EPFO: PF டிரான்ஸ்பர் தொடர்பான மகிழ்ச்சியான அப்டேட்; நொடியில் இந்த வேலையை செய்யலாம்

PF Transfer: பழைய நிறுவனத்தின் பிஎப் பணத்தை நீங்கள் நொடியில் உங்கள் புதிய பிஎப் கணக்குக்கு மாற்றும் வகையில் புதிய அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 27, 2022, 02:32 PM IST
  • வருங்கால வைப்பு நிதியில் புதிய அப்டேட்
  • பணப் பரிமாற்றம் மிக எளிதாக செய்யலாம்
EPFO: PF டிரான்ஸ்பர் தொடர்பான மகிழ்ச்சியான அப்டேட்; நொடியில் இந்த வேலையை செய்யலாம் title=

EPFO Latest News: ஏதாவது கம்பெனி ஒன்றில் வேலை செய்யும் நீங்கள், அண்மையில் புதிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்திருந்தால், இந்த அப்டேட் உங்களுக்கு தான். உங்கள் பழைய நிறுவனத்தின் பிஎப் கணக்குகளை நொடியில் புதிய பிஎப் கணக்குக்கு மாற்றிக் கொள்ளும் அப்டேட்டை வருங்கால வைப்பு நிதி ஆணையம் அறிவித்துள்ளது. 

தேவைப்படும் ஆவணங்கள் 

PF-ஐ புதிய கணக்குடன் இணைக்க உங்களிடம் UAN எண்ணும், அதன் பாஸ்வேர்டும் இருக்க வேண்டும். இது தவிர, வங்கி கணக்கு எண், மொபைல் எண், ஆதார் எண் போன்ற அனைத்து தகவல்களும் உங்கள் UAN எண்ணில் நிரப்பப்பட வேண்டும்.

PF கணக்கு இருப்பு சரிபார்ப்பு 

1. நீங்கள் EPFO -ன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/-க்கு செல்ல வேண்டும்
2. UAN எண் உள்ளிட்டு கடவுச்சொல் மற்றும் கேப்ட்சாவை நிரப்பி லாகின் செய்ய வேண்டும்
3. உள்நுழைந்த பிறகு, நீங்கள் முகப்புப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
4. இங்கே நீங்கள் உறுப்பினர் சுயவிவரத்திற்குச் சென்று உங்கள் தனிப்பட்ட விவரங்களை இங்கே சரிபார்க்க வேண்டும்.
5. குறிப்பாக உங்கள் பெயர், ஆதார் விவரங்கள் மற்றும் பான் கார்ட் விவரங்களை சரிபார்க்க வேண்டும்.
6. இது தவிர, மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண் மற்றும் வங்கி கணக்கு விவரங்களையும் சரியாக நிரப்ப வேண்டும்.
7. PF-ஐ மாற்றுவதற்கு முன், உங்கள் பாஸ்புக்கை நீங்கள் சரிபார்க்க வேண்டும். 
8. பாஸ்புக்கில் கிளிக் செய்த பிறகு, நீங்கள் மீண்டும் ஒருமுறை உள்நுழைய வேண்டும்.
9. உள்நுழைந்த பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஐடியைக் கிளிக் செய்தவுடன், ஒரு முழுமையான தகவல்கள் ஓபனாகும். 

பழைய நிறுவனங்களின் இருப்பு

இப்போது நீங்கள் பணிபுரிந்த அனைத்து நிறுவனங்களின் உறுப்பினர் ஐடி உங்களுக்குக் காண்பிக்கப்படும். இதில் கடைசியாக இருக்கும் ஐடி உங்கள் தற்போதைய நிறுவனமாக இருக்கும். View Passbook என்பதற்குச் செல்வதன் மூலம் உங்கள் அனைத்து நிறுவனங்களின் PF இருப்புத் தொகையை பார்க்கலாம்.

பழைய EPF-ஐ புதியதாக மாற்றுவது எப்படி?

1. பழைய PF-ஐ மாற்றுவதற்கு முன், ஜாயினிங் தேதி மற்றும் வெளியேறிய தேதிகளை புதுப்பிக்க வேண்டியது அவசியம்.
2. சேவை ஹிஸ்டரி பக்கத்துக்கு செல்லுங்கள். பழைய நிறுவனம் இரண்டு தேதிகளையும் புதுப்பித்திருந்தால், உங்கள் PF எளிதாக மாற்றப்படும்.
4. நீங்கள் ஆன்லைன் சேவைகளுக்குச் சென்று ONE MEMBER ONE EPF கணக்கில் (பரிமாற்றக் கோரிக்கை) கிளிக் செய்ய வேண்டும்.
5. ஒரு புதிய பக்கம் உங்கள் முன் திறக்கும், அங்கு நீங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பெறுவீர்கள்.
6. இது தவிர, நீங்கள் ஏற்கனவே இருக்கும் நிறுவனத்தின் பிஎஃப் கணக்கின் விவரங்களைப் பெறுவீர்கள். 
7. அதற்குக் கீழே பிஎஃப் மாற்ற வேண்டிய பழைய நிறுவனத்தின் விவரங்கள் இருக்கும். நீங்கள் இங்கு பெறப்போகும் PF பரிமாற்றம் உங்களின் தற்போதைய அல்லது பழைய முதலாளியால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
8. இதற்குப் பிறகு, உங்கள் UAN விவரங்களை உள்ளிட வேண்டும். நீங்கள் இதைச் செய்தவுடன், உங்கள் முந்தைய அனைத்து நிறுவனங்களின் PF ஐடி வரும்.  எந்த நிறுவனத்தின் பணம் மாற்றப்பட உள்ளதைத் தேர்ந்தெடுக்கவும்.
9. அப்போது உங்களுக்கு வரும் OTP மூலம் அதை அங்கீகரிக்க வேண்டும். அதற்கு முன் GET OTP என்பதைக் கிளிக் செய்யவும்.
10. விண்ணப்ப கோரிக்கை வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்
11. இப்போது நீங்கள் அதன் பிரிண்ட் அவுட்டைப் பெற்று உங்கள் நிறுவனத்திடம் சான்றளிக்க வேண்டும். அது PF அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.
12. 7 முதல் 30 நாட்களில் உங்கள் பழைய PF இருப்பு புதிய கணக்கிற்கு மாற்றப்படும்.

மேலும் படிக்க | பஞ்சாப் வங்கியின் முக்கிய அறிவிப்பு; செப்டம்பர் 1 முதல் உங்கள் கணக்கு மூடப்படும்

மேலும் படிக்க | திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை வாய்ப்பு; கல்வித் தகுதி இதுதான் - உடனே விண்ணப்பியுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News