அரசு ஊழியர்களுக்கான புதிய அகவிலைப்படி குறித்த செய்தி ஒருபுறம் இருந்தாலும், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் 18 மாத கால நிலுவையில் உள்ள டிஏ நிலுவைத் தொகை குறித்து எதிர்பார்ப்பு தான் இப்போது அதிகளவில் உள்ளது. எப்போது நிலுவை தொகை கிடைக்கும் என்று தொடர்ந்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதுபற்றி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓய்வூதியதாரர்கள் பிரச்சினையை விரைவில் தீர்த்து வைக்குமாறு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளனர். அதேமயம் மறுபுறம் பேச்சுவார்த்தை மூலம் சமரசம் செய்வது குறித்து ஊழியர் சங்கம் யோசித்து வருகிறது. இந்த பிரச்சனை குறித்து அடுத்த மாதம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை அதிகரித்த மத்திய ஊழியர்களின் பணவீக்க நிலுவைத் தொகை நிலுவையில் உள்ளது, இது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. மேலும் ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கப்படாது என்று முன்னர் செய்திகள் வெளியான நிலையில் தற்போது வெளியாகியுள்ள சில தகவல்களின்படி, ஊழியர் ஓய்வூதியம் பெறுவோர் அமைப்பானது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்த பேச்சுவார்த்தை மூலம் அரசாங்கம் இதற்கு விரைவில் தீர்வு காணும் என்றும் தொழிற்சங்கம் நம்பிக்கை தெரிவித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து 18 நிலுவைத் தொகையை ஊழியர்களுக்கு வழங்குவது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓய்வூதியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
ஊழியர்கள் எழுதிய கடிதத்தின்படி, இந்திய ஓய்வூதியர் சங்கம் (பிஎம்எஸ்) பிரதமர் மோடியிடம், பணியாளர்கள், ஓய்வூதியதாரர்களின் வருமானத்திற்கு முக்கிய ஆதாரமாக உள்ள நிலுவைத் தொகை மிகப்பெரியதாக இருப்பதால், பிரச்சினையை விரைவில் தீர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. நிதியமைச்சகம், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மற்றும் செலவினத் துறை அதிகாரிகளுடன் கூட்டு ஆலோசனை(ஜேசிஎம்) கூட்டம் விரைவில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறான நிலையில், ஆகஸ்டில், 18 மாத நிலுவைத் தொகையை தீர்த்து, ஊழியர்களுக்கு விரைவில் ஊதியம் வழங்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால், 52 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 மாத நிலுவைத் தொகை வழங்குவது உறுதியாகிவிட்டால் ஊழியர்கள்/ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அதிகளவு தொகை கிடைக்கும். லெவல்-13 (7வது சிபிசி அடிப்படை ஊதிய அளவு ரூ. 1,23,100 முதல் ரூ. 2,15,900) நிலுவைத் தொகை கிடைக்கும். நிலை-14 (ஊதிய அளவு) ரூ. 1,44,200 முதல் ரூ.2,18,200. ஊழியரின் அடிப்படைச் சம்பளம் ரூ.18,000 எனில், அவருக்கு 3 மாதங்களுக்கான டிஏ நிலுவைத் தொகை (4,320+3,240+4,320) = 11,880 ஆக இருக்கும். ரூ.56,000 என்றால் அவருக்கு 3 மாத டிஏ நிலுவைத் தொகை (13,656 + 10,242 + 13,656) = ரூ.37,554 கிடைக்கும்.
மேலும் படிகக்க | ITR Filing Update: ITR தாக்கல் செய்ய வேண்டிய தேதியை தவறவிட்டால் என்ன நடக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ