புதுச்சேரி: புதுச்சேரி அரசு அனைத்து வகையான மதுபானங்களின் விலையையும் 20 சதவீதம் உயர்த்தியுள்ளது. புதிய விலைகள் ஜூலை 15 முதல் அமலுக்கு வரும் என்று கலால் துறை இன்று (ஜூலை 14) அறிவித்தது. இருந்தபோதிலும் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது விலை மலிவாகவே இருக்கும்.
புதுச்சேரியில் மதுபானங்களின் விலை அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களை விட குறைவாகவே இருக்கும்.
புதுச்சேரி நிர்வாகம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மதுபானம் மீதான 7.5 சதவீத சிறப்பு கோவிட் வரியை ரத்து செய்தது, இதனால் யூனியன் பிரதேசத்தில் மது விலை குறைந்தது. புதுவையின் பொருளாதாரம் பெரும்பாலும் சுற்றுலாவையே சார்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read | Puducherry அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன
ஏப்ரல் 7ஆம் தேதி முதல் சிறப்பு கலால் வரியை முடிவுக்கு கொண்டுவருவதற்கான கலால் துறையின் முன்மொழிவுக்கு லெப்டினன்ட் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்தார். அதைத் தொடர்ந்து, யூனியன் பிரதேசத்தில் மதுபானம் மலிவானது.
கொரோனா தொற்றுநோய் கடந்த ஆண்டு மே மாதத்தில் உச்சத்தில் இருந்தபோது, பிற மாநிலங்களில் இருந்து குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து, புதுச்சேரிக்கு மக்கள் வருவதை தடுக்கும் பொருட்டு மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டது. புதுவையிலும் அண்டை மாநிலங்களின் விலைக்கு ஏற்ப கூடுதல் கட்டணம் கடந்த ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்டது.
சிறப்பு வரிகளை குறைத்தே அனைத்து பப்கள், சில்லறை மதுபான விற்பனையாளர்கள் மற்றும் உணவகங்கள் மதுவை விற்பனை செய்யவேண்டும் என்றும், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் புதுச்சேரி ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்ற பிறகே, சிறப்பு வரி நீக்கப்பட்டது.
Also Read | Prashant Kishor: பாஜகவுக்கு எதிரான காங்கிரஸின் வியூகம் தொடங்கிவிட்டதா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR