எல்ஐசி வழங்கும் காப்பீட்டு திட்டங்கள் மக்களின் விருப்பமான முதலீடாக இருந்து வருகிறது. வயதில் மூத்தவர்களுக்கு மட்டுமல்லாது, எல்ஐசி குழந்தைகளுக்கும் பலவித நன்மைகளை வழங்கும் வகையில் சூப்பரான திட்டத்தை வழங்குகிறது. எல்ஐசி கிட் திட்டமானது குழந்தைகளின் எதிர்கால நலனுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். குழந்தையின் எதிர்காலத்திற்காக சேமிக்க விரும்புபவர்களுக்கு எல்ஐசி குழந்தைத் திட்டம் 2023-ஐ தவிர வேறு எந்த திட்டமும் சிறப்பாக அமைந்திட முடியாது. குழந்தைகளின் கல்வி தொடங்கி பல எதிர்கால தேவைகளை இந்த திட்டம் பூர்த்தி செய்கிறது மற்றும் இது உங்களுக்கு வரி விலக்குடன் கூடிய சிறந்த நிதியை தருகிறது. இந்த திட்டத்தில் பாலிசிதாரர்களுக்கு இரண்டு வகையான ப்ரீமியத்திற்கான விருப்பங்கள் வழங்கப்படுகிறது, பாலிசிதாரரின் மரணத்தின் போது மொத்த தொகையும் வழங்கப்பட்டுவிடும்.
மேலும் படிக்க | 7th Pay Commission: அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அப்டேட், எப்போது அறிவிப்பு?
எல்ஐசி ஜீவன் தருண் அல்லது பிற எல்ஐசி ஏஜென்சி மூலம் நீங்கள் குழந்தைகளுக்கான காப்பீட்டு திட்டங்களை வாங்கி கொள்ளலாம். இந்த திட்டங்களை நீங்கள் ஆன்லைனிலும் வாங்கி கொள்ள முடியும், இதற்கு நீங்கள் குழந்தையின் வயது, உறவு முறை, வென்ச்சர் ஸ்கைலைன், ஸ்பெக்குலேஷன் சம் போன்ற தகவல்களை உள்ளிட வேண்டியது அவசியம். இந்த திட்டத்திற்கு நீங்கள் பாலிசி பாண்டுகள், அடையாள சான்று, க்ளெய்ம் டிஸ்சார்ஜ் படிவம், வங்கியின் தகவல்கள் போன்றவற்றை முக்கிய ஆவணமாக சமர்ப்பிக்க வேண்டும்.
எல்ஐசியின் குழந்தைகளுக்கான திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் அந்த குழந்தையின் 23 வயதில் கிட்டத்தட்ட ரூ.5 லட்சம் வரையிலான நன்மைகளை பெற முடியும். இந்த திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு கேஷ்பேக் போன்ற நன்மைகளும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 0 முதல் 12 வயது வரையிலுள்ள குழந்தைகள் சேரலாம் மற்றும் இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 23 வயது முதல் 27 வயது வரை ஆகும். மேலும் இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.1 கோடி வரை பங்களிக்கலாம்.
மேலும் படிக்க | குடும்ப தலைவிகளுக்கு மகிழ்ச்சியான அப்டேட்!..எல்பிஜி விலை விரைவில் குறையும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ