Gold Rate today: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!

தங்க நகைகள் பிடிக்காத பெண்களை பார்ப்பது மிக மிக அரிதான விஷயங்களில் ஒன்று.  அதுவும், தென் இந்தியாவை பொறுத்தவரை அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 21, 2021, 01:37 PM IST
  • இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையில் பெரியளவில் மாற்றம் ஏதும் இல்லை.
  • சென்னையை பொறுத்தவரை இன்று ஆபரண தங்கத்தின் விலை சற்றே அதிகரித்து காணப்படுகிறது.
  • வெள்ளி விலையை பொறுத்தவரையில் பெரியளவில் மாற்றம் ஏதும் இல்லை.
Gold Rate today: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.! title=

Gold, Silver Rate Update, 21 June 2021: தங்க நகைகள் பிடிக்காத பெண்களை பார்ப்பது மிக மிக அரிதான விஷயங்களில் ஒன்று. அதுவும், தென்னிந்தியாவை பொறுத்தவரை அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது என்பதிலிருந்து, தமிழ்நாட்டு பெண்களுக்கு தங்கத்தின் மீதுள்ள மோகத்தை புரிந்து கொள்ளலாம்.  தமிழ்நாட்டில் உள்ள நகை கடைகளின் கொரோனா நெருக்கடியிலும் கூட்டத்தை பார்க்க முடிகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை தங்கம் ஒவ்வொரு நிகழ்விலும் இன்றியமையாத அங்கமாக உள்ளது.

தொடர்ச்சியாக கடந்த ஐந்து நாட்களாக தங்கம் விலையானது (Gold Price) தொடர்ந்து குறைந்து வந்தது, தங்கத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கும், தங்கம் வாங்குபவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக இருந்தது.

இந்நிலையில், இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையில் பெரியளவில் மாற்றம் ஏதும் இல்லை. தற்போது 10 கிராமுக்கு 82 ரூபாய் குறைந்து, 46,646 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 

ALSO READ | Gold Hallmark: ஹால்மார்க் முத்திரை இல்லாத நகைகளின் நிலை என்ன..! 

சென்னையை பொறுத்தவரை இன்று ஆபரண தங்கத்தின் விலை சற்றே அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் 22 கேரட்  தங்கத்தின் விலை கிராமுக்கு 6 ரூபாய் என்ற  அளவில் அதிகரித்து, கிராம் ஒன்றுக்கு 4,435 ரூபாயாகவும்,  சவரன் ஒன்றுக்கு 48 ரூபாய் அதிகரித்து 35,480 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் (Chennai) இன்று , 24 கேரட் தங்கம் விலை தூய தங்கத்தின் விலையும், சற்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் 24 கேரட்  தங்கத்தின் விலையானது 9 ரூபாய் அதிகரித்து, 4,838 ரூபாய் என்ற அளவிலும்,  சவரன் ஒன்றுக்கு 72 ரூபாய் அதிகரித்து 38,704 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் பெரியளவில் மாற்றம் ஏதும் இல்லை. இன்று கிராம் ஒன்றுக்கு 73.10 ரூபாய் என்ற அளவிலும்,  கிலோ ஒன்றுக்கு 73,100 ரூபாய் என்ற அளவிலும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக விலையில் சிறிது தடுமாற்றம் காணப்பட்ட நிலையில், இன்று மீண்டும் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

ALSO READ | இன்று முதல் தங்கத்திற்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்; முக்கிய விபரம் உள்ளே..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News