வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு... ஆகஸ்டில் 13 நாட்கள் வங்கி விடுமுறை

Bank Holidays: ஆகஸ்டில் 13 நாட்கள் வங்கி விடுமுறை என்பதால், உங்கள் வங்கி பணியை இன்றே திட்டமிடுங்கள்

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 27, 2022, 01:00 PM IST
  • ஆகஸ்ட் 2022 இல் 18 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
  • மாநில வாரியாக விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
  • ஆன்லைன் நிதி சேவைகள் வழக்கம் போல செயல் படும்.
வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு... ஆகஸ்டில் 13 நாட்கள் வங்கி விடுமுறை title=

Bank Holidays in August 2022 :  ஜூலை மாதம் முடிவடைந்து ஆகஸ்ட் தொடங்க உள்ள நிலையில், ஆக்ஸ்ட் மாதத்தில் பல பண்டிகைகள் இருப்பதால் விடுமுறைகள் அதிகம். இந்த முறை ஆகஸ்ட் மாதம் முஹர்ரம், ரக்ஷா பந்தன், சுதந்திர தினம், கிருஷ்ண ஜென்மாஷ்டமி மற்றும் விநாயகர் சதுர்த்தி போன்ற பல பண்டிகைகள் வருகின்றன அவற்றில் வங்கி விடுமுறை இருக்கும்.ஆகஸ்ட் மாதத்தில் வங்கி தொடர்பான முக்கியமான வேலைகள் ஏதேனும் இருந்தால், இப்போதிருந்தே திட்டமிடுங்கள்.  ரிசர்வ் வங்கி வெளியிட்ட நாட்காட்டியின்படி, ஆகஸ்ட் மாதத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளையும் சேர்த்து 18 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது. மாநிலங்கள் மற்றும் நகரங்களை பொறுத்து வங்கி விடுமுறைகள் வேறுபடுகின்றன. இருப்பினும் ஆன்லைன் நிதி சேவைகள் வழக்கம் போல செயல்படும் என்பதால் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது. 

வங்கி விடுமுறைகள் வெவ்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படும் திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகளைப் பொறுத்தது. இந்த மாதம் சனி, ஞாயிறு என ஆறு நாட்கள் வார விடுமுறை. இது தவிர, பல்வேறு மாநிலங்களில்,  மேலும் 12 விடுமுறைகள் உள்ளன. ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறைகளின் பட்டியலைப் பார்ப்போம்...

மேலும் படிக்க | ஆகஸ்ட் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: உங்கள் வாழ்வில் இவற்றின் தாக்கம் என்ன?

மாநிலங்களின்படி ஆகஸ்ட் மாதத்தில் வங்கி விடுமுறை பட்டியல்

ஆகஸ்ட் 1 - துருபகா ஷீ-ஜி (சிக்கிமில் விடுமுறை)

ஆகஸ்ட் 7 - ஞாயிறு (வார விடுமுறை)

ஆகஸ்ட் 8 - முஹரம் (ஜம்மு மற்றும் காஷ்மீரில் விடுமுறை)

ஆகஸ்ட் 9 - முஹரம் (புது டெல்லி, லக்னோ, ஜெய்ப்பூர், ஹைதராபாத், போபால், சென்னை, கொல்கத்தா, மும்பை, பாட்னா, ராய்ப்பூர், நாக்பூர் மற்றும் ராஞ்சி போன்றவற்றில் விடுமுறை)

ஆகஸ்ட் 11 - ரக்ஷா பந்தன் (அனைத்து மாநிலங்களிலும் விடுமுறை)

ஆகஸ்ட் 12 - ரக்ஷா பந்தன் (கான்பூர்-லக்னோ)

ஆகஸ்ட் 13 - இரண்டாவது சனிக்கிழமை (விடுமுறை)

ஆகஸ்ட் 14 - ஞாயிறு (வார விடுமுறை)

ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம்

ஆகஸ்ட் 16 - பார்சி புத்தாண்டு (மும்பை-நாக்பூரில் விடுமுறை)

ஆகஸ்ட் 18- கோகுலாஷ்டமி (அனைத்து இடங்களிலும் விடுமுறை)

ஆகஸ்ட் 19 - ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி (அகமதாபாத், போபால், சண்டிகர், சென்னை, காங்டாக், ஜெய்ப்பூர், ஜம்மு, கட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர்)

ஆகஸ்ட் 20 - கிருஷ்ண அஷ்டமி (ஹைதராபாத்)

ஆகஸ்ட் 21 - ஞாயிறு (வார விடுமுறை)

ஆகஸ்ட் 27 - நான்காவது சனிக்கிழமை (வார விடுமுறை)

ஆகஸ்ட் 28: ஞாயிறு (வார விடுமுறை)

ஆகஸ்ட் 29: ஸ்ரீமந்த் சங்கர்தேவ் தேதி (கௌஹாத்தி)

ஆகஸ்ட் 31: விநாயக சதுர்த்தி (குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா)

(ஆதாரம்: ரிசர்வ் வங்கி வெளியிட்ட காலண்டர்)

மேலும் படிக்க | 7th Pay Commission: ஆகஸ்ட் மாதம் ஊழியர்களுக்கு கிடைக்கும் 4 பம்பர் செய்திகள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News