பொதுவாக பெண் குழந்தைகளுக்கு இருக்கும் பொன்மகள் சேமிப்பு திட்டம் குறித்து கேள்விபட்டிருக்கும் பலரும் ஆண் குழந்தைகளுக்கான பொன்மகன் சேமிப்பு திட்டம் குறித்து அறிந்திருக்கும் வாய்ப்பு குறைவு தான். தமிழ்நாடு அரசு சார்பில் பொன் மகன் பொதுவைப்பு நிதி என்ற பெயரில் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம் இது. இந்த சேமிப்பு திட்டத்தை இந்திய அஞ்சல்துறை செயல்படுத்துகிறது
பொன்மகன் பொதுவாய்ப்பு நிதி திட்டம் (பிபிஎன்எஸ்) கணக்கைத் தொடங்க குறைந்தபட்சத் தொகை ரூ.100 ஆகும். பொன்மகன் திட்டத்தின் கீழ் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.500 டெபாசிட் செய்ய வேண்டும். PPNS கணக்கின் கீழ் அதிகபட்ச ஆண்டுத் தொகை ரூ.1.5 லட்சம் வரை செலுத்தலாம். பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்ட கணக்கை இந்தியாவில் உள்ள எந்த தபால் நிலையங்களின் கிளைகளில் இருந்தும் பணம் செலுத்தலாம்.
தபால் நிலைய வட்டி விகிதத்தில் பொன்மகன் திட்டம்
பொன்மகன் திட்ட வட்டி விகிதத்தை தமிழக அரசு அவ்வப்போது நிர்ணயம் செய்கிறது. தற்போது, பொன்மகன் திட்டத்தின் வட்டி விகிதம் 9.7% p.a. வட்டி ஆண்டுதோறும் கூட்டப்படுகிறது.
மேலும் படிக்க | Business Idea: இட்லி, தோசை மாவு தொழில் மூலம் இவ்வளவு லாபம் பார்க்கலாமா?
பொன்மகன் திட்டத்தின் தகுதிக்கான அளவுகோல்கள்
- தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆண் குழந்தையாக இருக்க வேண்டும்
- தமிழ்நாட்டில் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி அல்லது கல்லூரியில் படிப்பது
- கல்விக்கான பிற நிதி உதவிகளை அரசிடம் இருந்து பெறக்கூடாது
- ஒரு குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தை மட்டுமே PPNS கணக்கைத் திறக்க முடியும்
- குழந்தை 10 வயதுக்கு மேல் இருக்கும் போது PPNS கணக்கு ஆண் குழந்தையின் பெயரில் இருக்க வேண்டும்
- ஆண் குழந்தைக்கு 10 வயதுக்கு கீழ் இருக்கும் போது பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் PPNS கணக்கைத் திறக்கலாம்
பொன்மகன் திட்டத்தை ஆன்லைனில் திறப்பது எப்படி?
*அருகிலுள்ள அஞ்சல் அலுவலகக் கிளைக்குச் சென்று பொன்மகன் பொதுவாய்ப்பு நிதி திட்ட விண்ணப்பப் படிவத்தைப் பெறவும்.
* படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம், தேவையான ஆவணங்கள் மற்றும் வைப்புத் தொகை ஆகியவற்றை தபால் அலுவலக அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கவும்.
* அதிகாரிகள் விண்ணப்பப் படிவம் மற்றும் ஆவணங்களைச் சரிபார்த்து பிபிஎன்எஸ் கணக்கைத் திறப்பார்கள்.
பொன்மகன் திட்டத்துக்கு தேவையான ஆவணங்கள்:
- பொன்மகன் திட்ட விண்ணப்ப படிவம்
- ஆண் குழந்தையின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
- பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் வருமான சான்றிதழ்
- ஆண் குழந்தையின் நடப்பு கல்வியாண்டின் பள்ளி சான்றிதழ்
- ஆண் குழந்தையின் வங்கி கணக்கு விவரங்கள்
- இருப்பிட ஆதாரம் (வாக்காளர் ஐடி, ரேஷன் கார்டு அல்லது ஆதார் அட்டை)
பொன்மகன் பொதுவாய்ப்பு நிதிக்கு முதிர்வு காலம் என்ன?
பொன்மகன் பொதுவாய்ப்பு நிதி திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். முதிர்ச்சியடைந்த ஒரு வருடத்திற்குள் அதை ஐந்து ஆண்டுகள் நீட்டிக்க முடியும். திட்டத்தை முதிர்ச்சியடைவதற்கு முன் முன்கூட்டியே மூடுவது அனுமதிக்கப்படாது. இருப்பினும், பிபிஎன்எஸ் கணக்கைத் தொடங்கிய ஏழாவது நிதியாண்டிலிருந்து பகுதியளவு திரும்பப் பெறலாம்.
பொன்மகன் திட்ட பலன்கள்
- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தபால் நிலையங்களில் மக்கள் எளிதில் அணுகலாம்.
- PPNS கணக்கிற்கான குறைந்தபட்ச முதலீடு அல்லது வைப்புத் தொகை ரூ.100 ஆகும்.
- இது நிலையான வட்டி விகிதத்தை வழங்குகிறது, பொதுவாக மற்ற சிறு சேமிப்பு திட்டங்களால் வழங்கப்படும் வட்டி விகிதங்களை விட அதிகமாகும்.
- முதலீட்டாளர்கள் PPNS கணக்குகளில் தங்கள் முதலீடுகளுக்கு வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிச் சலுகைகளைப் பெறலாம்.
- நிலையான வட்டி விகிதம் அதன் முதிர்ச்சியின் போது உறுதியளிக்கப்பட்ட கட்டணத்தை வழங்குகிறது, இது எதிர்காலத்தில் ஆண் குழந்தையின் கல்விச் செலவுகளுக்கு நிதியளிக்க உதவுகிறது.
பொன்மகன் திட்டத்திற்கு வரிவிலக்கு
பொன்மகன் பொதுவாய்ப்பு நிதி திட்டம் வருமான வரி சட்டம், 1961 பிரிவு 80C இன் கீழ் ரூ.1.5 லட்சம் வரையிலான முதலீடுகளுக்கு வரி விலக்கு அளிக்கிறது. பொன்மகன் பொது வைப்பு நிதித் திட்ட கணக்கில் செலுத்தப்படும் வட்டிக்கும் வரி இல்லை. பொன்மகன் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் தங்கள் பொருளாதாரச் சுமைகளைப் பற்றி கவலைப்படாமல் கல்வியைத் தொடர இந்த திட்டம் உதவுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ