ஊழியர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான வைரல் செய்தி! வதந்திகளை நம்பாதீர்: அரசு அலர்ட்

Fake News About EPF: ஊழியர் வருங்கால வைப்பு நிதியை தொடர்பான சமூக ஊடக வைரல் பதிவுகளின் உண்மைத்தன்மை என்ன? ஃபேஸ்புக்கில் விளக்கம் வெளியிட்ட EPF அமைப்பு

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 23, 2023, 08:51 PM IST
  • ஊழியர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான போலிச் செய்தி
  • 55 வயதில் வைப்பு நிதியை எடுக்கலாமா முடியாதா?
  • குழம்பிய ஊழியர்களுக்கு விளக்கம் அளிக்கும் அரசு
ஊழியர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான வைரல் செய்தி! வதந்திகளை நம்பாதீர்: அரசு அலர்ட் title=

ஊழியர் வருங்கால வைப்பு நிதியை (EPF) 55  வயதில் திரும்பப் பெறுவது தொடர்பான அறிவிப்பு சமூக ஊடகங்களில் வைரலாகைவருகிறது. இது இந்தியாவின் ஊழியர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான தகவல் அல்ல. மலேஷியாவிலும் வதந்தியை பரப்பிய அந்நாட்டின் பணியாளர் வைப்பு நிதியம் தொடர்பான செய்தி. ஆனால், அந்த செய்தி போலியானது என்று மலேசியாவின் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர்  ஃபஹ்மி ஃபட்ஜில் (Fahmi Fadzil) தெரிவித்தார். இதன் பின்னணி என்ன? 

மலேசியாவில் தற்போதுள்ள ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கு பதிலாக புதிய கொள்கையை அமல்படுத்தியதைத் தொடர்ந்து  வெளியான செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில், EPF பங்களிப்பாளர்கள் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ள வேண்டிய எண் மற்றும், ஒரு “மருத்துவ திட்டம்” மூலம் தங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக தங்கள் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்கலாம் என்று கூறும் ஒரு போஸ்டர் வைரலானது.
இதற்குப் பதிலளித்த EPF, இது தவறான செய்தி என்று முகநூல் பக்கத்தில் ஒரு போஸ்டர் மூலம் பதிலளித்துள்ளது.

"கவனமாக இருக்கவும். இபிஎஃப் இன் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடக கணக்குகளில் இருந்து நம்பகமான தகவலைப் பெறுங்கள். மேலும் தகவலுக்கு, https://www.kwsp.gov.my/ms/reach-us/social-media க்குச் செல்லவும்,” என்று EPF தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் வதந்தி பரவுவது தொடர்பான செய்தி கிடைத்ததும், EPF இன் தலைமை நிர்வாகி டத்தோஸ்ரீ அமீர் ஹம்சாவிடம் தொடர்பு கொண்டு  மலேசியாவின் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர்  ஃபஹ்மி ஃபட்ஜில் பேசியுள்ளார். 

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான ட்விஸ்ட்: 50% டிஏ, ஊதியத்தில் அதிரடி ஏற்றம்

இது மட்டுமல்ல, EPF பங்களிப்பாளர்கள் 55 வயதை எட்டியவுடன் தங்கள் சேமிப்பை முழுவதுமாக திரும்பப் பெற முடியாது என்ற வதந்திகள் தவறானது என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.  

கம்போங் புக்கிட் சாங்காங்கில் (Kampung Bukit Changgang) அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வில் பேசிய அவர், "சமூக ஊடகங்களில் வெளியானவை வதந்திகள் என்பதை , பொதுமக்களுக்கு உடனடியாக தெளிவுபடுத்துமாறு EPF அமைப்பைக் கேட்டுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.  
 
அதன்பிறகு EPF அமைப்பு, பேஸ்புக்கில் வெளியிட்ட ஒரு பதிவில், சரிபார்க்கப்படாத தகவல்களைப் பகிர்வதில் கவனமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது. மேலும், EPF தொடர்பான எந்த தகவலாக இருந்தாலும் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கு மற்றும் இணையதளம் மூலம் சரியான தகவல்களைப் பெறுமாறு பொதுமக்களை வலியுறுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக இரு நாட்களுக்கு (2023, அக்டோபர் 21)முன்னர் பேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், எதிர்காலத்தில் புதிய பங்களிப்பாளர்களுக்கான விதிகளும் தற்போது இருப்பதைப் போலவே தொடரும் என்பதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக தெரிவித்தார். அதாவது, ஓய்வுபெறும் வயதான 55 ஐ எட்டியவுடன், தற்போது உள்ள விதிமுறைகளின்படி, தங்கள் இபிஎஃப் தொகையை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகளையே தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை தனது அரசாங்கம் நிராகரிக்கவில்லை என்று தெரிவித்தார்.

இருப்பினும், தங்கள் கணக்குகளில் அதிக சேமிப்பு இல்லாத பங்களிப்பாளர்களிடமிருந்து, மலேஷியாவின் முன்மொழியப்பட்ட கொள்கைக்கு சில தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு இருப்பதையும் மறுக்க முடியாது.

மேலும் படிக்க | 8% வட்டி கொடுக்கும் வங்கிகளின் சிறப்பு FD... அக். 31 வரை மட்டுமே வாய்ப்பு..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News