PAN Aadhaar Link: மத்திய அரசு இந்திய குடிமகன்களை ஆதாருடன் பான் கார்டை இணைக்க வலியுறுத்தி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. கடந்த ஆண்டிலிருந்து மக்களை ஆதாருடன் பான் கார்டை இணைக்கக்கோரி அரசு கூறிவந்தது, ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க மார்ச் 31, 2023 தான் கடைசி தேதி என்று அரசு தெரிவித்திருந்த நிலையில் தற்போது ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை ஜூன் 30, 2023 வரை அரசு நீட்டித்துள்ளது. இதுவரை பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்கள் அரசு விதித்துள்ள காலக்கெடுவுக்குள் ஆதார்-பான் இணைப்பு செயல்முறையை செய்து முடித்திட வேண்டும், இல்லையென்றால் அவர்களின் பான் கார்டு செயலிழந்துவிடும்.
மேலும் படிக்க | 7th Pay Commission அட்டகாசமான செய்தி: மீண்டும் ஒரு டிஏ ஹைக், மீண்டும் ஊதிய உயர்வு
பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, விலக்கு அளிக்கப்பட்ட பிரிவில் வராத அனைத்து பான் கார்டு வைத்திருப்பவர்களும், 30.06.2023-க்குள் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும் என்று வருமான வரித் துறையும் வரி செலுத்துவோருக்கு தெரிவித்துள்ளது. பான்-ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க சிலருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மே 2017-ல் மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, பான்-ஆதார் இணைப்பதில் இருந்து குறிப்பிட்ட பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விலக்கு அளிக்கப்பட்ட பிரிவின் கீழ் வருபவர்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டிய கட்டாயமில்லை. தற்போது யாரெல்லாம் ஆதார்-பான் இணைப்பை மேற்கொள்ள வேண்டியதில்லை என்பது பற்றி பார்ப்போம்.
1) அசாம், மேகாலயா மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் மக்கள்.
2) வருமான வரிச் சட்டம், 1961ன் கீழ் வராதவர்கள்.
3) கடந்த ஆண்டு வரை 80 வயது நிறைவடைந்த அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மக்கள்.
4) இந்திய குடிமகனாக இல்லாதவர்கள்.
பான்-ஆதார் இணைக்கும் செயல்முறை:
1) வருமான வரி மின்-தாக்கல் இணையதளமான incometaxindiaefiling.gov.in ஐப் பார்வையிடுவதன் மூலம் உங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கலாம்.
2) எஸ்எம்எஸ் மூலம் பான் மற்றும் ஆதாரை இணைக்கலாம். இதற்கு UIDPAN < SPACE > < 12 இலக்க ஆதார் எண்கள் > < SPACE > < 10 PAN எண்கள்> என்று டைப் செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.
3) ஆஃப்லைன் மூலம் பான் எண்ணை ஆதாருடன் இணைக்க அருகிலுள்ள பான் சேவா கேந்திரா அல்லது ஆதார் சேவா கேந்திராவிற்கு செல்ல வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ