பண நெருக்கடியில் இருக்கும்போது வாடகை செலுத்துவதுடன், சலுகைகளை பெற சூப்பர் வழி

Pay Rent Via Credit Card & Get Reward: பண நெருக்கடியை எதிர்கொள்பவர்களுக்கு வாடகை செலுத்தும் காலக்கெடு என்பது மன அழுத்தத்தைக் கொடுப்பதாக இருந்தலும், அதற்கு இந்த வழியை பயன்படுத்தலாம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 23, 2023, 08:30 AM IST
  • கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்துவதன் நன்மைகள்
  • பண நெருக்கடியில் இருந்தால் வாடகை செலுத்துவது எப்படி?
  • மன அழுத்தத்தை தவிர்க்க வாடகை கொடுக்கும் டிப்ஸ்
பண நெருக்கடியில் இருக்கும்போது வாடகை செலுத்துவதுடன், சலுகைகளை பெற சூப்பர் வழி title=

House Rent By Credit Cards: வாடகை வீட்டில் இருப்பவர்கள் மாதந்தோறும் வீட்டு வாடகை பணத்தை சரியான சமயத்தில் கொடுக்காவிட்டால், வீட்டு உரிமையாளருடன் மனக் கசப்பு ஏற்படுகிறது. அதிலும், இன்றைய காலகட்டத்தில், இரு தரப்புமே ஆன்லைன் வாயிலாக வாடகையை அனுப்புவதையே விரும்பும் நிலையும் இருக்கிறது. அதற்கு காரணம், மாதாமாதம் எப்போது, எவ்வளவு வாடகை கொடுத்தார்கள் என்ற தகவல் பராமரிக்கப்படுகிறது என்பதும் முக்கியமான காரணம் ஆகும்.

ஆன்லைனில் வீட்டு வாடகை செலுத்தும் போது பலர் தற்போது கிரெடிட் கார்டை பயன்படுத்துகின்றனர். வாடகை செலுத்துவதற்கான தவணை நெருங்கும்போது, வங்கி கணக்கில் அல்லது கையிலோ பணம் இல்லை என்றால், கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாடகை பணத்தை செலுத்தி விடலாம்.

வீட்டு உரிமையாளருக்கு வாடகையை செலுத்த பல வழிகள் இருந்தாலும், ஆன்லைன் முறைகள் வசதியானவையாக இருப்பதோடு பல பண பலன்களையும் வழங்குகிறது.

மேலும் படிக்க | கடன் கொடுத்து 3 மாசத்தில 595 கோடி ரூபாய் சம்பாதித்த நிறுவனம்!

கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்துவதன் நன்மைகள் (How to pay rent using Credit Cards?)

கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வாடகையைச் செலுத்த உதவும் பல ஆன்லைன் செயலிகள் மற்றும் இணைய தளங்கள் உள்ளன. நமது தனிப்பட்ட மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை, வீட்டு உரிமையாளரின் வங்கி விவரங்களுடன் சேவை வழங்கும் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும்.

தரவுகள் சரிபார்க்கப்பட்டதும், சுலபமாக கிரெடிட் கார்டு மூலம் உங்கள் வாடகையை செலுத்தலாம். பெரும்பாலான ஆப்ஸ் மற்றும் போர்ட்டல்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதியில் உங்கள் கிரெடிட் கார்டிலிருந்து தொகையை தானாகவே டெபிட் செய்யத் தேவையான ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்‌ஷன் (standing instruction) அமைத்துக் கொள்ளலாம்.

credit cards

கிரெடிட் கார்டுகள் மூலம் வாடகை செலுத்துவதற்கு சேவை வழங்குநர் மற்றும் அட்டை வழங்குநர், கட்டணம் வசூலிப்பது இயல்பானது. இருந்தாலும்,  வாடகையை கார்டுகள் மூலம் செலுத்தினால், கவர்ச்சிகரமான வெகுமதிகளையும் சலுகைகளையும் பெறலாம். கார்டு வழங்குபவர் மற்றும் சேவை வழங்குநரைப் பொறுத்து கட்டணங்கள் மாறுபடலாம்.

மேலும் படிக்க | மொபைல் டவருக்கு TRAI எவ்வளவு பணம் கொடுக்கிறது?

வெகுமதிகள் மற்றும் கேஷ்பேக் ஆஃபர்

கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வீட்டு வாடகையைச் செலுத்துவது பல வெகுமதிகள் (Earn rewards) மற்றும் கேஷ்பேக் ஆஃபர்களைப் பெற உதவும். ஒவ்வொரு கடன் அட்டை வழங்குபவரும் கிரெடிட் கார்டு செலவினங்களில் லாயல்டி புள்ளிகளை வழங்குகிறார். கடன் கார்டைப் பயன்படுத்தி உங்கள் வாடகையைச் செலுத்தும் போது, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி வெகுமதிகளையும் சலுகைகளையும் பெறலாம்.  

கிரெடிட் ஸ்கோர் (CIBIL score)
 
வழக்கமான வாடகைக் கொடுப்பனவுகள் மற்றும் சரியான நேரத்தில் கிரெடிட் கார்டு பில் செலுத்துதல்கள் மூலம், உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்கலாம். இருப்பினும், உங்கள் கிரெடிட் வரம்பில் 30%க்கு மேல் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது, ஏனெனில் இது உங்கள் CIBIL ஸ்கோரைப் பாதிக்கலாம்.

சரியான நேரத்தில் வாடகை செலுத்த கிரெடிட் கார்டு
 
பண நெருக்கடியை எதிர்கொள்பவர்களுக்கு வாடகை செலுத்தும் காலக்கெடு என்பது மன அழுத்தத்தைக் கொடுப்பதாக இருக்கும். இருப்பினும், கிரெடிட் கார்டு வாடகை செலுத்துவதன் மூலம், வீட்டு வாடகையை பிரச்சனை இல்லாமல் சரியான நேரத்தில் செலுத்தி, மன அமைதியை பெற உதவும்.

மேலும் படிக்க | 27 ஆண்டுகளாக வாடகை வீடு..! சொந்த வீட்டுக்கு செல்லும் முன் உயிரிழந்த சோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News