சீனியர் சிட்டசன் டிக்கெட் சலுகை: ரயில் கட்டணத்தில் கோரப்படும் சலுகைகளை கருத்தில் கொண்டு, மூத்த குடிமக்களுக்கு கட்டண தள்ளுபடி வழங்கி தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட இந்திய ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியன் ரயில்வேவின் பல அமைப்புகள் மற்றும் குழுக்கள் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளன. சில சிறப்பு சந்தர்ப்பங்களைத் தவிர, சீனியர் சிட்டிசன்களுக்கு ரயில் கட்டணத்தில் தள்ளுபடி வழங்கப்படாது என ரயில்வே முடிவு செய்துள்ளது.
கொரோனா காலத்தில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட கட்டணச் சலுகையை ரயில்வே அமைச்சகம் நிறுத்தியுள்ளது. இதையடுத்து, கட்டணச் சலுகையை திரும்பப் பெற வேண்டும் என பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதுமட்டுமின்றி, ரயில் கட்டணத்தில் தள்ளுபடி குறித்தும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டது நினைவிருக்கலாம்.
இந்த விவகாரம் தொடர்பாக தற்போது மத்திய அரசு ஒரு முடிவை எடுத்துள்ளது. தைனிக் பாஸ்கரில் வெளியிடப்பட்ட செய்தியின்படி, ரயில் கட்டணத்தில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட தள்ளுபடி மீண்டும் வழங்கப்படாது.
கோரிக்கையை பரிசீலித்த பின் முடிவு
மக்களின் கோரிக்கைகளை பரிசீலித்த பல அமைப்புகள் மற்றும் குழுக்கள் இறுதியாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. எனவே, சில சிறப்பு சந்தர்ப்பங்களைத் தவிர, எந்தப் பயணிகளுக்கும் ரயில் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படாது என ரயில்வே முடிவு செய்துள்ளது.
மேலும் படிக்க | இலவச ரேஷன் பெறுவோருக்கு செம ஜாக்பாட் அப்டேட்.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்
கட்டண மானியம் முன்பு போலவே தொடரும் என்பதால், தள்ளுபடியை மீண்டும் வழங்கவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். ஏற்கனவே கட்டண மானியம் வழங்கும் நிலையில், கூடுதல் கட்டணத் தளர்வு அளிக்க முடியாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
100 ரூபாய் டிக்கெட்டுகள் 55 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது
சமீபத்தில், டிக்கெட் தொடர்பாக பேசிய மத்தியிஅ ரயில்வே அமைச்சர், பயணிகளுக்கு, 100 ரூபாய் டிக்கெட்டுகளை, 55 ரூபாய்க்கு வழங்குகிறது. இதற்குப் பிறகு, மேலும் கட்டணத்தில் சலுகைகள் வழங்குவது சாத்தியப்படாது என்று தெரிவித்தார். மூத்த குடிமக்கள் உள்ளிட்ட பிற பிரிவினருக்கு 2020-க்கு முன் வழங்கப்பட்ட சலுகைகள் எதிர்காலத்திலும் தொடராது என்பது இதிலிருந்து தெளிவாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு முன், மார்ச் 2020 வரை, 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் ரயில் பயணக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டது. இந்த தள்ளுபடியை 2020 முதல் ரயில்வே நிறுத்தியது.
இது தொடர்பாக, நாடாளுமன்றக் குழுக்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் எம்.பி.க்கள் ரயில்வே, மீண்டும் சலுகைகளை வழங்க வேண்டும் என பரிந்துரைத்தனர். இருப்பினும், புற்றுநோய் போன்ற சில தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மட்டுமே கட்டணச் சலுகை தொடரும் என ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
நோயாளிகளுக்கு வழங்கப்படும் வசதிகள் அதிகரிக்கப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது. வயதானவர்கள் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கூடுதல் கட்டணம் செலுத்தாமல் லோயர் பெர்த் படுக்கைகள் ஒதுக்கப்படுவது போல, கூடுதல் கட்டணம் இல்லாமல் தீவிர நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் சில வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ரயில்வே செம டூர் பேக்கேஜ் வெளியீடு.. இதோ விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ