ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில், LPG சிலிண்டர்களின் விலையை அரசாங்கம் மாற்றுகிறது. அந்த வகையில் LPG கேஸ் சிலிண்டரின் 25 ரூபாய் உயர்ந்துள்ளது.
எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் ஜூலை மாதத்திற்கான எரிவாயு விலையை வெளியிட்டுள்ளன. அதன்படி வர்த்தகம் மற்றும் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை (LPG Cylinder) உயர்ந்துள்ளது. முன்னதாக மே மற்றும் ஜூன் மாதங்களில் உள்நாட்டு சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஏப்ரல் மாதத்தில் எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ .10 குறைக்கப்பட்டது. இன்று டெல்லியில் எல்பிஜி சிலிண்டரின் விலை (LPG Cylinder Hike) ரூ .834 ஆக உள்ளது. டெல்லியில் எல்பிஜி சிலிண்டரின் விலை இந்த ஆண்டு ஜனவரியில் ரூ .694 ஆக இருந்தது, இது பிப்ரவரியில் சிலிண்டருக்கு ரூ .719 ஆக உயர்த்தப்பட்டது.
ALSO READ | இன்று முதல் மாற இருக்கும் முக்கிய விதிகள் என்னென்ன: இதோ முழு விவரம்
பிப்ரவரி 15 ஆம் தேதி விலை ரூ .769 ஆக உயர்த்தப்பட்டது. இதன் பின்னர், பிப்ரவரி 25 ஆம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ .774 ஆக குறைக்கப்பட்டது. மார்ச் மாதத்தில் எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ .819 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
14 KG எல்பிஜி சிலிண்டர் விலை
மாதம் | டெல்லி | கொல்கத்தா | மும்பை | சென்னை |
ஜூலை 1, 2021 | 834 | 861 | 834.5 | 850 |
ஜூன் 1, 2021 | 809 | 835.5 | 809 | 825 |
மே 1, 2021 | 809 | 835.5 | 809 | 825 |
ஏப்ரல் 1, 2021 | 809 | 835.5 | 809 | 825 |
மார்ச் 1 , 2021 | 819 | 845.5 | 819 | 835 |
பிப்ரவரி 25 , 2021 | 794 | 820.5 | 794 | 810 |
பிப்ரவரி 15 , 2021 | 769 | 795.5 | 769 | 785 |
பிப்ரவரி 4 , 2021 | 719 | 745.5 | 719 | 735 |
ஜனவரி 1 , 2021 | 694 | 720.5 | 694 | 710 |
டிசம்பர் 15 , 2020 | 694 | 720.5 | 694 | 710 |
டிசம்பர் 02 , 2020 | 644 | 670.5 | 644 | 660 |
நவம்பர் 01 , 2020 | 594 | 620.5 | 594 | 610 |
அக்டோபர் 01 , 2020 | 594 | 620.5 | 594 | 610 |
19 கிலோ சிலிண்டரின் விலையும் அதிகரித்தது
ஜூன் 1 ம் தேதி டெல்லியில் 19 கிலோ சிலிண்டர் விலை ரூ .122 குறைக்கப்பட்டது. ஆனால், இந்த மாதம் அதன் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஆயிலின் வலைத்தளத்தின்படி, டெல்லியில் 19 கிலோ சிலிண்டர் விலை ரூ .1473.5 லிருந்து ரூ .1550 ஆக உயர்ந்துள்ளது.
19 கிலோ சிலிண்ட விலை
மாதம் | டெல்லி | கொல்கத்தா | மும்பை | சென்னை |
ஜூலை 1, 2021 | 1550 | 1651.5 | 1507 | 1687.5 |
ஜூன் 1, 2021 | 1473.50 | 1544.50 | 1422.50 | 1603.00 |
மே 1, 2021 | 1595.5 | 1667.5 | 1545 | 1725.5 |
ஏப்ரல் 1, 2021 | 1641 | 1713 | 1590.5 | 1771.5 |
மே 1, 2021 | 1614 | 1681.5 | 1563.5 | 1730.5 |
பிப்ரவரி 25, 2021 | 1519 | 1584 | 1468 | 1634.5 |
பிப்ரவரி 15, 2021 | 1523.5 | 1589 | 1473 | 1639.5 |
பிப்ரவரி 4, 2021 | 1533 | 1598.5 | 1482.5 | 1649 |
ALSO READ | LPG மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து விட்டதா என நொடிகளில் தெரிந்து கொள்ளலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR