ரிலையன்ஸ் ஜியோ (Reliance JIO) பல புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, இது ஜியோ கிரிக்கெட் ப்ளான் என அழைக்கப்படுகிறது. இந்த புதிய கிரிக்கெட் ப்ளான்களில், ரூ.401ப்ளான், ரூ 499 ப்ளான், ரூ 598 ப்ளான், ரூ 777 ப்ளான் மற்றும் ரூ .2,599 ப்ளான் ஆகியவை அடங்கும். இந்த ப்ளான்கள் அனைத்திலும் ஒரு ஆண்டுக்கான டிஸ்னி + Disney+ ஹாட்ஸ்டார் விஐபி Hotstar VIP சந்தாவும் அடங்கும். இதன் உதவியுடன் வாடிக்கையாளர்கள் ஐபிஎல் 2020 (IPL 2020) போட்டிகளை நேரலையாக பார்க்க முடியும்.
ரூ.401 ப்ளானில், ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு 90 ஜிபி டேட்டா, ஜியோ-டு-ஜியோ எண்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள், ஜியோ அல்லாத எண்களுக்கு வரையறுக்கப்பட்ட FUP நிமிடங்கள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்குகிறது.
அதன் 499 ப்ளானில், நிறுவனம் 56 நாட்களுக்கு 84 ஜிபி டேட்டா வழங்குகிறது. ரூ. 598 திட்டத்தில் 112 ஜிபி டேட்டா, ஜியோ-டு-ஜியோ எண்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள் ஜியோ அல்லாத எண்களுக்கு வரையறுக்கப்பட்ட FUP நிமிடங்கள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை 56 நாட்களுக்கு வழங்குகிறது.
அதன் 777 ரூபாய்க்கான ப்ளானில், நிறுவனம் 84 நாட்களுக்கு 131 ஜிபி டேட்டா, ஜியோ-டு-ஜியோ எண்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள் ஜியோ அல்லாத எண்களுக்கு வரையறுக்கப்பட்ட FUP நிமிடங்கள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை 84 நாட்களுக்கு வழங்குகிறது.
ரூ .2,599 ப்ளானில் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு 740 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை 365 நாட்களுக்கு வழங்குகிறது.
இது தவிர, ரீசார்ஜ் செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களும், தினசரி, கிரிக்கெட் நட்சத்திரங்களால் ஆட்டோகிராப் செய்யப்பட்ட கிரிக்கெட் பந்துகளை வெல்லும் வாய்ப்பையும் பெறுகிறார்கள்.
Jio.com, MyJio app, பிற ரீசார்ஜ் வலைத்தளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஜியோ கடைகள் வழியாக ஜியோ வாடிக்கையாளர்கள் மேற்கண்ட எந்தவொரு ப்ளானையும் பெறலாம்.பின்னர் இலவச டிஸ்னி + Disney+ ஹாட்ஸ்டார் விஐபி (Hotstar VIP) சந்தாவை செயல்படுத்த JioTV செயலியில், சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
மேலும் படிக்க | நீக்கப்பட்ட சில மணிநேரத்தில் கூகுள் ஸ்டோரில் சேர்க்கப்பட்ட Paytm..!!!