ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே கப்பல் போக்குவரத்துக்கு உயிர்நாடியாக இருக்கும் எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய் என்பது உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தக வழிகளில் ஒன்றாகும். மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் இந்த கால்வாய் 163 கி.மீ நீளமும் 300 மீ அகலமும் கொண்டது. இந்த கால்வாயில் ஏற்படும் போக்குவரத்து தடைபட்டால், ஆசியாவில் இருந்து ஆப்பிரிக்கா வழியே ஐரோப்பாவுக்கு செல்ல சுமார் 34 நாட்கள் ஆகும்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சூயஸ் காலவாயின் குறுக்கே, உலகின் பிரம்மாண்ட கப்பல்களில் ஒன்றான எவர் கிரீன் (Ever green) என்னும் கப்பல் சிக்கிக் கொண்டது. உலக வர்த்தகத்தில் சுமார் 10% வர்த்தக போக்குவரத்து நடைபெறும் இந்த கால்வாயில் மாட்டிக் கொண்டுள்ள கப்பலால், இதனை கடக்க காத்திருக்கும் நூற்றுக்கணக்கான சரக்கு கப்பல்கள் போக வழி ஏதும் இன்றி ஆங்காங்கே நிற்பதால் கடலில் டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது.
பிரம்மாண்டமான கப்பலான எவர் கிரீன், சீனாவிலிருந்து (China) நூற்றுக்கணக்கான கன்டெய்னர்களுடன் நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நோக்கி புறப்பட்டது. மலேசியா வழியாக வந்த எவர் கிரீன் கப்பல் 22-ம் தேதி எகிப்திலுள்ள சூயஸ் கால்வாயை வந்தடைந்தது. மார்ச் 23-ம் தேதி திடீரென ஆவேசத்துடன் வீசிய சூறாவளி காற்றினால், கட்டுபாட்டை இழந்த கப்பல் காலவாயின் குறுக்கே நகர முடியாமல் சிக்கிக் கொண்டது.
இது உலக வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, பொருளாதார சந்தையில் பெரும் நெருக்கடி ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேற்கு கடற்கரையில் ஆசியாவிலிருந்து அதிகமான ஏற்றுமதிகளைப் பெறும் அமெரிக்காவில் இதன் நேரடி தாக்கம் குறைவாக இருக்கும் என்றாலும், இந்த மாட்டிக் கொண்டுள்ள கப்பலை அகற்ற இன்னும் இசில வாரங்கள் ஆனால், பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.
இருப்பினும், ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி தாமதமாகலாம். மேலும் போக்குவரத்து ஸ்தபித்துள்ளதன காரணமாக, சரக்கு சப்ளை செய்து முடித்து, காலியாக உள்ள சரக்கு கப்பல்கள், ஆசியாவிற்கு திரும்புவதிலும் சிக்கல் உள்ளதால், சரக்கு கப்பல்கள் பற்றாக்குறை ஏற்பட்டு பொருட்களின் சப்ளை பாதிக்கப்படலாம் என வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பல இழுவைப் படகுகள் மூலம் கால்வாயின் நடுவே சிக்கியுள்ள கப்பலை திருப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ALSO READ | விண்வெளியில் விவசாயம் சாத்தியமா; விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR