National Savings Certificate: மனித வாழ்க்கைக்கு பணம் தேவை. பணம் ஈட்டுவது எவ்வளவு அவசியமோ, பணத்தை வருங்கால தேவைகளுக்காக சேர்த்து வைப்பதும் அதே அளவு அவசியம். இன்றைய நவீன உலகில் பணத்தை சேமிக்க பல திட்டங்களும் நவீன முறைகளும் இருந்தாலும், இன்றும் பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வருமானத்திற்கான பொது மக்களின் பிரபலமான விருப்பமாக இருப்பது அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்கள்தான்.
ஏப்ரல் 1, 2023 முதல், தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings Certificate) அதாவது NSC உட்பட, தபால் அலுவலகத்தின் (Post Office) பல சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் உயர்த்தியுள்ளது. இப்போது NSC -இல் முதலீட்டாளர்களுக்கு 7.7% வட்டி விகிதம் கிடைக்கிறது. NSC, தபால் அலுவலகத்தின் பிரபலமான சேமிப்பு திட்டங்களில் ஒன்றாக உள்ளது.
இந்தத் திட்டம் அரசாங்கத்தால் நடத்தப்படுகிறது. இது முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. எந்தவொரு தபால் அலுவலக கிளைக்கும் சென்று இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கலாம். NSC திட்டத்தில் முதலீடு செய்தால், முதலீட்டாளர்கள் காம்பவுண்டிங் இண்ட்ரஸ்ட் அதாவது கூட்டு வட்டியின் பலனைப் பெறலாம்.
மேலும் படிக்க | குஷியில் மத்திய அரசு ஊழியர்கள்: NPS -இன் கீழ் 50% ஓய்வூதியம், அரசின் பம்பர் பரிசு
NSC Interest Rate: இதன் வட்டி விகிதம் எவ்வளவு? முதிர்வு காலம் என்ன?
NSC -இல் NSC VIII வெளியீடு மற்றும் NSC IX வெளியீடு என இரண்டு வகைகள் உள்ளன. ஆனால் தற்போது எட்டாவது வெளியீடு மட்டுமே முதலீட்டுக்குக் கிடைக்கிறது. ஒன்பதாவது வெளியீடு டிசம்பர் 2015 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. எட்டாவது வெளியீடு 5 வருட லாக்-இன் காலத்துடன் வருகிறது. இந்த திட்டத்திற்கு 7.7% வருடாந்திர வட்டி (Interesr Rate) கிடைக்கும். அதாவது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டாளர்கள் வட்டித் தொகையுடன் சேர்த்து அசல் தொகையையும் பெறுவார்கள். இது மட்டுமின்றி, முதல் நான்கு ஆண்டுகளில் வருமான வரியின் 80C பிரிவின் கீழ் ஆரம்ப முதலீடு மற்றும் வட்டிக்கு வரி விலக்கு கிடைக்கும். இதில் ரூ.1.5 லட்சம் வரையிலான முதலீட்டில் விலக்கு கிடைக்கும்.
NSC Calculator: NSC -இல் முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்?
ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்.
- ஒரு நபர் NSC -இல் ரூ.10 லட்சம் முதலீடு செய்கிறார் என வைத்துக்கொள்வோம்.
- இதில், அவருக்கு ஆண்டுக்கு 7.7% வட்டி கிடக்கும்.
- அவரது முதலீடு 5 ஆண்டுகளுக்கான லாக்-இன் காலத்தில் இருக்கும்.
- என்எஸ்சி கால்குலேட்டரின் படி, அசல் தொகையான ரூ. 10 லட்சத்தில், அவருக்கு வட்டியில் இருந்து மட்டும் ரூ.4,49,034 கிடைக்கும்.
- அசல் தொகை மற்றும் வட்டியை இணைத்தால், அவரது முதலீட்டின் மொத்த வருமானம் ரூ.14,49,034 ஆக இருக்கும்.
NSC: மெச்யூரிட்டிக்குப் பிறகு பணத்தை எடுப்பது எப்படி?
- NSC இல் உங்கள் முதலீடு முதிர்ச்சியடையும் போது, அதாவது மெச்யூரிட்டியின் போது, நீங்கள் அதை ரொக்கமாக எடுத்துக்கொள்ளலாம்.
- இந்தத் தொகையை உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றிக்கொள்ளும் வசதியையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.
- இந்தப் பணத்தை நீங்கள் வித்ட்ரா செய்யாமல், அதை என்எஸ்சி கணக்கிலேயே (NSC Account) இருக்க விட்டால், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அஞ்சலக சேமிப்புக் கணக்கின் வட்டி விகிதத்தில் உங்களுக்கு அந்த தொகைக்கு வட்டி கிடைக்கும்.
- ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வட்டி நின்று, உங்கள் பணம் மட்டும் அப்படியே கணக்கில் இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ