தை ஒரு நல்ல இடத்தில் முதலீடு செய்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் பணம் இரட்டிப்பாகும்.

SBI முதலீட்டு திட்ட  வட்டி விகிதம்

பாரத ஸ்டேட் வங்கி பொது மக்களுக்கு ரூ.2 கோடிக்கும் குறைவான தொகைகளுக்கு 3% முதல் 7% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது மற்றும் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதங்கள் 3.50% முதல் 7.50% வரை இருக்கும். 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கு வழங்கப்படும் அதிகபட்ச வட்டி விகிதம் பொது குடிமக்களுக்கு 7% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.50% ஆகும். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது கணக்கு தனது வாடிக்கையாளர்களுக்காக அவ்வப்போது புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பாரத ஸ்டேட் வங்கி மீண்டும் தனது வாடிக்கையாளர்களுக்காக பெரும் வரவேற்பை பெற்ற அம்ரித கலசம் நிலையான வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

மேலும் படிக்க | NPS விதிகளில் பெரிய மாற்றம்: இனி உங்கள் பணத்தை எடுக்க இந்த புதிய செயல்முறை அவசியம்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News