PAN Card தொலைந்துவிட்டதா? புதிய பான் கார்டை பெறுவது எப்படி? முழு செயல்முறை இதோ

PAN Card: பான் கார்ட் தொலைந்துவிட்டாலோ, திருடப்பட்டாலோ என்ன செய்வது? அதே பான் எண்ணுடன் மற்றொரு பான் பார்டை பெற முடியுமா?

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 13, 2022, 11:03 AM IST
  • PAN Card தொலைந்துவிட்டதா?
  • வருமான வரித் துறையிடமிருந்து டூப்ளிகேட் பான் அட்டையை உருவாக்கிக்கொள்ளலாம்.
  • இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
PAN Card தொலைந்துவிட்டதா? புதிய பான் கார்டை பெறுவது எப்படி? முழு செயல்முறை இதோ title=

நம் நாட்டில் முக்கியமான நிதி பரிவர்த்தனைகளுக்கு பான் கார்ட் வைத்திருப்பது மிக அவசியமாகும். வருமான வரி தொடர்பான பணிகளுக்கும், அடையாளச் சான்றிதழாகவும் இது பயன்படுகிறது. ஆகையால் இந்த ஆவணத்தை கவனமாக பாதுகாப்பது மிக முக்கியமாகும். அந்த முக்கிய ஆவணம் காணாமல் போனாலோ, அல்லது திருடப்பட்டாலோ என்ன செய்வது? பான் கார்ட் தொலைந்து விட்டாலோ, திருடப்பட்டாலோ, பான் அட்டையின் சொந்தக்காரர் பதற்றப்பட வேண்டியதில்லை. பான் கார்டை தொலைத்தவர்கள் டூப்ளிகேட் பான் கார்டுக்கு (Duplicate PAN Card) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். புதிதாக வரும் இரண்டாவது பான் கார்டில், பான் கணக்கு எண் அப்படியே இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.

பான் கார்ட் வைத்திருப்பவர்கள், தங்கள் பான் அட்டை தொலைந்து போனாலோ, திருடப்பட்டாலோ, வருமான வரித் துறையிடமிருந்து டூப்ளிகேட் பான் அட்டையை உருவாக்கிக்கொள்ளலாம், இதற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்

ஸ்டெப் 1
முதலில் வருமான வரி பான் சேவைகள் பிரிவின் இணையதளத்துக்கு செல்லவும். பல விருப்பங்கள் இங்கே தோன்றும். அவற்றில் இருந்து “Reprint of PAN Card” என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். இந்த விருப்பம் ஏற்கனவே பான் கார்டு பெற்றவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஏற்கனவே பான் எண் ஒதுக்கப்பட்டு, இப்போது பான் அட்டை மீண்டும் தேவைப்படுபவர்களுக்கான அம்சமாகும் இது. இந்த விருப்பத்தைப் பயன்படுத்தும் விண்ணப்பதாரருக்கு புதிய பான் கார்டு வழங்கப்படுகிறது.

ஸ்டெப் 2
ஆன்லைன் படிவத்தின் அனைத்து காலம்களையும் (நெடுவரிசைகளையும்) பூர்த்தி செய்து தகவலை வழங்கவும். குறிப்பு: இடது விளிம்பு பெட்டியில் எந்த விருப்பத்தையும் டிக் செய்ய வேண்டாம். அதன் பிறகு, 105 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை கிரெடிட்/டெபிட் கார்டு, நெட் பேங்கிங், டிமாண்ட் டிராப்ட் அல்லது காசோலை மூலம் செலுத்தலாம். இந்த செயல்முறைகள் அனைத்தையும் முடித்த பிறகு, படிவத்தைச் சமர்ப்பித்து, "Aknowledgement Slip" -ஐ பிரிண்ட் எடுத்துக்கொள்ளவும்.

ஸ்டெப் 3
இந்த ரசீதில் 2.5 செமீ முதல் 3.5 செமீ அளவுள்ள வண்ணப் புகைப்படத்தை ஒட்டவும். பின் கையெழுத்திடவும். டிமாண்ட் டிராஃப்ட் அல்லது காசோலை மூலம் கட்டணத்தைச் செலுத்தினால், அதன் நகல் இணைக்கப்பட வேண்டும். இத்துடன், உங்கள் அடையாளச் சான்று, முகவரிச் சான்று, பிறந்த தேதிச் சான்று ஆகியவற்றை இணைத்து, புனேவில் உள்ள NSDL அலுவலகத்திற்கு அனுப்பவும்.

மேலும் படிக்க | உங்கள் பான்கார்டில் மோசடியா? சிபில் ஸ்கோர் பாதிக்கும்; கண்டுபிடிக்க வழி

ஸ்டெப் 4
ஆன்லைனில் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் உங்கள் ஆவணங்களை குறிப்பிட்ட முகவரியில் சேர்த்துவிட வேண்டும். 15 நாட்களுக்குள் நீங்கள் நகல் பான் கார்டைப் பெறுவீர்கள். நீங்கள் PAN கார்டின் நிலையை அறிய விரும்பினால், NSDLPAN என தட்டச்சு செய்து இடம் விட்டு உங்கள் ஒப்புகை எண்ணை உள்ளிட்டு 57575 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.

ஆன்லைன் விண்ணப்ப தகவல்
- முதலில் துறையின் www.tin-nsdl.com என்ற இணையதளத்தைத் திறக்கவும்.
- முகப்புப் பக்கத்தில் ரீபிரிண்டிங் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- சாளர பக்கத்தின் கீழே உள்ள “Reprint of PAN Card” என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- இதற்குப் பிறகு, புதிய பக்கத்தில், உங்கள் பான் எண், ஆதார் எண், பிறந்த தேதி தகவல்களை நிரப்பி தேர்வுப்பெட்டியைக் கிளிக் செய்யவும்.
- மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண் போன்ற OTPக்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். விண்ணப்பம் OTP மூலம் சரிபார்க்கப்படும். மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி அசல் பான் கார்டுடன் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- இப்போது "Generate OTP" பட்டனை அழுத்தவும், 10 நிமிடங்களுக்கு செல்லுபடியாகும் OTP பெறப்படும்.
- OTPயை உள்ளிட்ட பிறகு, 50 ரூபாய் கட்டணத்தைச் செலுத்தி, பிரிண்ட் ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து பிரிண்ட் எடுக்கவும்.
- பின்னர் மொபைலிலும் செய்தியைப் பெறுவீர்கள். மேலும் இந்த செய்தியில் இ-பான் கார்டைப் பதிவிறக்குவதற்கான இணைப்பு இருக்கும்.

மேலும் படிக்க | பான் கார்டு வைத்திருப்போர் கவனதிற்கு! இதை உடனடியாக செய்யுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News