எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க கட்டணம்

எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதால், அதன் முழு விவரத்தையும் வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 25, 2023, 05:01 PM IST
  • ஏடிஎம்மில் பணம் எடுக்க கட்டணம்
  • ஒவ்வொரு வங்கிக்கான வழிமுறைகள்
  • அவசியமாக தெரிந்து கொள்ளுங்கள்
எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க கட்டணம் title=

ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான கட்டணம்: அரசு வங்கியாக இருந்தாலும் சரி, தனியார் வங்கியாக இருந்தாலும் சரி, ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு கட்டணம் வசூலிக்க விதிமுறைகளை வகுக்கப்பட்டுள்ளது. இதற்கு வங்கிகள் வரம்பு நிர்ணயித்துள்ளன. அதனைக் கடக்கும் வாடிக்கையாளரிடம் கட்டணம் வசூலிக்கப்படும். பல நேரங்களில் வாடிக்கையாளர் மாதாந்திர வரம்பை கடந்திருப்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அதனால் வரம்புக்கு மேல் ஏடிஎம்மில் எடுக்கப்படும் பணம் ஒவ்வொரு முறைக்கும் ரூ.21 கட்டணம்  செலுத்துவார்கள்.  ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களின்படி, வங்கிகள் வாடிக்கையாளரிடம் இருந்து அதிகபட்சமாக ரூ.21 வசூலிக்கலாம். இதுபோன்ற சூழ்நிலையில், எந்த வங்கி என்ன கட்டணம் வசூலிக்கிறது?, எவ்வளவு வரம்பு? என்று வாடிக்கையாளராகிய நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்... இந்த நாளில் டிஏ ஹைக் அறிவிப்பு!!

பாரத ஸ்டேட் வங்கி (SBI)

எஸ்பிஐ அதன் ஏடிஎம்களில் ரூ.25,000க்கு மேல் இருப்பு வைத்திருக்கும் கணக்குகளுக்கு 5 இலவச பரிவர்த்தனைகளை வழங்குகிறது. இந்த வரம்புக்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும். அதேசமயம், மற்ற வங்கிகளின் ஏடிஎம் கார்டுகளில் இருந்து எஸ்பிஐ ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.20 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும்.

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB)

பஞ்சாப் நேஷனல் வங்கி ஐந்து பரிவர்த்தனைகளுக்குப் பிறகு கட்டணம் வசூலிக்கிறது. இதற்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.10 கட்டணம் செலுத்த வேண்டும். மெட்ரோ நகரங்களில் உள்ள மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் மூன்று இலவச பரிவர்த்தனைகள் மற்றும் மெட்ரோ அல்லாத நகரங்களில் ஐந்து பரிவர்த்தனைகளை PNB வழங்குகிறது. இதற்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க ரூ.21 மற்றும் ஜிஎஸ்டி மற்றும் பிற பரிவர்த்தனைகள் மற்றும் ஜிஎஸ்டிக்கு ரூ.9 செலுத்த வேண்டும்.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி அதன் ஏடிஎம் வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 3 இலவச பரிவர்த்தனைகளை வழங்குகிறது. ஐசிஐசிஐ வங்கி ஒவ்வொரு நிதி அல்லாத பரிவர்த்தனைக்கும் ரூ 8.5 மற்றும் இலவச பரிவர்த்தனை வரம்பு முடிந்த பிறகு ஒவ்வொரு நிதி பரிவர்த்தனைக்கும் ரூ.21 வசூலிக்கிறது.

HDFC வங்கி

HDFC வங்கி ஏடிஎம்களில் மாதத்திற்கு 5 இலவச பரிவர்த்தனைகள். வரம்பை அடைந்த பிறகு, ஒவ்வொரு நிதி அல்லாத பரிவர்த்தனைக்கும் 8.5 ரூபாயும், ஒவ்வொரு நிதி பரிவர்த்தனைக்கும் 21 ரூபாயும் ஏடிஎம்மில் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு நல்ல செய்தி.. விரைவில் டிஏ, விவரம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News