7th Pay Commission: ஊழியர்களுக்கு பண்டிகையில் அடிச்சது லாட்டரி.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

Massive Gift For Central Employees: நவராத்திரிக்கு முன்னதாக, மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிடலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 8, 2023, 12:20 PM IST
  • அகவிலைப்படி மூன்று சதவீதம் அதிகரிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.
  • உணவுப் பணவீக்கம் 11.51 சதவீதமாக உள்ளது.
  • அரசு நிவாரணம் அளிக்கும் என மத்திய ஊழியர்கள் நம்புகின்றனர்.
7th Pay Commission: ஊழியர்களுக்கு பண்டிகையில் அடிச்சது லாட்டரி.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள் title=

7வது சம்பள கமிஷன் முக்கிய அப்டேட்: பண்டிகைக் காலம் தொடங்கிவிட்டது. வரும் நாட்களில், விநாயகர் சதுர்த்தி முதல் நவராத்திரி, தீபாவளி பண்டிகைகள் வரவுள்ளன. மேலும் வரும் பண்டிகைகளை கருத்தில் கொண்டு மத்திய அரசு தனது லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு கஜானா திறக்க உள்ளது. அந்த வகையில் செப்டம்பர் கடைசி வாரத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடருக்குப் பிறகு, மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை உயர்த்தி மோடி அரசு அறிவிக்கலாம். செப்டம்பர் கடைசி வாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை, மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

அகவிலைப்படி மூன்று சதவீதம் அதிகரிக்கலாம்
ஜூலை மாதம் முதலே அகவிலைப்படி உயர்வை பெற மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் காத்திருக்கின்றனர். மேலும் மத்திய அரசு அகவிலைப்படியை மூன்று சதவீதம் அதிகரித்து 42 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி உயர்வு குறித்த முடிவு ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படும். மேலும் அக்டோபர் மாதத்திற்கான சம்பளம் அகவிலைப்படி உயர்வுடன் வழங்கப்படும். அக்டோபர் மாதத்திற்கான சம்பளத்துடன் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான நிலுவைத் தொகையையும் பெறலாம். மத்திய அரசின் இந்த முடிவால் 47 லட்சம் ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய ஊழியர்களுக்கு சூப்பர் ஜாக்பாட்.. 3 இல்ல 4% டிஏ ஹைக், சம்பளம் உயர்வு

நவராத்திரிக்கு முன் பரிசு!
நவராத்திரியின் புனித திருவிழா அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கி, தசரா அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெறுகிறது. எனவே, மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை இம்மாதம் உயர்த்த முடியும் என்ற முழு நம்பிக்கை உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கம் அகவிலைப்படியை இருமுறை உயர்த்துகிறது. அகவிலைப்படி உயர்வுக்கான முதல் கட்டம் ஜனவரி முதல் மற்றும் இரண்டாம் கட்டம் ஜூலை முதல் அமலுக்கு வரும். சில்லறை பணவீக்க தரவுகளின் அடிப்படையில் DA மற்றும் DR இல் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. ஆகஸ்ட் 2023 இல் ஜூலை மாதம் அறிவிக்கப்பட்ட சில்லறை பணவீக்க விகிதத்தில், பணவீக்க விகிதம் ரிசர்வ் வங்கியின் டோலரென்ஸ் லெவல் 7.44 சதவீதமாக தாண்டியுள்ளது. அதே நேரத்தில் உணவுப் பணவீக்கம் 11.51 சதவீதமாக உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், விலைவாசி உயர்வில் இருந்து தங்களுக்கு அரசு நிவாரணம் அளிக்கும் என மத்திய ஊழியர்கள் நம்புகின்றனர்.

அகவிலைப்படி மூன்று சதவீதம் அதிகரிக்கப்படும் என்று நம்பப்படுகிறது. தொழிலாளர் பணியகத்தால் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களின் நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது. அகவிலைப்படியை நான்கு சதவீதம் அதிகரிக்க மத்திய ஊழியர்கள் எதிர்பார்த்துள்ளனர், ஆனால் மூன்று சதவீத அகவிலைப்படியை அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பரில் ஹைக் அறிவிக்கப்படலாம்:
அரசு ஊழியர்களுக்கு விரைவில் அதாவது இந்த மாதம் (செப்டம்பர் மாதத்தில்) அகவிலைப்படி உயர்வை (DA Hike) வழங்க முடியும். அதன்படி 2023 ஜனவரி முதல் ஜூலை வரையிலான அகவிலைப்படி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இம்முறையும் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளது. தற்போது ஊழியர்களின் அகவிலைப்படி 42 சதவீதமாக உள்ளது. அரசு ஊழியர்களுக்கு உயர்வு அறிவிப்புக்கு பின், இது 46 சதவீதத்தை எட்டும் எனது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 8th Pay Commission விரைவில்? ஊழியர்களின் ஊதியத்தில் 44% உயர்வு எப்போது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News