Debit-Credit Card Rules: கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மாற்றம் குறித்த தகவல் வெளியாகியிருப்பதால், இந்த கார்டுகளை பயன்படுத்துவபவர்கள் இந்த தகவலை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் அக்டோபர் 1 முதல் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அக்டோபர் 1 முதல் புதிய விதி
அக்டோபர் 1 முதல், வங்கித் துறை தொடர்பான விதிகளில் பெரிய மாற்றம் வரப்போகிறது. இதற்கான உத்தரவையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. கார்டு-ஆன்-ஃபைல் டோக்கனைசேஷன் (சிஓஎஃப் கார்டு டோக்கனைசேஷன்) விதிகளை வரும் 1ம் தேதி முதல் கொண்டு வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | SBI கிரெடிட் கார்டு வைத்துள்ளவர்களுக்கு ரூ.6 ஆயிரம்! நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்
வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு
டோக்கனைசேஷன் முறையில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு, கார்டுதாரர்களுக்கு கூடுதல் வசதிகளும் பாதுகாப்பும் கிடைக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கார்டு பயன்படுத்துபவர்களின் கட்டண முறையும் மேம்படுத்தப்படுகிறது.
மோசடிகளுக்கு தடை
ரிசர்வ் வங்கி அளித்துள்ள தகவலின்படி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்துவது முன்பை விட பாதுகாப்பானது என்பதே புதிய விதிகளின் நோக்கமாகும். கடந்த சில நாட்களாக, கிரெடிட்-டெபிட் கார்டுகளில் மோசடி நடப்பதாகப் பல புகார்கள் வந்தன. ஆனால் புதிய விதி அமலுக்கு வந்த பிறகு, இந்த மோசடிகளுக்கு வாய்ப்புகள் மிக குறைவு. ஆன்லைன், பாயின்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) அல்லது டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணப் பரிமாற்றம் இன்னும் மேம்படும்.
டோக்கன்களாக மாற்றலாம்
ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு யூசர்களின் முழு தரவுகளும் டோக்கன்களாக மாற்றப்படும். இதன்மூலம் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் பிரத்யேகமாக மறைத்து வைக்கப்படும். கார்டுகளை டோக்கன் முறைக்கு மாற்றுவதற்கு வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைக்க வேண்டும். அவ்வாறு கோரிக்கை வைத்து டோக்கன்களாக மாற்றப்படும் கார்டுதாரர்கள் இதற்காக எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
மேலும் படிக்க | கிரெடிட் கார்டு தொகையை EMI ஆக மாற்றுவதால் யாருக்கு லாபம்? தெரிந்து கொள்ளுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ