Reliance Jio அதிக பணம் செலவிட வேண்டியிருக்கும்! புதிய விலை மற்றும் சலுகைகளை அறிக!

இந்த திட்டத்தின் விலை ரூ .222 லிருந்து ரூ .255 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இப்போது இந்த ஜியோ திட்டம் 33 ரூபாய் அதிகமான விலை கொடுக்க வேண்டியிருக்கும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 19, 2020, 07:00 PM IST
Reliance Jio அதிக பணம் செலவிட வேண்டியிருக்கும்! புதிய விலை மற்றும் சலுகைகளை அறிக! title=

Jio 222 Plan to price change to Jio 255 Plan: இந்தியத் தொலைத் தொடர்பு நிறுவனமான ஜியோ தனது ரூ .222 பாப்புலர் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டத்தை ஜூன் மாதத்தில் ஜியோ அறிமுகப்படுத்தியது. ஆனால் இப்போது பயனர்கள் இந்த ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) திட்டத்திற்கு அதிக பணம் செலவிட வேண்டியிருக்கும். இந்த ஜியோ திட்டத்தின் விலை எவ்வளவு அதிகரித்துள்ளது என்பது குறித்த தகவல்களை உங்களுக்கு தருகிறோம்.

இந்த திட்டத்தின் விலை ரூ .222 லிருந்து ரூ .255 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இப்போது இந்த ஜியோ திட்டம் 33 ரூபாய் அதிகமான விலை கொடுக்க வேண்டியிருக்கும். இந்த திட்டம் இப்போது மைஜியோ (My Jio) பயன்பாட்டில் ரூ .255 விலை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.

இந்த திட்டத்தை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் புதிய விலையுடன் ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஜியோ பயன்பாட்டைத் திறந்த பிறகு, நீங்கள் ரீசார்ஜ் செய்ய விரும்பினால், உங்கள் எண்ணை உள்ளிடும்போது, Exclusive Limited Period Upgrade Offer என்ற பட்டியலில் இந்த திட்டங்களைக் குறித்து விவரங்களை காண்பீர்கள். 

ALSO READ |  Jio ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்தின் வேகம் 1 Mbps ஆக குறைப்பு!

ரிலையன்ஸ் ஜியோ ரீசார்ஜ் திட்டங்கள்: ஜியோ 255 திட்ட விவரங்களை அறிக
இந்த திட்டத்தின் விலை நிச்சயமாக மாறிவிட்டது, ஆனால் இந்த திட்டத்துடன் கிடைக்கும் நன்மைகள் முன்பு போலவே இருக்கும். நீங்கள் ட்ரீம் 11 ஐபிஎல் 2020 (Dream 11 IPL 2020) போட்டிகளையும் பார்க்க விரும்பினால், டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி (Disney+ Hotstar VIP) இலவச வருடாந்திர சந்தாவும் இந்த திட்டத்துடன் வழங்கப்படுகிறது.

ஒருவேளை நீங்கள் இந்த திட்டத்தை வாங்கும் பட்சத்தில் ஐபிஎல் போட்டிகளை இலவசமாக பார்க்க முடியும். இந்த திட்டத்தின் மூலம், பயனர்களுக்கு குரல் அழைப்பு வசதி கிடைக்காது. ஏனெனில் இது தரவு வழங்கும் தொகுப்பாகும். இந்த திட்டத்தில் மொத்தம் 15 ஜிபி தரவு வழங்கப்படுகிறது.

ALSO READ | உங்கள் ஏரியாவில் Jio Fiber கிடைப்பதை எவ்வாறு தெரிந்துக் கொள்ளலாம்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Trending News