நடுத்தர வர்க்கத்திற்கான வீட்டு வசதி திட்டம்... இனி குறைந்த விலையில் வீடு வாங்கலாம்!

நடுத்தர மக்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில் மத்திய அரசு, LPG சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்துள்ள நிலையில், தற்போது அவர்களது வீடு வாங்கும் கனவு நிறைவேற உதவும் வகையில் வீட்டு வசதி திட்டம் ஒன்றை கொண்டு வர உள்ளது. 

Last Updated : Sep 26, 2023, 01:06 PM IST
நடுத்தர வர்க்கத்திற்கான வீட்டு வசதி திட்டம்... இனி குறைந்த விலையில் வீடு வாங்கலாம்! title=

நடுத்தர வர்க்கத்தினருக்கான பிரதமர் மோடியின் வீட்டு வசதித் திட்டம்: மக்களவைத் தேர்தலுக்கு முன், மத்தியில் உள்ள நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நடுத்தர வர்க்கத்தினருக்காக ஒரு மிகப் பெரிய திட்டத்தைத் தொடங்கத் தயாராகி வருகிறது. முன்னதாக, நடுத்தர மக்களுக்கு பெரும் நிவாரணம் அளித்து, வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்துள்ள நிலையில், தற்போது அவர்களது வீடு வாங்கும் கனவு நிறைவேற உதவும் வகையில் வீட்டு வசதி திட்டம் ஒன்றை கொண்டு வர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

முன்னதாக, கொரோனா தொற்று நோய்க்குப் பிறகு நிறுத்தப்பட்ட எரிவாயு மானியத்தை மீண்டும் தொடங்குவதாக அரசாங்கம் அறிவித்த நிலையில், நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினருக்காக புதிய வீட்டு வசதி திட்டத்தை மத்திய அரசு தொடங்க உள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தனது உரையில் இந்தத் திட்டத்தைக் குறிப்பிட்டிருந்தார்.

நகர்ப்புற நடுத்தர மக்கள் பயனடைவார்கள்

செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள தகவலில், இந்த புதிய வீட்டுத் திட்டத்திற்காக மத்திய அரசாங்கம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.600 பில்லியன் செலவழிக்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 9 லட்சம் ரூபாய் கடனுக்கு 3 - 6.5 சதவீதம் வட்டி மானியத்தை அரசு வழங்கும். 50 லட்சத்திற்கும் குறைவான வீட்டுக் கடனை 20 வருட காலத்திற்கு வாங்கிய ஒருவர் இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி பெறுவார். வட்டி மானியம் வீட்டுக் கடன் பயனாளிகளின் கணக்கில் முன்கூட்டியே டெபாசிட் செய்யப்படும். இந்த திட்டத்தை 2028 வரை செயல்படுத்தலாம்.

மத்திய அரசாங்கத்தின் இலக்கு நடுத்தர வர்க்கம்

மத்திய அரசு இந்த திட்டம் தொடர்பாக வங்கிகளுடன் அரசு விரைவில் ஆலோசனை நடத்தலாம் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசாங்கம் தனது நிலையில், பயனாளிகளை அடையாளம் காணத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் முன்மொழியப்படும் நிலையில், இந்த திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வரிசையில், நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு மும்முரமாக பணியாற்றி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தனது பிறந்த நாளில் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை தொடங்கினார். பணவீக்கத்தை கட்டுப்படுத்த, அரசாங்கம் விரைவில் எரிபொருள் விலையை குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

மேலும் படிக்க | SBI, இந்தியன் வங்கிக்கு கோடிகளில் அபராதம்... ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை!

வீட்டுக் கடன் வட்டியில் 3 முதல் 6.5 சதவீதம் மானியம்

அரசின் வீட்டுக் கடன் மானியத் திட்டம்: வீடு வாங்கத் திட்டமிடுபவர்கள் பண்டிகைக் காலத்தில் சிறப்பான செய்திகளைப் பெறலாம்.  கடனுக்கான வட்டி மானியம் நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இத்திட்டம் இறுதி கட்டத்தில் உள்ள தாகவும், விரைவில் இந்த திட்டத்திற்கான வரைவு இறுதி செய்யப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்கு கொண்டு வரப்படும். குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தினருக்கு,  ரூ.25 லட்சம் வரை கடன் வாங்குபவர்களுக்கும் இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும். மக்களுக்கு நிதி ரீதியாக பலனளிக்கும் இது போன்ற வீட்டுக்கடன் திட்டத்தை அரசு கொண்டு வர உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் மக்களுக்கு உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஆதார் இணைப்பு முதல் சேமிப்பு திட்டம் வரை... செப். 30ம் தேதிக்குள் ‘இந்த’ வேலைகளை முடிச்சுடுங்க... இல்லைன்னா சிக்கல் தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News