OTP அடிப்படையில் பணத்தைத் திரும்பப்பெறும் வசதி, IRCTC அறிமுகம்!

OTP (ஒரு முறை கடவுச்சொல்) அடிப்படையிலான பணத்தைத் திரும்பப்பெறும் முறையை இந்தியன் ரயில்வே அறிமுகம் செய்துள்ளது!

Last Updated : Oct 29, 2019, 07:02 PM IST
OTP அடிப்படையில் பணத்தைத் திரும்பப்பெறும் வசதி, IRCTC அறிமுகம்! title=

OTP (ஒரு முறை கடவுச்சொல்) அடிப்படையிலான பணத்தைத் திரும்பப்பெறும் முறையை இந்தியன் ரயில்வே அறிமுகம் செய்துள்ளது!

ரத்து செய்யப்பட்ட அல்லது முழுமையாக காத்திருப்பு பட்டியலில் இருந்து விலக்கப்பட்ட டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு முறையை மிகவும் வெளிப்படையானதாகவும், வாடிக்கையாளர் நட்பாகவும் மாற்றுவதற்கான ஒரு வெளிப்படையான முயற்சியில், இந்திய ரயில்வே செவ்வாயன்று ஒரு புதிய OTP (ஒரு முறை கடவுச்சொல்) அடிப்படையிலான பணத்தைத் திரும்பப்பெறும் முறையை செயல்படுத்தியது. 

இந்திய ரயில்வே பொதுத்துறை நிறுவனம் மற்றும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC) ஆகியவற்றால் செயல்படுத்தப்பட்ட புதிய அமைப்பின் கீழ், பயணிகளின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP குறுஞ்செய்தியாக பெறப்படும். IRCTC அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் மட்டுமே முன்பதிவு செய்யப்படும் இ-டிக்கெட்டுகளுக்கு புதிய முறை பொருந்தும்.

இந்த புதிய அமைப்பின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட IRCTC முகவர் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் வாடிக்கையாளரால் ரத்து செய்யப்படும்போதோ அல்லது முழு காத்திருப்பு பட்டியலில் கைவிடப்பட்ட டிக்கெட்டிலோ, OTP குறுஞ்செய்தி வாடிக்கையாளர் / பயணிகளின் மொபைல் எண்ணுடன் பணத்தைத் திரும்பப்பெறும் தொகையுடன் அனுப்பப்படும். வாடிக்கையாளர் / பயணிகள் வழங்கிய மொபைல் எண்ணுக்கு OTP முன்பதிவு நேரத்தில் முகவருக்கு அனுப்பப்படும். 
வாடிக்கையாளர் / பயணிகள் திருப்பிச் செலுத்தும் தொகையைப் பெறுவதற்கு, டிக்கெட்டை முன்பதிவு செய்த முகவருடன் OTP-ஐப் பகிர்ந்து கொள்ள வேண்டுண்டுதல் அவசியமாகும்.

OTP- அடிப்படையிலான பணத்தைத் திரும்பப்பெறுதல் செயல்முறை வாடிக்கையாளரின் நன்மைக்காக கணினியில் அதிக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது ஒரு பயனர் நட்பு வசதி, அதில் ரத்து செய்யப்பட்ட டிக்கெட் அல்லது முழுமையாக காத்திருப்பு பட்டியலில் கைவிடப்பட்ட டிக்கெட்டுக்கு எதிராக தனது சார்பாக முகவர் பெற்ற சரியான பணத்தைத் திரும்பப் பெறுவது குறித்து பயணிகள் அறிந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்துசெய்தல் பணத்தைத் திரும்பப்பெறும் செயல்முறையை மேலும் நெறிப்படுத்துவதே இத்திட்டதின் நோக்கம், இதனால் ரத்துசெய்யும் தொகை வாடிக்கையாளர்களுக்கு முகவர்களால் சரியான நேரத்தில் திருப்பித் தரப்படும் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

குறிப்பு: இத்திட்டத்தின் பயனைப் பெறுவதற்கு, முன்பதிவு செய்யப்பட்ட ரயில் மின்-டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது வாடிக்கையாளர் பயணிகளில் ஒருவரின் சரியான மொபைல் எண்ணை IRCTC அங்கீகரிக்கப்பட்ட முகவருக்கு வழங்க வேண்டும். முன்பதிவு செய்யப்பட்ட ரயில் மின்-டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது முகவர் தனது மொபைல் எண்ணை சரியாக பதிவுசெய்வதை வாடிக்கையாளர் / பயணிகள் உறுதி செய்ய வேண்டும்.

Trending News