மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் என்னும் இலவச மருத்துவ காப்பீடு... விண்ணப்பிக்கும் முறை..!!

Ayushman Bharat Scheme: மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட மருத்துவமனைகளில் குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். சாமான்ய மக்கள் இலவச சிகிச்சை பெறும் வகையில் ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 11, 2024, 04:38 PM IST
  • அரசாங்கத்தின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் அட்டை கொடுக்கப்படுகிறது.
  • அட்டைதாரர் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறலாம்.
  • சிகிச்சையின் போது ஏற்படும் முழு செலவையும் அரசே ஏற்கிறது.
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் என்னும் இலவச மருத்துவ காப்பீடு... விண்ணப்பிக்கும் முறை..!! title=

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட மருத்துவமனைகளில் குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். சாமான்ய மக்கள் இலவச சிகிச்சை பெறும் வகையில் ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஆயுஷ்மான் பவ என்ற பிரச்சாரத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. மத்திய அரசு சாதாரண மக்களுக்கு காப்பீடு வசதியை இந்த திட்டத்தின் மூலம் வழங்குகிறது. ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் மூலம் சாதாரண மக்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. 

மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்னும் மருத்துவ சேவைக்கான திட்டத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கியது. மக்களுக்கான இந்த இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்காக திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.8000 கோடிக்கும் அதிகமாக மத்திய அரசு நிதியும் ஒதுக்கீடு செய்கிறது குறிப்பிடத்தக்கது. இதன் பலன்களை லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஏழை மற்றும் எளிய மக்களுக்கு ஆயுஷ்மான் அட்டை வழங்கப்படுகிறது. இதன் மூலம் இலவச சுகாதார சேவையின் பலனை பெறலாம்.

நீங்களும் 5 லட்சம் வரையிலான இலவச மருத்துவக் காப்பீட்டின் பலனைப் பெற, ஆயுஷ்மான் அட்டை வைத்திருக்க வேண்டும். இதன் மூலம், அட்டைதாரர்கள் இலவச சிகிச்சை பெறலாம். ஆயுஷ்மான் கார்டு பெற உங்களிடம் சில முக்கியமான ஆவணங்கள் இருக்க வேண்டும். நீங்கள் தகுதியுடையவராக இருந்தால் மட்டுமே உங்கள் ஆயுஷ்மான் அட்டையை பெற முடியும். ஆயுஷ்மான் பாரத் திட்டம் (India) மற்றும் அதன் விண்ணப்ப செயல்முறை பற்றி தெரிந்து கொள்வோம்.

5 லட்சம் வரை இலவச சிகிச்சை!

அரசாங்கத்தின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் அட்டை கொடுக்கப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், அட்டைதாரர் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறலாம். சிகிச்சையின் போது ஏற்படும் முழு செலவையும் அரசே ஏற்கிறது. உங்கள் நிதி நிலை பலவீனமாக இருந்தால், உங்கள் ஆயுஷ்மான் அட்டையை உருவாக்கலாம், ஆனால் இதற்கு 3 ஆவணங்கள் இருப்பது அவசியம். இவற்றில் ஒன்று கூட குறைவாக இருந்தால் உங்கள் விண்ணப்பம் ரத்து செய்யப்படலாம்.

ஆயுஷ்மான் கார்டு பெற என்னென்ன ஆவணங்கள் தேவை?

1. ஆதார் அட்டை

2. ரேஷன் கார்டு

3. முகவரி ஆதாரம்

இவை அனைத்தையும் தவிர, விண்ணப்பதாரர் செயலில் உள்ள தொலைபேசி எண்ணையும் கொண்டிருக்க வேண்டும். இந்த ஆவணங்களில் ஏதேனும் ஒன்று விடுபட்டால் உங்கள் விண்ணப்பம் ரத்து செய்யப்படலாம்.

மேலும் படிக்க | SIP: மாதம் ரூ. 5000 முதலீடு போதும்... அதனை ஒரு கோடியாக மாற்றும் மேஜிக் பார்முலா..!!

ஆயுஷ்மான் கார்டு பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி

நீங்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு தகுதியுடையவராக இருந்து, தேவையான அனைத்து ஆவணங்களையும் வைத்திருந்தால், உங்கள் அருகில் உள்ள ஜன் சேவா கேந்திராவிற்கு சென்று ஆயுஷ்மான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். நீங்கள் விரும்பினால், ABHA இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலமும் விண்ணப்பிக்கலாம். 

1. மத்திய அரசின் healthid.ndhm.gov.in என்னும் இணைய தளத்துக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

2. இந்த இணையதளத்துக்குள் நுழைந்ததும் Create ABHA Number என்ற லிங்க் இருக்கும். அந்த எண்ணை பெறுவதற்கு நீங்கள் உங்களுடைய அடையாளத்தை உறுதி படுத்த ஆதார் எண் அல்லது டிரைவிங் லைசன்ஸை ஆதாரமாகக் கொடுக்கலாம்.

3. ஆதார் எண்ணை வைத்து உள் நுழையும்போது உங்களுடைய ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். இந்த எண்ணை பதிவிட்டு லாக்இன் செய்ய வேண்டும்.

4. லாக் இன் செய்த பின், உங்களுக்கான மருத்துவ காப்பீட்டு அட்டை தோன்றும். இதனை டவுன்லோடு செய்து கொள்ளலாம். 

சமீபத்தில், ஆயுஷ்மான் பாரத் உடல் நலம் மற்றும் ஆரோக்கிய மையங்களை 'ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்' என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 'ஆயுஷ்மான் பாரத்-சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள்' என அழைக்கப்பட்டன.

மேலும் படிக்க | இந்த வங்கிகளுக்கு நிதி அமைச்சகம் புதிய உத்தரவு! உங்கள் வங்கியின் பெயர் உள்ளதா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News