வீடு வாங்குபவர்களுக்கு Good News... வீட்டுக் கடன் வெறும் 3.99% வட்டியில் கிடைக்கும்..!!!

வீடு வாங்குபவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் வீட்டுக் கடன்.  இப்போது பண்டிகை காலத்தில், வீட்டுக் கடன் பெறுபவர்களுக்கு அதிரடி சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 20, 2020, 12:22 PM IST
  • வீடு வாங்குபவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் வீட்டுக் கடன். இப்போது பண்டிகை காலத்தில், வீட்டுக் கடன் பெறுபவர்களுக்கு அதிரடி சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது
  • பாரம்பரியமாக, பண்டிகை காலங்களில் வீடுகளின் விற்பனை மிகவும் அதிகமாக காணப்படும்.
  • ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க பல்வேறு திட்டங்களைத் தொடங்குவதற்கு இது தான் காரணம்.
வீடு வாங்குபவர்களுக்கு Good News... வீட்டுக் கடன் வெறும் 3.99% வட்டியில் கிடைக்கும்..!!! title=

வீடு வாங்குபவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் வீட்டுக் கடன்.  இப்போது பண்டிகை காலத்தில், வீட்டுக் கடன் பெறுபவர்களுக்கு அதிரடி சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

டாடா ஹவுசிங், பண்டிகை காலத்தை முன்னிட்டு, அதிரடி சலுகையாக மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்கும் கவர்ச்சிகரமான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. டாட்ட நிறுவனம் 3.99 சதவீத வட்டிக்கு வீட்டுக் கடன்களை (Home Loan) வழங்குகிறது. இது தவிர கூடுதல் பரிசுகளும் உண்டு. இருப்பினும், இந்த வட்டி முதல் வருடத்திற்கு மட்டுமே பொருந்தும்.

வீடு வாங்குபவர்கள் டாடா ஹவுசிங்கில் இருந்து பெறும் வீட்டுக் கடன்களுக்கு ஒரு வருடத்திற்கு 3.99 சதவீத வட்டி விகிதம் என்ற அளவில் செலுத்த வேண்டும். மீதமுள்ள வட்டியை நிறுவனம் செலுத்தும். இந்த திட்டம் நவம்பர் 20 வரை செல்லுபடியாகும் என கூறப்பட்டுள்ளது.

ALSO READ | தீராத பண பிரச்சனையா...கவலை வேண்டாம்.. இந்த நான்கு விஷயங்களை கடைபிடித்தால் போதும் ..!!!

இந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் ஒரு வருடத்திற்கு 3.99 சதவீத நிலையான வட்டி விகிதத்தை மட்டுமே செலுத்த வேண்டும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள செலவை டாடா ஹவுசிங் ஏற்கும். முன்பதிவு செய்தபின் சொத்துக்களைப் பொறுத்து வாடிக்கையாளர்களுக்கு ரூ .25,000 முதல் ரூ .8 லட்சம் வரை பரிசு வவுச்சர்கள் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 10 சதவீதம் செலுத்தி சொத்து பதிவு செய்த பின்னர் பரிசுக்கான வவுச்சர் வழங்கப்படும்.

டாடா ரியால்டி மற்றும் இன்ப்ராஸ்டர்கசர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் தத் கூறுகையில், "கொரோனா தொற்றுநோய் (Corona Virus) காரணமாக ரியல் எஸ்டேட் துறை கடந்த சில மாதங்களில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது முன்னேற்றத்திற்கான சில அறிகுறிகள் தெரிகின்றன. ரியல் எஸ்டேட் துறைக்கு நிவாரணம் வழங்க அரசாங்கமும் ரிசர்வ் வங்கியும் (RBI) பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இப்போது வீடு வாங்குபவர்களுக்கு உதவுவது எங்களின் குறிக்கோள். பாரம்பரியமாக, பண்டிகை காலங்களில் வீடுகளின் விற்பனை அதிகம். ரியல் எஸ்டேட்  நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க பல்வேறு திட்டங்களைத் தொடங்குவதற்கான காரணம் இதுதான்” எனக் கூறினார்.

ALSO READ | Dry Fruits: கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ள உலர் பழங்களின் விலைகள்

மும்பையின் (Mumbai) கல்பதரு லிமிடெட் நிறுவனமும் பண்டிகை கால சலுகை திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ், வீடு வாங்குபவர்கள் 10 சதவீதம் மட்டுமே செலுத்த வேண்டும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வேண்டாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களில் ஜீரோ ஸ்டாம்ப் ட்யூட்டி சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, வாத்வா குழுமம் தனது தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டத்தில் வெறும் 10% கட்டணத்துடன் ரெடி டு மூவ் இன் வீடுகளுக்கு முன்பதிவு செய்வதற்கான சலுகைகளை வழங்கியுள்ளது. மீதமுள்ள நிலுவைத் தொகையை ஒரு வருடம் கழித்து செலுத்த வேண்டும்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News