எல்ஐசி-யின் அசத்தல் திட்டம்! ஒருமுறை முதலீடு செய்தால் மாதம் ரூ.50,000 வருமானம்!

எல்ஐசியின் சாரல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நமக்கு 40 வயதிலிருந்தே பாலிசிதாரருக்கு ஓய்வூதியம் கிடைக்கப்பெறுகிறது.   

Written by - RK Spark | Last Updated : Sep 14, 2022, 06:28 AM IST
  • பொதுவாக 60 வயதுக்கு மேல் ஆன போதுதான் நமக்கு ஓய்வூதியம் கிடைக்க தொடங்கும்.
  • சாரல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் 40 வயதிலிருந்தே ஓய்வூதியம் கிடைக்கப்பெறுகிறது.
  • இதில் பாலிசி எடுக்க அதிகப்பட்ச வயது வரம்பு 40 முதல் 80 வரை.
எல்ஐசி-யின் அசத்தல் திட்டம்! ஒருமுறை முதலீடு செய்தால் மாதம் ரூ.50,000 வருமானம்! title=

பணம் என்பது எல்லா வயதினருக்கும் எப்போதும் தேவைப்படும் அத்தியாவசியமான ஒன்று, இளமைக்காலத்தில் வேலை பார்க்கும் போது நமக்கு மாதந்தோறும் பணம் வரும் அதனால் நமது நிதி சிக்கல்களை சமாளித்து கொள்ள முடியும்.  அதுவே நமது முதுமை காலத்திற்கு பின்னர் நிதி சிக்கல்கள் ஏற்படும் அதனை சமாளிக்க நாம் பல திட்டங்களில் முதலீடு செய்கிறோம், சில திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நமக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது.  பொதுவாக 60 வயதுக்கு மேல் ஆன போதுதான் நமக்கு ஓய்வூதியம் கிடைக்க தொடங்கும். ஆனால் எல்ஐசியின் சாரல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நமக்கு 40 வயதிலிருந்தே ஓய்வூதியம் கிடைக்கப்பெறுகிறது. 

இது ஒரு சிங்கிள் பிரீமியம் ஓய்வூதியத் திட்டமாகும், அதனால் இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு முறை மட்டுமே பிரீமியத்தை செலுத்தி வாழ்நாள் முழுவதும் பெரியளவில் ஓய்வூதிய தொகையை பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் நீங்கள் பாலிசி எடுத்தவுடனேயே ஓய்வூதியத்தை பெற ஆரம்பித்துவிடுவீர்கள்.  இந்த திட்டத்தில் உங்களுக்கு இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது, முதல் ஆப்ஷன்படி நீங்கள் எடுக்கப்போகும் பாலிசி பாலிசிதாரரின் பெயரிலேயே இருக்கும், பாலிசிதாரர் உயிருடன் இருக்கும் வரை அவருக்கு ஓய்வூதியம் கிடைக்கும் அவரை இறந்த பின்னர் அந்த தொகை அவரது நாமினிக்கு வழங்கப்படும்.

மேலும் படிக்க | தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை TNEA 2020 தரவரிசை பட்டியல் வெளியீடு: tneaonline.org இல் சரிபார்க்கவும்

அடுத்ததாக இரண்டாவது ஆப்ஷனின் படி, பாலிசிதாரருக்கு கிடைக்கும் ஓய்வூதியம் அவர் இறந்த பின்னர் நேரடியாக அவரது மனைவிக்கு கிடைக்கும்.  அவர் மனைவியும் இறந்த பிறகு அடிப்படை தொகை நாமினிக்கு கொடுக்கப்படும்.  இதில் பாலிசி எடுக்க அதிகப்பட்ச வயது வரம்பு 40 முதல் 80 வரை, இந்த திட்டத்தில் பணத்தை வேண்டுமென்றால் காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு அடிப்படையில் எடுத்துக்கொள்ளலாம்.  இந்த திட்டத்தில் ஒரு முறை ரூ.10 லட்சம் ப்ரீமியமாக செலுத்தினால் உங்களுக்கு மாதந்தோறும் ஓய்வூஓதியமாக ரூ.50,250 கிடைக்கும்.

மேலும் படிக்க | இந்த காரணங்களால் உங்களின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News