மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான வரம்பை உயர்த்தப்போகிறது. ஹை-எண்டு டெபிட் கார்டுக்கான அதிகபட்ச டிரான்ஸாக்ஷன்களின் எண்ணிக்கையை மாற்றுவதாக பிஎன்பி வங்கி தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிஎன்பி வங்கி தனது இணையதளத்தில், வாடிக்கையாளர் மாஸ்டர்கார்டு, ரூபே மற்றும் விசா கோல்டு டெபிட் கார்டுகளின் அனைத்து பிளாட்டினம் வகைகளுக்கும் தினசரி ஏடிஎம் பணம் எடுக்கும் வரம்பு ரூ.50,000 முதல் ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும். பிஓஎஸ் வரம்பு ரூ.1,25,000-லிருந்து ரூ.3 லட்சமாக உயரும். விசா சிக்னேச்சர் டெபிட் கார்டுகள் மற்றும் ரூபே செலக்ட் கார்டுகளுக்கு பணம் எடுக்கும் வரம்பு ரூ. 50,000 முதல் ரூ. 1,50,000 உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | உங்கள் PF கணக்கில் வட்டி வரவு வைக்கப்பட்டதா? சரிபார்க்க வழிகள்!
இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் ஆப், பிஎன்பி ஏடிஎம்கள், ஐவிஆர் அல்லது அடிப்படைக் கிளைக்குச் செல்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகளவில் டிரான்ஸாக்ஷன்கள் செய்து கொள்ளலாம் என்று வங்கி தெரிவித்துள்ளது. மேலும் வங்கி தனது வாடிக்கையாளர்களை டெபிட் கார்டு மற்றும் யூபிஐ பின் நம்பரை யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. தற்போது பிஎன்பி வங்கியின் தினசரி பணத்தை எடுக்கும் அளவு ரூ.25,000, ஒருமுறை பணம் எடுக்கும் வரம்பு ரூ.20,000 மற்றும் தினசரி பிஓஎஸ் டிரான்ஸாக்ஷனுக்கான வரம்பு ரூ.60,000 ஆகும்.
அதேசமயம் இந்த வரம்பானது ரூபே மற்றும் மாஸ்டர் கிளாசிக் டெபிட் கார்டு பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும். கோல்ட் டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தினசரி மற்றும் ஒரு முறை பணம் எடுப்பதற்கான வரம்புகள் முறையே ரூ.1,25,000 மற்றும் ரூ.20,000 ஆகும். மேலும் தனது வாடிக்கையாளர்களுக்கு சில விழிப்புணர்வையும் வங்கி வழங்கியுள்ளது, அதன்படி மோசடி கும்பல்கள் மக்களை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு ஆர்பிஐ, வருமான வரி, வங்கி ஊழியர்கள் பேசுவதாக கூறி, பின் நம்பர் அல்லது ஓடிபி போன்ற தகவல்களைப் பெற்று மோசடியில் ஈடுபடுகின்றனர். இதுபோன்று அழைப்போ அல்லது செய்தியோ வந்தால் வாடிக்கையாளர்கள் அதற்கு பதிலளிக்க வேண்டாம் என்று பிஎன்பி வங்கி அறிவுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க | EPFO News: அதிகரிக்கிறதா இபிஎஃப்ஓ சந்தாதாரர்களின் ஓய்வூதியம்? சமீபத்திய அப்டேட் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ