வங்கிகளுக்கு செக் வைத்த ரிசர்வ் வங்கி: 5 புதிய விதிகள்...குஷியில் கஸ்டமர்ஸ்!!

RBI Update: இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஒரு முக்கியமான புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது. இதில் சிவில் மதிப்பெண்களில் பல புதிய விதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 23, 2023, 05:37 PM IST
  • வாடிக்கையாளருக்கு சிவில் ஸ்கோர் செக் செய்யப்படும் தகவலை வங்கிகள் அனுப்ப வேண்டும்.
  • கடன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கான விளக்கம் அவசியம்.
  • வாடிக்கையாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இலவச முழு கடன் அறிக்கையை வழங்க வேண்டும்.
வங்கிகளுக்கு செக் வைத்த ரிசர்வ் வங்கி: 5 புதிய விதிகள்...குஷியில் கஸ்டமர்ஸ்!! title=

கடந்த சில வாரங்களில், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நிதி விதிகளில் பல மாற்றங்களைச் செய்துள்ளது. ரிசர்வ் வங்கி வெவ்வேறு வங்கிகளுக்கு வெவ்வேறு எச்சரிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி CIBIL ஸ்கோர் குறித்த ஒரு முக்கியமான புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது. சிபில் ஸ்கோர் (CIBIL Score) வாடிக்கையாளரின் கடன் ஹிஸ்டரி, அதாவது கடன் வரலாற்றைப் பயன்படுத்தி கிரெடிட் ஸ்கோரை உருவாக்குகிறது. இந்த மதிப்பெண்ணை கணக்கிட்ட பின்னரே வாடிக்கையாளருக்கு கடன் வழங்கப்படுகிறது.

26 ஏப்ரல் 2024 முதல் CIBIL மதிப்பெண் விதிகளில் மாற்றம் இருக்கும்

இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) சமீபத்தில் ஒரு முக்கியமான புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது. இதில் சிவில் மதிப்பெண்களில் பல புதிய விதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து புதிய விதிகளும் 26 ஏப்ரல் 2024 முதல் நாடு முழுவதும் பொருந்தும். இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சில காலமாக கடன் மதிப்பெண்கள் தொடர்பாக நாடு முழுவதிலுமிருந்து பல புகார்களைப் பெற்று வருகின்றது. ஆகையால், இதன் காரணமாக வங்கி, புதிய விதிகளை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. 

கிரெடிட் பீரோக்களின் இணையதளத்தில் புகார்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு புதிய விதிகளின் பட்டியலை ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ளது. புதிய விதிகள் 26 ஏப்ரல் 2024 முதல் நாடு முழுவதும் பொருந்தும். இந்த விதிகளின்படி, வாடிக்கையாளர்கள் வங்கிகளில் கடன் பெறுவார்கள்.

இந்த ஐந்து புதிய விதிகள் வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்

1. வாடிக்கையாளருக்கு சிவில் ஸ்கோர் செக் செய்யப்படும் தகவலை வங்கிகள் அனுப்ப வேண்டும்

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடன் தகவல் நிறுவனங்களுக்கு புதிய விதியை உருவாக்கியுள்ளது. வாடிக்கையாளரின் கடன் அறிக்கையை சரிபார்க்கும் போது, ​​அனைத்து வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் வாடிக்கையாளருக்கு இந்த தகவலை வழங்க வேண்டும். நிறுவனம் விரும்பினால், இந்த தகவலை வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம்.

இதன் மூலம் அனைத்து வாடிக்கையாளர்களும் வங்கி அல்லது NBFC மூலம் கிரெடிட் ஸ்கோரைக் கணக்கிடுவது பற்றிய தகவலைப் பெறுவார்கள். இதன் காரணமாக கிரெடிட் ஸ்கோர் தொடர்பான புகார்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. கடன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கான விளக்கம் அவசியம்

வாடிக்கையாளரின் கடன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், அது குறித்து வாடிக்கையாளருக்கு நிறுவனம் விரிவாகத் தெரிவிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் அடுத்த விதி கூறுகிறது. இதன் மூலம், வாடிக்கையாளர் தனது கோரிக்கை ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதை எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

மேலும், ஒவ்வொரு கடன் நிறுவனமும் வாடிக்கையாளர்களின் கடன் கோரிக்கை நிராகரிப்புக்கான காரணங்களின் விரிவான பட்டியலை பராமரிக்க வேண்டும். இந்த பட்டியல் அனைத்து கடன் நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட வேண்டும், இதனால் வாடிக்கையாளரின் கிரெடிட் ஸ்கோர் மற்றும் அவரது கடன் வரலாறு தரவு பல்வேறு கடன் நிறுவனங்களிலும் இருக்கும்.

மேலும் படிக்க | ICICI வங்கி வட்டி விகிதங்கள் உயர்ந்தன! FD வைத்திருப்பவர்களுக்கு முக்கிய செய்தி

3. வாடிக்கையாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இலவச முழு கடன் அறிக்கையை வழங்க வேண்டும்

இந்திய ரிசர்வ் வங்கி அதன் அடுத்த விதியில், வங்கிகள்  தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவச முழுமையான கடன் அறிக்கையைத் தயாரித்து அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் முழுமையான கடன் அறிக்கை கிடைத்துவிடும். மேலும் அவர்களின் முழுமையான தரவுகளும் நிறுவனத்திடம் கிடைக்கும். இதன் அடிப்படையில், கடன் நிறுவனங்கள் வாடிக்கையாளரின் முழுமையான கடன் அறிக்கையைப் பார்த்து கடன் வழங்க முடியும்.

4. டீஃபால்ட் அறிக்கையை வழங்குவதற்கு முன் வாடிக்கையாளருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்

ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, வாடிக்கையாளரை கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள், ஆதாவது டீஃபால்டர்கள் என்று அறிவிக்கும் முன் நிறுவனங்கள் அதை பற்றி வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் வாடிக்கையாளர் கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தக்கூடும். மேலும் டீஃபால்டர் ஆவதையும் தவிர்க்கலாம். மேலும் இதன் மூலம் வாடிக்கையாளரின் கிரெடிட் ஸ்கோரிலும் எந்தவிதமான பாதகமான விளைவும் ஏற்படாது. மேலும் கிரெடிட் ஸ்கோர் தொடர்பான சிக்கல்களை நோடல் அலுவலகங்கள் எளிதில் தீர்க்க முடியும்.

கடனைத் திருப்பிச் செலுத்தாத நபர்களை டீஃபால்டராக அறிவிக்கும் முன்னர் அனைத்து கடன் வழங்கும் நிறுவனங்களும் இது குறித்து வாடிக்கையாளருக்கு மின்னஞ்சல் அல்லது செய்தி மூலம் தெரிவிக்க வேண்டும் என்று நிறுவனங்களுக்கு ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது. இதனால் பல புகார்கள் விரைவாக தீர்க்கப்படும்.

5. புகார்கள் 30 நாட்களுக்குள் தீர்க்கப்படாவிட்டால் ஒரு நாளைக்கு ரூ.100 அபராதம்

ஒவ்வொரு வாடிக்கையாளர் புகாரையும் 30 நாட்களுக்குள் தீர்க்க கடன் தகவல் நிறுவனங்களை ஆர்பிஐ கட்டாயப்படுத்தியுள்ளது. கிரெடிட் தகவல் நிறுவனங்கள் வாடிக்கையாளர் புகார்களை 30 நாட்களுக்குள் தீர்க்கவில்லை என்றால், அவர்கள் வாடிக்கையாளருக்கு ஒரு நாளைக்கு 100 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். புகார்களைத் தீர்ப்பதில் தாமதம் ஏற்படுவதால், கடன் தகவல் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய அபராதம் அதிகமாக இருக்கும்.

புகாரை சரி செய்ய, கடன் வழங்கும் நிறுவனத்திற்கு 21 நாட்களும், மக்கள் கடன் பணியகத்திற்கு 9 நாட்களும் கிடைக்கும். வாடிக்கையாளர் புகார்களைத் தீர்க்க இரு தரப்பும் இணைந்து செயல்பட வேண்டும். இதனால், ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்கள் புகார்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு பெறுவார்கள்.

இந்த வழியில், இந்திய ரிசர்வ் வங்கி கிரெடிட் ஸ்கோர் (Credit Score) தொடர்பான பல விதிகளை மாற்றியுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து கடன் தகவல் நிறுவனங்களும் இந்த ஐந்து கடுமையான விதிகளை பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும். இந்த ஐந்து விதிகளின் உதவியுடன், கடன் தகவல் நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் தொடர்பான தரவுகளை நல்ல முறையில் பராமரிக்கலாம், புகார்கள் மற்றும் சிக்கல்களை சரியான நேரத்தில் தீர்க்கலாம். 

மேலும் படிக்க | NPS Withdrawal Rules: பணத்தை எடுக்க புதிய விதிகள் என்ன? இதற்கு வரம்பு உள்ளதா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News