MSME துறையின் சிக்கல்களுக்கு துரிதத் தீர்வு அளிக்கும் ‘Champions’...

MSME எனப்படும் குறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு பல வகையிலும் உதவும் வகையில் 'Champions’ என்ற புதிய போர்டலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

Last Updated : Jun 2, 2020, 09:22 AM IST
MSME துறையின் சிக்கல்களுக்கு துரிதத் தீர்வு அளிக்கும் ‘Champions’... title=

MSME எனப்படும் குறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு பல வகையிலும் உதவும் வகையில் 'Champions’ என்ற புதிய போர்டலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

Micro, Small & Medium Enterprise (MSME) எனப்படும் குறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் விதமாக 'Champions’ போர்டலை பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று அறிமுகம் செய்து வைத்தார். PIB தகவல்கள் படி தொழிற்துறை சவால்களை எதிர்கொள்ள உதவுவதற்கும், அவர்களை தேசிய மற்றும் சர்வதேச அளவில் பங்கேற்பதற்கும் உதவி செய்யும் பொருட்டு, 'Champions(champions.gov.in)' தளம் தொடங்கப்பட்டுள்ளது.

READ | நிதி அமைச்சரின் அறிவிப்பில் புலம்பெயர்ந்த ஏழை தொழிலாளர்களுக்கு எதுவும் இல்லை: சிதம்பரம்...

சிறிய அளவிலான நிறுவனங்களை வலுப்படுத்தி, தேசிய வலிமையை அதிகரிப்பதற்கான நவீன செயல்முறைகளின் ஒரு பகுதியாக Champions மற்றும் இணக்கமான பயன்பாடு என்ற போர்ட்டலை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார் எனவும் PIB தகவல் தெரிவிக்கிறது.

இந்த போர்ட்டல் MSME-இன் சிறிய அலகுகளுக்கு பல வகையிலும் உதவி, அவர்களை சாம்பியனாக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இது போன்ற போர்ட்டல் துவங்கப்படுவது இதுவே முதன்முறையாகும். இந்த போர்ட்டல், மத்திய அரசின், மையப்படுத்தப்பட்ட பொது குறை தீர்க்கும் மற்றும் கண்காணிப்பு அமைப்பு (CPGRAMS) உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது புகார்களைக் கையாளும் நடைமுறையை துரிதப்படுத்தும்.

இந்த போர்ட்டலில் செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வு மற்றும் இயந்திரவழி கற்றல் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதன் மூலம், வர்த்தகர்கள் புகார் கொடுக்காவிட்டாலும் கூட, அவர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

READ | MSME-க்கு 5,000 கோடி ரூபாய் இடர்பாட்டு நிதி -மத்திய அரசு திட்டம்!

MSME துறையின் பல வகையான பிரச்சினைகள் மற்றும் குறைகளை இந்த சாம்பியன்ஸ் போர்ட்டல் தீர்த்து வைக்கும். இதற்காக, MSME செயலாளர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 68 உள்ளூர் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன, அவை இந்த சிறப்பு போர்ட்டலுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த போர்டல் தொடங்கப்பட்டதன் மூலம் 72 மணி நேரத்திற்கும் மேலாக எந்த விண்ணப்பக் கோப்பையும் அரசு அதிகாரிகள் நிலுவையில் வைத்திருக்க வேண்டாம் என்றும், உடனடியாக முடிவு எடுக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மொழியாக்கம் - மாலதி தமிழ்ச்செல்வன்

Trending News