எல்ஐசி புதிய ஜீவன் சாந்தி திட்டம்: ஒரு முறை பிரீமியம் செலுத்தி வாழ்நாள் ஓய்வூதியம் பெறலாம்!

ஆன்லைன் மூலமாக எல்ஐசி நியூ ஜீவன் சாந்தி திட்டத்தில் சேர விரும்பும் பாலிசிதாரர் எல்ஐசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.licindia.in-க்கு செல்ல வேண்டும்.   

Written by - RK Spark | Last Updated : Nov 2, 2022, 01:59 PM IST
  • எல்ஐசி நியூ ஜீவன் சாந்தி எனும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
  • சிங்கிள் லைஃப் மற்றும் ஜாயிண்ட் லைஃப் தேர்வுசெய்ய ஆப்ஷன் வழங்கப்படுகிறது.
  • குறைந்தபட்ச வெஸ்டிங் வயது 31 மற்றும் அதிகபட்ச வெஸ்டிங் வயது 80 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எல்ஐசி புதிய ஜீவன் சாந்தி திட்டம்: ஒரு முறை பிரீமியம் செலுத்தி வாழ்நாள் ஓய்வூதியம் பெறலாம்! title=

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமானது இந்திய மக்களுக்கு சிறந்த வருமானத்தை தரும் வகையில் பல்வேறு முதலீட்டு திட்டங்களை வழங்கி வருகிறது, அதில் தற்போது ஒற்றை பிரீமிய முதலீட்டில் வாழ்நாள் முழுவதும் பென்ஷன் பெறக்கூடிய வகையில் எல்ஐசி நியூ ஜீவன் சாந்தி எனும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி இருக்கிறது.  இந்த திட்டத்தில் பாலிசிதாரர்கள் ஒரே தவணையில் மொத்த பணத்தையும் முதலீடு செய்து அதிகமான வருமானம் அல்லது ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள முடியும்.  இந்த திட்டத்தில் பாலிசிதாரருக்கு சிங்கிள் லைஃப் மற்றும் ஜாயிண்ட் லைஃப் என வருடாந்திரத் தொகையைத் தேர்வுசெய்ய ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | RBI Digital Rupee:இன்று அறிமுகமாகிறது டிஜிட்டல் கரன்சி; ரிசர்வ் வங்கி அறிவிப்பு 

எல்ஐசி நியூ ஜீவன் சாந்தி திட்டத்தில் குறைந்தபட்ச கொள்முதல் விலை ரூ. 1,50,000 மற்றும் அதிகபட்ச கொள்முதல் விலைக்கு வரம்பு இல்லை, இதில் பங்களிக்க பாலிசிதாரர் குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சமாக 79 வயது வரை இருக்க வேண்டும்.  குறைந்தபட்ச வெஸ்டிங் வயது 31 மற்றும் அதிகபட்ச வெஸ்டிங் வயது 80 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு ஒன்பது வருடாந்திர விருப்பங்களைத் தேர்வு செய்ய வழங்குகிறது, பாலிசியின் தொடக்கத்தில் வருடாந்திர வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன, பாலிசிதாரர்கள் தங்கள் தேவைகள் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப விருப்பத்தை தேர்வு செய்யலாம். 

ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் என இரண்டு முறையிலும் எல்ஐசி நியூ ஜீவன் சாந்தி திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.  ஆன்லைன் மூலம் இத்திட்டத்தில் சேர எல்ஐசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.licindia.in-க்கு செல்ல வேண்டும்.  ஆஃப்லைன் வழியாக இத்திட்டத்தை பெற எல்ஐசி முகவர் மூலமாகவோ அல்லது உங்கள் அருகிலுள்ள எல்ஐசி கிளைக்கோ செல்லலாம்.  மேலும் இந்த  திட்டத்தில் பாலிசிதாரர்கள் கூட்டாக சேர்ந்தும் முதலீடு செய்யலாம்.  அதாவது தாத்தா, பாட்டி, பெற்றோர், குழந்தைகள், பேரக்குழந்தைகள், மனைவி அல்லது உடன்பிறந்தவர்கள் என குடும்பத்தினருடன் இணைந்து நீங்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்து கொள்ளாலாம்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, அடிப்படை ஊதியம் ரூ.9,000 அதிகரிக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News