SBI Green PIN: மிகவும் பயனளிக்கும் இந்த PIN-ஐ உருவாக்கும் எளிய வழிகள் உங்களுக்காக

வாடிக்கையாளர்கள் இப்போது ஏடிஎம், இன்டர்நெட் பேங்கிங், ஐவிஆர் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற பல்வேறு சேனல்கள் மூலம் டெபிட் கார்டு பின்னை உருவாக்க முடியும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 26, 2021, 03:41 PM IST
  • கிரீன் பின் இருந்தால் பிசிக்கல் பின்னை பராமரிபதற்கான சுமை குறைகிறது.
  • OTP ஐப் பயன்படுத்தி, வாடிக்கையாளர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏடிஎம்கள் வாயிலாக டெபிட் கார்டு பின்னை அமைக்கலாம்.
  • IVR மூலம், உங்கள் டெபிட் கார்டு பின் அல்லது கிரீன் பின்னை உருவாக்குவதை SBI எளிதாக்குகிறது.
SBI Green PIN: மிகவும் பயனளிக்கும் இந்த PIN-ஐ உருவாக்கும் எளிய வழிகள் உங்களுக்காக title=

How to generate SBI Green Pin through ATM Debit Card: இந்தியாவின் மிகப்பெரிய பொது கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வாடிக்கையாளர்களுக்கு கிரீன் பின் வசதியை வழங்குகிறது. SBI-ன் க்ரீன் பின் வசதி என்பது உடனடி பின் உருவாக்கம் / மீளுருவாக்கம் ஆகியவற்றிற்கான செயல்பாடாகும். இது டெபிட் கார்டுக்கு ATM வாயிலாக ஒன் டைம் கடவுச்சொல் (OTP) மூலம் வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். OTP ஐப் பயன்படுத்தி, வாடிக்கையாளர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏடிஎம்கள் வாயிலாக டெபிட் கார்டு பின்னை அமைக்கலாம்.

SBI கிரீன் பின் எளிதானது மட்டுமல்ல, வசதியானதும் கூட. வாடிக்கையாளர்கள் இப்போது ஏடிஎம், இன்டர்நெட் பேங்கிங், ஐவிஆர் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற பல்வேறு சேனல்கள் மூலம் டெபிட் கார்டு பின்னை உருவாக்க முடியும். கிரீன் பின் என்பது காகிதமில்லாத செயல்முறையுடன் கூடிய ஒரு தனிப்பட்ட வங்கி செயல்முறையை ஊக்குவிப்பதற்கான வங்கியின் ஒரு முன்முயற்சியாகும்.

கிரீன் பின் இருந்தால் பிசிக்கல் பின்னை பராமரிபதற்கான சுமை குறைகிறது. இது ஒரு புதிய சேவை அல்ல. பல ஆண்டுகளாக இந்த முறை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SBI கிரீன் பின்னை எவ்வாறு உருவாக்குவது என்று தெரிந்து கொள்ளுங்கள்: IVR மூலம், உங்கள் டெபிட் கார்டு (Debit Card) பின் அல்லது கிரீன் பின்னை உருவாக்குவதை SBI எளிதாக்குகிறது. அதை எப்படி செய்வது என்று இங்கே தெரிந்து கொள்ளலாம்:

-SBI வங்கியில் நீங்கள் பதிவுசெய்த மொபைல் எண்ணிலிருந்து, கட்டணமில்லா எண் 800 112 211 அல்லது 1800 425 3800 ஐ டயல் செய்யுங்கள்.

-இப்போது ஏடிஎம் டெபிட் கார்டு தொடர்பான சேவைக்கு 2 ஐ அழுத்தி, பின் உருவாக்கத்திற்கு 1- ஐ அழுத்தவும்.

- நீங்கள் பதிவுசெய்த மொபைல் எண்ணிலிருந்து அழைக்கிறீர்கள் என்றால் ‘1’ ஐ அழுத்தவும், இல்லையெனில் வாடிக்கையாளர் சேவை முகவருடன் பேச ‘2 ஐ அழுத்தவும்.

-இப்போது நீங்கள் கிரீன் பின்னை உருவாக்க விரும்பும் ATM Card-ன் கடைசி 5 இலக்கங்களை உள்ளிடவும்.

-கடைசி 5 இலக்கங்களை உறுதிப்படுத்த ‘1’ ஐ அழுத்தவும்.

-உங்கள் ஏடிஎம் அட்டையின் கடைசி 5 இலக்கங்களை மீண்டும் உள்ளிட ‘2’ ஐ அழுத்தவும்.

-இப்போது உங்கள் கணக்கு எண்ணின் கடைசி 5 இலக்கங்களை உள்ளிடவும்

-கடைசி 5 இலக்கங்களை உறுதிப்படுத்த 1 ஐ அழுத்தவும்.

-கணக்கு எண்ணின் கடைசி 5 இலக்கங்களை மீண்டும் உள்ளிட ‘2’ ஐ அழுத்தவும்.

-உங்கள் பிறந்த ஆண்டை உள்ளிடவும்.

ALSO READ: ATM இல் இருந்து பண பரிவர்த்தனை குறித்து RBI எடுக்கப்போக்கும் பெரிய முடிவு!

இந்த செயல்முறைக்கு பின்னர் உங்கள் உங்கள் கிரீன் பின்னை வெற்றிகரமாக உருவாக்கியிருப்பீர்கள். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு கிரீன் பின் அனுப்பப்படும்.

கீழேயுள்ள வழிகளைப் பின்பற்றி, உங்கள் SBI டெபிட் கார்டு ஏடிஎம் பின்னை எஸ்எம்எஸ் வழியாக மாற்றலாம்:

-உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 'PIN XXXX YYYY 567676' என ஒரு எஸ்எம்எஸ் அனுப்பவும். XXXX என்பது ஏடிஎம் அட்டை எண்ணின் கடைசி 4 இலக்கங்கள் மற்றும் YYYY வங்கி கணக்கு எண்ணின் கடைசி 4 இலக்கங்களாகும்.

-உங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு OTP அனுப்பப்படும். OTP உடன் உங்கள் டெபிட் கார்டு PIN ஐ மாற்ற நீங்கள் ஒரு SBI ATM-க்கு செல்ல வேண்டும். நினைவில் கொள்ளுங்கள், OTP 2 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

ALSO READ: 5, 10, 100 ரூபாய் நோட்டு இனி செல்லாதா? RBI வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News