இங்கிலாந்து நாட்டில் பிளேமவுத் என்ற பகுதியில் இப்படியான வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் ஒன்று வித்தியாசமாகச் செயல்பட்டு வருகிறது..!
இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகளாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் (Social Media) மூலம் நம்மிடம் வந்து சேர்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் பிளேமவுத் என்ற பகுதியில் இப்படியான வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் ஒன்று வித்தியாசமாகச் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்திற்கு “Naked Cleaning Company” எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தை நிக்கி பெல்டோன் மற்றும் அவரது மனைவி லியன் வுல்மேன் ஆகியோர் நடத்தி வருகின்றனர். அப்படி என்ன சிறப்பு என்றால், இந்தநிறுவனத்தின் மூலம் வீட்டு வேலைகளுக்குச் செல்லும் பெண்கள் வேலை செய்யும் நேரத்தில் மேலாடை இல்லாமலோ அல்லது நிர்வாணமாகவோ தான் வேலை செய்வார்களாம்.
Elle lance un service de femmes de ménage entièrement nues https://t.co/NXRXJ98hJr pic.twitter.com/Hh0bPK5XN6
— Le Monde se Gorafise (@LaGorafisation) February 10, 2020
ஆம் நீங்கள் சரியாகத்தான் படித்தீர்கள்... இவர்களின் தனித்துவமே இது தானாம். அந்நாடுகளில் இது போன்ற நிறுவனங்கள் சட்டவிதிமுறை மீறல்கள் இல்லை. அதனால் அவர்கள் தைரியமாக நடத்துகின்றனர். தற்போது இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் அந்நிறுவனத்தினர் இதை அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.
ALSO READ | போனில் இருந்த ஆபாச படங்களை அழித்த பெற்றோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்த மகன்!!
இந்த நிறுவனத்திற்கு துபாயில் பயங்கர வரவேற்பு உள்ளதாம். ஆனால் அந்நாட்டில் இதை சட்டப்பூர்வமாக நடத்த உள்ள வழிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்களாம். அங்கு நடத்த அனுமதி கிடைத்தால் துபாயிலும் இந்த நிறுவனம் துவங்கப்படும் என அந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்நிறுவனம் இந்தாண்டு இருந்த லாக்டவுண் காலத்தில் பிரபலமானது. பலர் லாக்டவுணிற்கு பிறகு இந்த நிறுவனத்தில் பதிவு செய்து வீட்டு வேலையாட்களை வரவழைத்தனர்.
இந்நிறுவனத்தின் சேவை குறித்து சமூகவலைத்தளங்களில் பெரிய அளவில் விவாதம் நடந்துள்ளது. ஆனால் இந்நிறுவனத்தினர் அதைப் பெரிய அளவில் எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து தங்கள் சேவையில் எந்த மாற்றமும் இன்றி நடத்தி வருகின்றனர். இந்நிறுவனம் தற்போது இரண்டு விதமான சேவைகளைக் கொண்டுள்ளது. மேலாடை இல்லாமல் வீட்டு வேலைசெய்ய இந்திய மதிப்பில் ஒரு மணி நேரத்தில் ரூ.6,700 மற்றும் நிர்வாணமாக வேலை செய்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.8,500 எனக் கட்டணம் வசூலிக்கிறது. இந்நிறுவனம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகியிருந்தாலும். இந்நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுக்கு பணியிடத்தில் உள்ள பாதுகாப்பு குறித்த கேள்விகள் பல எழுந்துள்ளன.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR